மாற்றங்களின்றி உத்வேகத்துடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

  • October 7, 2019
  • 97
  • Aroos Samsudeen
மாற்றங்களின்றி உத்வேகத்துடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

லாஹூரில் ஆரம்பித்துள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டிக்காக இணைக்கப்பட்டுள்ள இலங்கை அணியில், முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. அதேநேரம், பாகிஸ்தான் அணியில் பஹீம் அஸ்ரப் மற்றும் இப்திகார் அஹமட் ஆகியோருக்கு பதிலாக வஹாப் ரியாஸ் மற்றும் பக்ஹர் ஷமான் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி
தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, செஹான் ஜயசூரிய, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (அணித் தலைவர்), வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, கசுன் ராஜித, நுவான் பிரதீப்

பாகிஸ்தான் அணி
பக்ஹர் ஷமான், பாபர் அசாம், அஹமட் சேஷாட், உமர் அக்மல், அசிப் அலி, சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாட் வசீம், சதாப் கான், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், வஹாப் ரியாஸ்,

தற்போது இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது. களத்தில் பானுக்க ராஜபக்ஸ மற்றும் சிஹான் ஜெயசூரிய உள்ளனர்.

Tags :
comments