இனவாத மோதல்களின் பின்னால், பொதுபலசேனா இருக்குமாயின் பின்னணியில் கோத்தபாய இருப்பார் – எஸ்.பி.

  • June 16, 2019
  • 862
  • Aroos Samsudeen
இனவாத மோதல்களின் பின்னால், பொதுபலசேனா இருக்குமாயின் பின்னணியில் கோத்தபாய இருப்பார் – எஸ்.பி.
சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை மதத்தினரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு தூர விலக செய்தவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் வைபவம் ஒன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே எஸ்.பி.திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோத்தபாய ராஜபக்சவின் இனவாத மற்றும் மதவாத நிலைப்பாடுகளை அன்று போல் இன்றும் நிராகரிக்கின்றேன்.
நாட்டில் தற்போது நடைபெறும் இனவாத மோதல்களின் பின்னால், பொதுபலசேனா இருக்குமாயின் அதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே இருப்பார் என தெரிவித்துள்ளார்.
எனினும் போரில் செய்த பணிக்காக அவர் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments