ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்காக மஹிந்த ராஜபக்ஸவின் காலில் தவம் கிடந்தபோதும் எமது கட்சித் தலைவரின் உறுதியான நிலைப்பாட்டினால்தான் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார்.
நேற்றிரவு அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால முன்னடுப்புகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அப்துல்லா மஹ்றுப் தெரிவித்தார்.