ACMC அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஹம்ஸா கோத்தபாயவுக்கு ஆதரவு

  • October 31, 2019
  • 471
  • Aroos Samsudeen
ACMC அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஹம்ஸா கோத்தபாயவுக்கு ஆதரவு

(என்.சப்னாஸ்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை சபை உறுப்பினர்கள் அஸ்வர், கோவிந்தசாமி மற்றும் சலீம் வட்டானை ஆகியோருடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஹம்ஸாவும் பொதுஜன பெரமுன மொட்டுக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவை கடந்த வாரம் சந்தித்து கோத்தபாய ராஜபக்ஸவுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர். .

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரான ஹம்ஸா கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஒலுவில் பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸ் கடசிக்காக கூடுதலான வாக்குகளைப் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, அக்கறைப்பற்று பிரதேச சபை மக்கள் காங்கிரஸின் ஒரே ஒரு உறுப்பினரும் கட்சி மாறி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags :
comments