நாட்டின் மிகப்பெரும் கிருமி, ரத்ன தேரர்

  • July 2, 2019
  • 190
  • Aroos Samsudeen
நாட்டின் மிகப்பெரும் கிருமி, ரத்ன தேரர்
ரதன தேரர் தான் இன்று நாட்டிலுள்ள மிகப் பெரிய கிருமியாக மாறியுள்ளார் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லையென சி.ஐ.டி. அறிக்கை கூறியுள்ளது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன என செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதில் வழங்கியுள்ள அவர்,
அத்துரலிய ரதன தேரர் நாட்டில் முன்னெடுத்துச் சென்ற மிகப் பெரிய பிரச்சாரம் பொய் என்பது மக்களுக்கு தெளிவாகியுள்ளதாகவும், இன்னும் 10 நாட்களில் ரத்ன தேரர் எங்கு இருக்கின்றார் என்பது நாட்டிற்குத் தெரியவரும்.
ரதன தேரர் தான் இன்று நாட்டிலுள்ள மிகப் பெரிய கிருமியாக மாறியுள்ளார். ரதன தேரர் தற்பொழுது தேசிய தலைவராக ஆகியுள்ளார்.
ரதன தேரர் யாழ். மக்களுக்கு தீர்வு வழங்குகின்றார். ஆனால், ரதன தேரரினால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றார்.
Tags :
comments