உபசரிப்பின் இலக்கியம் ரிஷாத்!

வளமற்ற சூழ் நிலையில் வளர்ந்தவனே!

வறியோரின் கைகளிலே தவழ்பவனே!

மானிடத்தின் உயர்ச்சிக்காய் உழைப்பவனே!

அகதிகளின் வரைவிலக்கணத்தை உணர்ந்து மூவின மக்களின் மூச்சாக நடப்பவனே!

பாயும் நதியே! பகலிரவாய் வீசும் காற்றே!

வாழ்க்கை மேடைகளில் வறிய குடும்பங்களின் தொல்லைகளைத் தொலைத்த அரசியல் ஆசானே!

வட புலத்து மக்களின் கண்ணீர் வெப்பத்தைத் தணிக்க வைத்த தங்கத் தலைவனே!

புறக்கணிப்பு வேசங்கள் புளிதி படர்ந்த கோசங்கள் உன்னில் எத்தனை முறை கற்களை வீசினாலும் அது தாயுப் நகராகத்தானிருக்கும்!

மிக உயர்ந்த புஷ்ப வளாகமெனும் தாரா புரத்தில் சமூகத்திற்கென அரளிப் பூவாய் அழுது பிறந்தவனே!

சமூகம் தூங்கிக் கொண்டிருக்கும் போது சமூகத்திற்காய் நீ விழித்துக் கொண்டிக்கிறாய்!

தண்ணீர் கேட்டு கடலோடு சண்டை பிடிக்கிறார்கள் அயோக்கிய அரசியல்வாதிகள் நீயோ இறை வாசத்தோடு ஆகாயத்தை அண்ணிர்ந்து பார்த்து சமூக மாற்றத்தை கொண்டு வருகிறாய்.

மக்கள் விழிக் காவியத்தில் மாபெரிய தலைவனாக தோன்றி வந்தவனே!

உனது அரசியல் நீதி நிலைத்து நிற்பதற்காய் நிழல் கொண்ட இடத்தில் சூரியனோடும் சுதந்திர ஒப்பந்தம் செய்வோம்.

நாளை அமைதியான பொழுது விடியட்டும்

அன்புடன்

கவிஞர் கால்தீன்.