பியர் குடிக்கும் பெண்கள் அதிகரித்துவிட்டனர் – ஜனாதிபதி கவலை

  • July 1, 2019
  • 159
  • Aroos Samsudeen
பியர் குடிக்கும் பெண்கள் அதிகரித்துவிட்டனர் – ஜனாதிபதி கவலை
பெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார்.
இன்று -01- கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Tags :
comments