அரபு மொழிக்கு எதிராக சுற்றுநிரூபம் வெளியிடும் அரசுக்கு தொடர்ந்து முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டுமா?

(மருதூர் ஸக்கீ செய்ன்)

தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அரபு மொழிக்கு எதிரான சுற்று நிரூபம் வெளியிட்டுள்ளார் இந்த சுற்று நிரூபம் வெளியிடும் வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மயக்கத்தில் இருந்தார்களா?

அல்லது குறைந்தபட்சம் மனோ கணேசன் அமைச்சர் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் சுற்று நிறுவனம் தொடர்பாக கலந்துரையாடி இருக்க வேண்டும் அரசின் பங்காளியாக இருக்கின்றவர்கள் ஏன் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒரு சுற்று நிரூபம் வெளியிடும்போது கலந்துரையாடவில்லை.

நாட்டில் சீன மொழி தொடர்பான பல பெயர்ப் பலகைகள் காணப்படுகிறது தமிழ், சிங்கள, ஆங்கில ,மொழியில் தவிர்ந்த ஏனைய மொழிகளுக்கு தடை என்று சுற்று நிரூபம் வெளியிடப் பட்டிருந்தால் பிரச்சினையில்லை அரபு மொழி என்று குறிப்பிட்டு சுற்றுநிருபம் வெளியிடுவதற்கான காரணம் என்ன?

அரபு மொழி தடை தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடுவதற்கான காரணம் என்ன?
யார் இவ்வாறான சுற்றுநிருபத்தை வெளியிட சொன்னது?

பயங்கரவாதிகளுக்கும் அரபு மொழி தடைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?

LTTE பயங்கரவாதிகள் தமிழ் மொழி பேசினார்கள் அதற்காக தமிழ் மொழி தடை செய்யப்பட்டதா?

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இலங்கை வரலாற்றில் இது வரை தடை செய்யப் படாத அரபு மொழி விசேடமாக தற்பொழுது தடை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன?

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் ஐ எஸ், அல்கொய்தா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது அதற்காக அரபு மொழி எங்கும் தடை செய்யப்படவில்லை.

அரபு மொழிக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்

முஸ்லிம் அரசியல் தலைவர்களே உடனடியாக அரபு மொழிக்கு எதிரான தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நீங்கள்அவசரமாக செய்ய வேண்டும்

ஏனென்றால் இதற்கு முன் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் இவ்வாறான ஒரு சுற்று நிரூவம் வெளியிடவில்லை நல்லாட்சி அரசாங்கம் என்று எம்மால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக நீங்கள் தொடர்ந்து இருக்கும் பொழுது அரபு மொழிக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து வெளியிடப் படுவதை உங்களால் நிறுத்தப்பட வேண்டும்

மேலும் பிரதமருடன் கண்டிப்பான உத்தரவை விடுங்கள் ஏனைய அமைச்சர்களுக்கு கட்டளை விடும் படி முஸ்லிம் சமூகம் தொடர்பான ஏதாவது சுற்றுநிரூபம் வெளியீடு செய்வது என்றால் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின் வெளியிட வேண்டும்

உங்களால் முஸ்லிம் சமூகம் தொடர்பான ஜனநாயக ரீதியான உரிமைகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசை விட்டு வெளியேறிய பாராளுமன்றத்தில் சுயமாக இயங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை அமையுங்கள்

பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் இல்லாவிட்டால் எம் சமூகத்தின் தலையில் அடிமை சாசனம் எழுதப்பட்ட அடிமைகளாக இந்த நாட்டில் வாழ வேண்டிய சூழல் உருவாக்கப்படும் என்பதில் ஐயமில்லை!