போராட்டத்தை நிறுத்த கூடாது – வங்கத்துச் சிங்கம் மம்தா வேண்டுகோள்

  • December 20, 2019
  • 226
  • Aroos Samsudeen
போராட்டத்தை நிறுத்த கூடாது – வங்கத்துச் சிங்கம் மம்தா வேண்டுகோள்
இந்தியாவின் மற்ற பகுதிகளை போன்று மேற்குவங்கத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெறப்படும் வரை மக்கள் தங்களது போராட்டத்தை நிறுத்த கூடாது என்று கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
“நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு, திடீரென்று வந்து நாம் இந்தியர் என்பதை நிரூபிக்க சொல்கிறார்கள். பாஜக நாட்டை பிளவுபடுத்துகிறது” என்று அவர் கூறினார்.
துணிச்சல் இருந்தால் மத்திய அரசு ஐ.நா. கண்காணிப்பில், இந்த குடியுரிமைச் சட்டம் குறித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று சவால் விடுத்தார் மம்தா பானர்ஜி.
Tags :
comments