அட்டாளைச்சேனையில் சர்பான் அமோக வெற்றி

  • February 23, 2020
  • 284
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனையில் சர்பான் அமோக வெற்றி

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவில் போட்டியிட்ட  எச்.எம். சர்பான் 502 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனை அஸ்ரப் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எச்.எம்.சர்பான் சிறந்த விளையாட்டு வீரரும், சமூக சேவையாளருமாவார். பிரதேச வேறுபாடின்றி பெரும்பான்மையான இளைஞர்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளனர்.

வெற்றி பெற்ற சர்பானுக்கு நேற்றிரவு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெரும் வரவேற்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments