இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம்

  • December 6, 2019
  • 148
  • Aroos Samsudeen
இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம்

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை இலங்கை வீரர்கள் பெற்றுத் தந்துள்ளனர்.

ஆண்களுக்கான 100×4 அஞ்சல் ஓட்டப்போட்டியில் இந்த தங்கப்பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஓட்டத் தூரத்தை 39.14 வினாடிகளில் கடந்து புதிய தெற்காசிய சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அஞ்சலோட்ட அணியில் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா 100 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் ஹிமாஷ ஏஷான், ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்ற வினோஜ் சுரன்ஜய ஆகிய இருவருடன், யுபுன் ப்ரியதர்ஷன, சானுக்க சந்தீப ஆகிய இருவரும் இடம்பிடித்திருந்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 39.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (40.5 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.

Tags :
comments