மஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில்  முன்னிலை வகிக்கின்றது.

  • April 29, 2020
  • 328
  • Aroos Samsudeen
மஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில்  முன்னிலை வகிக்கின்றது.
(ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்)
நேற்று  வெளியான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி  கல்முனை மஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில்  முன்னிலை வகிக்கின்றது.
பரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளில் 16 மாணவிகள் 9A சித்தியையும் 13மாணவிகள் 8A+B சித்திகளையும் 04 மாணவிகள்  8A+C சித்திகளையும் பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத்தோற்றிய 345 மாணவிகளில் 87.21வீதமான மாணவிகள் உயர தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.9Aசித்தி பெற்ற 16 மாணவிகளுல் 03 மாணவிகள் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த முறை பரீட்சை முடிவுகளை ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சை முடிவுகள்  12% அதிகரிப்பைத்தந்துள்ளதாகவும் இச்சாதனைகளுக்குச்சொந்தக்காரர்களான மாணவிகளுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ள அதிபர் யூ.எல்.அமீன்  இதற்காக அயராது உழைத்த பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதிதித்தலைவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன் நன்றிகளைத்தெரிவித்துள்ளதோடு கல்லூரியின் பரீட்சைப்பெறுபேறுகள்.நாடளாவிய.ரீதியில் கல்வியின் முன்னேறறத்தில் 0.15% பங்களிப்பை வழங்கியுள்ளமை இக்கல்லூரியின் வரலாற்றில் புதிய அத்தியாயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags :
comments