கல்பிட்டி நகரில் கைதான கர்ப்பிணி பெண்மனி நாளை விடுதலை – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு.

கடந்த ஒரு மாத காலமாக முகத்திரை அணிந்ததன் காரணமாக ICCPR சட்டத்தின் கீழ் கைதான கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் வசிக்கும் கர்ப்பிணித் தாய் நாளை விடுதலை செய்யபடவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அல் ஹாஜ் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் பொலிஸ்மா அதிபருடன் ஏற்படுத்திய விஷேட கலந்துரையாடலின் பின்னர் சட்டத்தரணி பர்மான் காசிம் (Loyer Farman Casim)தலைமையில் அந்த பெண்மணிக்கான பிணை நாளை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் A.R.M. முஸம்மில் இன்று முன்னாள் அமைச்சர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளை முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதே நேரம் அமைச்சர் அவர்களினால் சட்டத்தரணி பர்மான் காசிம் அவர்களோடு தொலைபேசியில் உரையாடும்படி வேண்டியதற்கினங்க நகர அமைப்பாளர் முஸம்மில் சட்டத்தரணி பர்மான் காசிமுடன் தொலைபேசியில் கலந்துறையாடினார்.

அதனடிப்படையில் சட்டத்தரணி பர்மான் காசிம் நாளை அந்தப்பெண் பினையில் விடிவிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் மூலமாக கல்பிட்டி OICயுடன் தொர்புகொண்டு அப்பெண் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு இன்னும் 500 பேர்வரை கைது செய்யப்பட்டவர்கள் இருப்பதாகவும் கூடிய சீக்கிரமே அவர்களையும் விடுதலை செய்வதாக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணியிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஆவணங்களை தயார் செய்யும்படியும் பொலிஸ்மா அதிபர் தன்னிடம் கூறியதாகவும் சட்டத்தரணி பர்மான் காசிம் கல்பிட்டி நகர அமைப்பாளர் A.R.M.முஸம்மில் அவர்களோடு தொலைபேசிவாயிலாக குறிப்பிட்டார்.