கட்சித் தாவல் ஆரம்பம்

  • February 2, 2020
  • 462
  • Aroos Samsudeen
கட்சித் தாவல் ஆரம்பம்

அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 5 முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் − தாம் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளை விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு தாவிச் செல்லும் பேச்சுவார்த்தைகளில் தீவிரம் செலுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுன , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குள்ளேயே இந்த கட்சித் தாவல்கள் மாறி மாறி இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

தேசியப் பட்டியலில் இடம் , மாகான சபை வேட்பாளர் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் என்பது தொடர்பில் மட்டுமே இப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

முகா விலிருந்து விலகிய சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் − அடுத்த வாரமளவில் மேற்சொன்ன கட்சியொன்றுடன் இணைந்து பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ( ஏ.எச்.எம்.பூமுதீன் )

Tags :
comments