அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.

  • May 6, 2019
  • 413
  • Aroos Samsudeen
அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.

நீர்கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களின் பின்னர், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக பிரதமரிடம் எச்சரிக்கை விடுத்தாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.

சம்பவம் நடைபெற்றது பற்றி அறிந்த நிமிடத்திலிருந்து, இரவு முழுவதும் அரச மேல் மட்டத்தினருடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது தவிர, இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் அதனை மேலும் மோசமாக்கும் எவ்விதமான கருத்துக்களையும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை.

அத்துடன் நீர்கொழும்பு மக்களின் மனம் புண்படும்படி கருத்து தெரிவித்தாகவும் சிலர் விசமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். கட்சியையும் தலைமைத்துவத்தையும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிடும் நோக்கில் விஷமிகளினால் பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

– ஊடகப்பிரிவு-

Tags :
comments