கடந்த 22 ம் திகதி காலை 11.50 மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது காரைதீவு சந்தியில் வைத்து பொலிசாரால் வாகனங்கள் மறிக்கப்படுகின்றன.
எதிரே முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் களுக்கு பாதுகாப்பாக ஸைரன்ஸ் ஒலி எழுப்பிக்கொண்டு செல்லும் போக்குவரத்து பொலிஸார் முன்னால் செல்ல பின்னால் நான்கு பிராடோ வாகனங்கள் அதிலிருந்து ஏழு அல்லது எட்டு பிக்குகள் இறங்குகின்றனர்.
அவர்களில் ஒருவர் ஞான சார மற்றவர், சிங்கள ராவய தலைவர், ராவண பலய தலைவர் என பலர் இறங்குகின்றனர்.நான் மலைத்துப் போனேன்.ஒரு குற்றவாளிக்கா இவ்வளவு இராஜமரியாதை, நீதிமன்றத்தை அவமதிக்கும் எல்லோருக்கும் இந்த மரியாதை கிடைக்குமா என நினைக்கிறேன்.
உண்மையில் இவ்வாறான இராஜமரியாதை பிரதமர், அமைச்சர்கள், ராஜதந்திரிகள் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன்.ஆனால் பிக்குகள் சிலருக்கு இவ்வளவு இராஜமரியாதையை அன்று தான் பார்த்தேன்.
பௌத்த மகா நிக்காய தலைவர்கள் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட தைக் கூட நான் காணவில்லை.இக்குற்றவாளிக்கு இப்பாதுகாப்பை வழங்க உத்தரவிட்ட அதிகாரி யார் என்பதை தகவலறிதல் சட்டத்திற்கமைய அறிய முற்பட வேண்டும்.
என்னதான் இந்த நாட்டில் நடக்குது? .காவிகளின் ஆட்சிக்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதா?
(சிரேஸ்ட ஊடகவியலாளர் முகம்மட் முக்தார் அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து)