நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு

  • July 11, 2019
  • 117
  • Aroos Samsudeen
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகத் தெரிவித்து மக்கள் விடுதலை முண்ணனி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய விவாதங்களின் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகியன அறிவித்துள்ளன.

Tags :
comments