தமிழ் மொழி பேசும் பொலிஸார் பற்றாக்குறையால் பொது மக்கள் எதிர்கொள்ளும் அவலநிலை பற்றி சட்டத்தரணி முஷர்ரப் காட்டம்.

  • February 26, 2020
  • 189
  • Aroos Samsudeen
தமிழ் மொழி பேசும் பொலிஸார் பற்றாக்குறையால் பொது மக்கள் எதிர்கொள்ளும் அவலநிலை பற்றி சட்டத்தரணி முஷர்ரப் காட்டம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் மக்களோடு உரையாடும் பொலிஸார்களின்றி பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸாரின்றி மக்கள் அல்லல்படுவதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டதரணியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான முஷர்ரப் முதுநபீன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,
இப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் செரிந்து வாழ்கின்றபடியால் அவர்களுக்கு தமிழ் மொழியில் பிரச்சினைகளை கூறி முறைப்பாடுகளை செய்ய முடியாமையினால் அவர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை.

அத்துடன் இப் பகுதிகளில் பிரஜைகளுகளுக்கு பொலிஸார் கூட்டங்களை நடாத்துகிற பொழுது பொது மக்களுக்கு மொழி தெரியாத காரணத்தினால் பொலிஸ் கூட்டங்களுக்கு செல்வதை பொது மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கடமை புரிந்த தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் மேல் மாகாணத்திலுள்ள கொழுப்பு, நுககோட,கம்பஹா,களனி போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக அக் காலகட்டத்தில் நல்லாட்சியிலிருந்து கொண்டு சமூகத்திற்கு குரல் கொடுப்பதாக கூறிய அம்பாரை மாவட்ட அரசியல்வாதிகளிடம் எடுத்து கூறியும் எதுவித பிரயோசனமும் கிடைக்கவில்லை என பொது மக்கள் தன்னிடம் விமர்சனம் தெரிவித்ததாகவும் முஷர்ரப் தெரிவித்தார்.

மேலும் இவ் அசாதாரன இடமாற்றங்களால் இப் பொலிஸார்களின் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளன. இப் பொலிஸார்களை 30 வருட கால யுத்தத்திற்காக பாவித்துவிட்டு அவர்கள் ஓய்வு பெரும் காலகட்டத்தில் வெகுதூரமான மேல் மாகாணத்திற்கு இடமாற்றியது அசாதாரண விடயமாகும். இது சம்பந்தமாக பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாகவும் முஷர்ரப் குறிப்பிட்டார்.

Tags :
comments