3 முஸ்லிம் தலைவர்கள் இணைந்து, மேற்கொண்டுள்ள அதிமுக்கிய தீர்மானம்

  • September 27, 2019
  • 222
  • Aroos Samsudeen
3 முஸ்லிம் தலைவர்கள் இணைந்து, மேற்கொண்டுள்ள அதிமுக்கிய தீர்மானம்
இஸ்லாத்தின் அழகு முகத்தை தீவிரவாதத்தின் பெயரால் சிதைக்க முயர்ச்சிக்கும் உலக மீடியாக்களின் சதியை முறியடித்து இஸ்லாமிய பிரச்சாரத்தை தீவிர படுத்த பலம் மிக்க புதிய ஆங்கில இஸ்லாமிய சானலை உடனடியாக ஆரம்பிக்க துருக்கி மலைசிய பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் முடிவு
===========================
நேற்று -25- அமெரிக்காவில் முக்கிய மூன்று இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களான
துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான்
மலைசிய பிரதமர் மஹாதிர் முஹம்மத்
பாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான்
ஆகியோரிடையே நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலில் இஸ்லாமிய உலகம் தொடர்ப்பான பல முடிவுகள் எடுக்க பட்டது
.யுத ஆதிக்கத்தில் இயங்கும் உலக மீடியாக்கள் இஸ்லாத்திற்கு எதிராக கடுமையான விமர்ச்சனங்களை முன் வைத்து வருகிறது
இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு இணைத்து பிரச்சாரம் செய்யும் பணியை உலக மீடியாக்கள் முடுக்கி விட்டுள்ளது
அன்பின் மார்க்கம் அமைதியின் மார்க்கம் இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதைக்க முயலும் உலக மீடியாக்களின் முயர்ச்சியை முறியடித்து ஆக வேண்டும் என்றும்
இஸ்லாத்தின் அழகிய தோற்றத்தை உலக மக்களுக்கு சரியாக விளக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்றும்
உடனடியாக இஸ்லாமிய பிரச்சாரத்தை வீரியத்துடன் முன்னெடுக்கும் ஒரு .இஸ்லாமிய பிரச்சார ஆங்கில சானலை துருக்கி மலைசியா பாக்கிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆரம்பிப்பது என்றும்
இந்த சானல் வழியாக இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதைக்க முயர்ச்சிக்கும் பாசிச சக்திகளுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பது என்றும் முடிவு செய்ய பட்டது
இந்த சானல் ..இஸ்லாமிய வரலாறு கலை கலச்சாரம் ஆகியவற்றை எடுத்துரைப்பதோடு இஸ்லாத்திற்கு எதிராக உலக மீடியாக்கள் பரப்பும் பொய் செய்திகளை உடனடியாக கண்டறிந்து அதற்க்கான சரியான விளகத்தை கொடுக்கும் பணியை பிராதன பணியாக எடுத்து செய்லாற்றும் என்றும் அறிவிக்க பட்டிருக்கிறது
Tags :
comments