அரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா

  • June 12, 2019
  • 2615
  • Aroos Samsudeen
அரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா

அரபு மொழியை தடைசெய்ய சம்மந்தப்பட்ட அமைச்சர் இதன் பாரதூரம் அறியாமல் இனவாத போக்கு காரணமாக இந்த தடையை செய்தார். இதன் காரணமாகவே நான் இவ்வமைச்சுக்கு கீழ் இருந்த உயர்பதவியையும் விட்டு 10ம் திகதி வெளியேறினேன் என்று இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தன் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தன் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி களம் பெஸ்ட் செய்திக்கான பின்னூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஹீட் எம். றிஸ்மி முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் சமூக முன்னடுப்புக்களில் மிகுந்த அக்கரையுடன் பல வேலைத்திட்டங்களை முன்னடுத்தவராவார்.

Tags :
comments