ரிஷாத் மீதான வசைபாடல் ! அம்பலமானது உண்மைகள்!!

( ஏ.எச். எம்.பூமுதீன்)

அரசியல் அரங்கில் சக்தி மிகுந்த , முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிக செல்வாக்குமிக்க தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இல்லை.

அப்படிப்பட்ட ரிஷாட் பதியுதீன் மீது சேறு பூசி அவரது அந்தஸ்தை , பலத்தை குறைத்து அல்லது அழித்து முழு முஸ்லிம் சமூகத்தையும் நிலை குலையச் செய்யும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் அவ்வப்போது வெவ்வேறு பட்ட தரப்பினர்களால் அரங்கேறி வருவதும் அனைவரும் அறிந்த உண்மைகளாகும்.

ஒரு சில தமிழ் விபச்சார இணைய ஊடகங்கள் இதில் அதிக கரிசனை எடுத்து வந்த நிலையில் தற்போது ஒருசில சிங்கள அரசியல்வாதிகளும் அமைச்சர் ரிஷாதுக்கு சேறு பூச களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைதிரிக்கு பிழையான தகவல்களை ஒப்புவித்து ஜனநாயக விரோத ஆட்சியை மலரவைக்க — அந்த 52 நாட்களை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் எஸ்பி திஸாநாயக்கவும் விமல் வீரவன்ஸவுமே ஆகும்.

52 நாள் ஜனநாயக விரோத ஆட்சியை உயிரோட்டம் செய்ய அமைச்சர் ரிஷாட்டை அவ்விருவரும் அனுகி அதில் மூக்குடைபட்டு போனதன் ஆத்திரமும் பழி தீர்க்கும் முயற்சியும்தான்- ரிஷாட்டை இன்று பயங்கரவாதியாகக் காட்ட எடுத்துவரும் பிரசாரமாகும்.

அமைச்சர் ரிஷாட்டை — இனவாதி என்றார்கள். வடக்கு தமிழ் இனத்தின் துரோகி என்றார்கள். காட்டை அழிக்கிறார், யானைகளை கொல்லுகிறார் என்றார்கள். ஊழல் செய்கிறார் என்றெல்லாம் சேறு பூசி – அவையனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில்தான் இன்று அவரை பயங்கரவாதி என்ற புது மகுடத்தை கையிலெடுத்துள்ளார்கள்.

கொழும்பு தற்கொலை குண்டு சூத்திரதாரி எனக் குறிப்பிடப்படும் கொழும்பு வர்த்தக சங்க தலைவரான இப்ராஹிம் ஹாஜி என்பவர் தலைமையிலான வர்த்தக சங்கம், வர்த்தக அமைச்சர் என்ற வகையில் ரிஷாட் பதியுதீனை சந்தித்தது.

அச்சந்திப்பு புகைப்படத்தை வைத்துக்கொண்டுதான் ரிஷாட்டை பயங்கரவாதி எனக்கூறி சில்லறை அரசியல் செய்ய முனைந்துள்ளனர்.

அதிலொரு வடிவம்தான் அமைச்சர் ரிஷாதின் சகோதரர் கைது என பரப்பப்பட்ட வதந்தியாகும்..

முஸ்லிம்கள் மத்தியிலிருந்தும் – வடக்கு தமிழ், கிறிஸ்தவ மக்களிடமிருந்தும் எப்படியாவது அமைச்சரை தூரப்படுத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே இலக்காகவுள்ளது.

அதற்காக எடுக்கப்பட்ட சகல முன்னெடுப்புக்களும் தோல்வியடைந்து – அடுத்து வரும் நாட்களில் வேறு ஒரு புது தலைப்புடன் மீண்டும் முயற்சிப்பார்கள்.

315 இற்கு மேற்பட்ட போலி முகநூல்களை திறந்து தேரர் ஒருவர் தலைமையில் வசைபாடல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதபோன்று ஒருசில தமிழ் ஊடக விபச்சார இணையங்களும் அதியுச்ச இனவெறியை கக்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் மிகத் துயரங்களை சுமந்தவராக அமைச்சர் ரிஷாட் – கொடூர பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டவராக — சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துபவராக பணியாற்றி வருகின்றார்.

ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் மதவாதிகளினதும் இனவாதிகளினதும் கூக்குரல் இன்னும் ஓய்ந்தபாடுமில்லை அது ஓறப்போவதுமில்லை..

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அல்லாஹ் காப்பாற்றுவானாக..