28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை பின்தள்ளி இலங்கை சாதனை

  • December 7, 2019
  • 173
  • Aroos Samsudeen
28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை பின்தள்ளி இலங்கை சாதனை

28 வருடங்களின் பின்னர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் இந்தியாவை பின் தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

இன்றைய தினம் இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்கள் கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் இலங்கை பெற்ற மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

எவ்வாறாயினும், இந்தியா 13 தங்கப்பதக்கங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

அதன்படி, 28 வருடங்களின் பின்னர் இலங்கை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் இந்தியாவை பின் தள்ளி சாதனை படைத்துள்ளது.

1991ம்ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 5 ஆவது தெற்காசியப் போட்டியில்தான் இலங்கை கூடுதலான தங்கப்பதக்கங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அணியில் தமயந்தி தர்சா, சிறியானி குலவன்ஸ,சிறியந்த திஸாநாயக்க, ஜயமினி இலயபெரும,கருணாரத்ன போன்ற வீரா்கள் மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments