பிரச்சினைகுரிய மக்களை திருப்திப்படுத்த ஆட்சியை கடிந்து கொள்வது சந்தர்பவாத அரசியலாகும்-அஸ்மி ஏ கபூர்

Image title

(அஸ்மி ஏ கபூர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்)

முஸ்லீம் சமூகம் ஒட்டுமொத்தமாக தனது வாக்கு பலத்தை பயன்படுத்தி உருவாக்கிய நல்லாட்சி அரசுக்கு ஒரு வருடகாலம் நிறைவு பெறும் தருணத்தில் அந்த சமூகத்தினுடைய எந்த ஒரு அபிலாசையும் நிறைவேற்றபடவில்லை

என்பதானதும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரளவு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்பதும் நல்லாட்சியினை பெறுத்த விடயமல்ல.

அதனை பெற்றுக்கொள்ள அந்தந்த சமுகம்சார் தலைவர்களும், பிரச்சினைக்குரிய பிரதேசங்களின் பிரதிநிதிகளும் எவ்வாறான முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள் என்பதிலே தங்கி இருக்கிறது.வெறுமனே

பிரச்சினைகுரிய மக்களை திருப்திப்படுத்த ஆட்சியை கடிந்து கொள்வது சந்தர்பவாத அரசியலாகும்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் உரிய முறையிலே அனுகி சர்வதேச புலம்பெயர் மக்களுடைய செல்வாக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிய முறையிலே செயலாற்றி வருகிறார்கள். அவர்களது செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல்கள், செயலாற்றுகின்ற விதம் வெளிப்படையானது. அவர்களது சமுகத்துக்காக பேசுகிறார்கள். ஓரளவெனும் அவை நடைமுறைப்

படுத்தப்படுகிறது.இன்று நல்லாட்சி யில் முஸ்லீம்களின் புறக்கணிப்பு தொடர்பான

பேசுகிறார்கள்.தேசியபட்டியலுக்காக, அமைச்சு பதவிக்காக, ஜனாதிபதி, பிரதமரை, சந்தித்ததை தவிர வேறு என்ன

மக்களுடைய பிரச்சினைகாக சந்தித்திருக்கிறார்கள்.இதற்க்கு ஒரு உதாரணமாக அண்மையில் அம்பாரைக்கு

விஜயம் மேற் கொண்ட ஒரு முஸ்லீம்கட்சியினுடைய தலைவரை

வட்டமடு விவசாயிகள் சந்தித்த போது

ஜனாதிபதியிடம் இது தொடர்பாக பேசுவேன் என்று கூறியிருப்பதானது இன்னும் இது தொடர்பாக எதுவும் நிகழவில்லை என்பதாகும். கடந்த ஆட்சியின் போது நிர்க்கதிக்குள்ளான விவசாயிகள் என்று கூறுவதால் ஒன்றும் நிகழாது.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எதை எமது தலைவர்கள் மேற் கொள்கிறார்கள்

என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இருக்கிறது அதை உரிய முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தலைவர்களே முயல வேண்டும்.அல்லது எந்தந்த வகையில் முயற்சிகள் மேற் கொண்டு நல்லாட்சி

நடைமுறைப்படுத்த வில்லை என்பதை

கூற வேண்டும். வேறுமனே நல்லாட்சியில் ஒன்றும் நிகழவில்லை

என்பது மக்களை பூச்சியத்தால் பெருக்குகின்ற சந்தர்ப்பவாத அரசியலாகும். முதலாவதாக எமது தலைவர்கள் முஸ்லீம் மக்களினுடைய ஆயிரக்கனக்கான ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் வசமிருப்பது தொடர்பில் மேற் கொண்ட நடவடிக்கை என்ன?

பொத்துவில், வட்டமடு, திருகோணமலை மாவட்ட புல் மோட்டை மட்டக்களப்பு மாவட்ட காணிகள் தொடர்பில் அரச உயர்மட்டத்தினரிடம் இவர்கள் எத்தனை முறை பேசியிருக்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி யின் தலைவரிடம் பேசியிருக்கிறார்களா? மகிந்த அரசில் அதிகமான வாழ்வாதரமும், அபிவிருத்திகளும் இடம்பெற்றன.இதை விட அதிகமான சீமந்து பைக்கற்றுகளும் வழங்கப்பட்டன.என்பதையும் எமது தலைவர்கள் மறந்து விட வேண்டாம். எனவே உங்களது முயற்சி சரிவராமல்

போகுமானால் ஆட்சியை குறை கூறுங்கள். முயற்சியே செய்யாமல் சந்தர்பவாத அரசியலுக்காக ஆட்சியாளர்களை குறை கூற வேண்டாம்.

நல்லாட்சியில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

Image title

(எம்.ஐ.எம்.றியாஸ்)

ஒரு வார காலத்திற்கு நாட்டில் நல்லாட்சியைக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். நாமும் கொண்டாட முயற்சிப்போம்.ஆனால், இந்நல்லாட்சியில் தமிழ் சமூகமும், மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் குறைவானது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இறக்காமம்வாங்காம் பிரதேச விவசாயிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

வடக்குக் கிழக்கில் தமிழ் சமூகத்தின் இயல்பு வாழ்விற்குத் தடையாக இருந்த இராணுவக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.யுத்த காலத்தில் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்படிப்படியாகவிடுவிக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர்தமிழர்களை முன்னிலைப்படுத்தி வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின்தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வ தீர்வு வழங்கும் பொருட்டு யாப்பு மாற்றம் கொண்டுவரும்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று, மலையக சமூகத்திற்கான வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த பாரிய அனுகூலங்கள் என்று குறிப்பிட்டுக் கூறுமளவு எதுவும் இல்லை. கிழக்கில் மாத்திரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 20,000 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களால் கையக்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இன்னும் ஒரு இஞ்சி நிலம் கூட விடுவிக்கப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் வசித்து வந்த பூர்வீகக் காணிகள், யுத்தத்தினால் அவர்கள் குடிபெயர்ந்த பின்னர் காடுகளாக மாறியிருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்து குடியேறுவதிலிருந்தும் தடுக்கப்படுகின்றனர். மட்டக்களப்பில் மாத்திரம் சுமார் பதினைந்து கிராமங்கள் இவ்வாறு இருக்கின்றன. முஸ்லிம்களின்பாரம்பரிய விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு முடியாமல் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தடுக்கப்படுகின்றனர்.

பொத்துவில் பிரதேச முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமான லாஹுகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்தல் கண்ட பள்ளியடி வட்டையில் அமைந்துள்ள சுமார் 127 ஏக்கர் விவசாயக் காணிகளில்கடந்த பெரும் போக விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தப் பெரும் போகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பொத்துவில்விவசாயிகளுக்குச் சொந்தமான கிராங்கோமாரி விவசாயக் காணிகளின் பிரச்சினை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான வட்டமடு விவசாயக் காணிகளின் பிரச்சினை,அட்டாளைச்சேனை அஷ்ரப் நகர் விவசாயக் காணிகள் பிரச்சினை, சம்மாந்துறை கரங்கா வட்டை விவசாயக் காணிகள் பிரச்சினை, புல்மோட்டை அரிசிமலை நிலப்பிரச்சினை, தோப்பூர் குடியேற்ற நிலப்பிரச்சினை என எந்தப்பிரச்சினைக்கும் முஸ்லிம்களுக்கு இது வரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே,இந்நல்லாட்சியில் தமிழ் சமூகமும், மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் என்ன என்பதை கனத்த இதயத்தோடு நான் கேள்வியாகக்கேட்க விரும்புகிறேன் எனவும் அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.

நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை உழியர்களின் சத்தியபிரமாண நிகழ்வு

Image title

(றிசாத் ஏ காதர்)

அட்டாளைச்சேனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் 2016ஆம் ஆண்டுக்கான புதுவருட நிகழ்வு (2016.01.01) இன்று நிலைய பொறுப்பதிகாரி பொறியியலாளர் யு.எல்.சி. பாவா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய அரசாங்கத்தின் அரச ஊழியர்களுக்கான கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் விசேடமாக இந்நிகழ்வில் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Image title

Image title

Image title

றிசாத் விவாதம் செய்யமுன் Call எடுத்த மைத்திரி, விவாதத்தின் பின் புகழ்ந்தார்

Image title

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், சாகல தேரருக்கும் இடையே ஹிரு தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றதை நாம் அறிவோம்..!

அந்த விவாதத்தை தடுத்துநிறுத்த பல உயர்மட்டங்கள் முயற்சித்ததையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் 28-12-2015 திங்கட்கிழமை அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத்திற்கு சில தடவைகள் தொலைபேசி அழைப்பெடுத்த விடயம் இணையயங்களிற்கு கிடைத்தது.

குறித்த விவாதத்தில் றிசாத் பதியுதீனை பங்குபற்றாமல் இருக்கச்செய்ய முயற்சி மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதியிடமிருந்து இந்த தொலைபேசி அழைபுக்கள் சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.

அதேவேளை 29-12-2015 செவ்வாய்கிழமை காலை வேளையில், அமைச்சர் றிசாத்தின் அமைச்சு பற்றிய நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்றுள்ளார். இதன்போது தாம் றிசாத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்த எடுத்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனக்கு நெருக்கமானவர் என்றும், கடந்த காலங்களில் அவருக்கு வழஙகப்பட்ட அமைச்சை செவ்வனே செய்ததாகவும், தற்போதும் அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சை திறம்பட வழிநடத்துவதாகவும் புகழ்ந்துள்ளார்.

அத்துடன் தாம் அமைச்சர் றிசாத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமானது- முபாறக் அப்துல் மஜீத்

Image title

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் நடைபெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆனந்த சாகர தொலைக்காட்சி விவாதம் மூலம் அமைச்சர் ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதுடன் இது விடயத்தில் துணிச்சலாக தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர் ரிசாதை உலமா கட்சி முஸ்லிம் சமூகம் சார்பாக பெரிதும் பாராட்டுகிறது.

வில்பத்துவில் அத்து மீறிய குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்பதை அமைச்சர் மிகத்தெளிவாக நிரூபித்தார். அமைச்சர் போதை வஸ்த்து வியாபாரம் செய்வதாக கூறியமை தேரரின் பொய்க்குற்றச்சாட்டு என்பது அதற்கான எத்தகைய சான்றுகளையும் அவர் முன்வைக்காமை மூலம் நிரூபணமானது. ஒரு முஸ்லிம் தனது உடமைக்காக மட்டுமல்ல தனது தன்மானத்துக்காகவும் போராட வேண்டியது அவன் மீது கடமையாகும். அந்த வகையில் தனது உரிமையை வீறு கொண்டு நிரூபித்த அமைச்சர் ரிசாத் பதியுதீனின் திறமை எதிர்கால இளைஞர்களுக்கு நல்லதொரு தைரியத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது எனலாம்.

2005ம் ஆண்டு உருவான உலமா கட்சி தனிக்கட்சியாகவே செயற்பட்டு வருகிறது. எந்த முஸ்லிம் கட்சியுடனும் இரண்டற கலக்கவில்லை. ஆனால் 2010ம் ஆண்டு அமைச்சர் ரிசாத் சிறந்த அரசியல் தலைவர் என்பதை முதலில் இனம்கண்ட முஸ்லிம் கட்சி என்றால் உலமா கட்சி மட்டுமேயாகும். அதனால் அவரது கட்சியுடன் உலமா கட்சி இணைந்து செயற்பட்டதுடன்; அவரின் கட்சி பாரிய அளவில் வலுப்பெற ஒத்துழைத்தது. சில புரிந்துணர்வுகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 2012ல் உலமா கட்சி, அமைச்சர் ரிசாதிடமிருந்து கவுரமாக வெளியேறியது.

ஆனாலும் அவரது செயற்பாடுகளில் நல்லவற்றுக்கு ஆதரவு வழங்க தவறவில்லை. இந்த வகையில் தற்போதைய சூழலில் அமைச்சர் ரிசாதின் கைகளை பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு இலங்கை முஸ்லிமினதும் கடமையாக உலமா கட்சி பார்க்கிறது.; கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அமைச்சர் ரிசாத் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும், வட புல முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.

களம் பெஸ்டின் மூன்றாவது ஆண்டு நிறைவும் தமிழ் சொல்லித்தந்த ஆசான்கள் கௌரவிப்பும்

Image title

(ஏ.அர்சாத்)

களம் பெஸ்ட் இணையத்தளத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவும் தமிழ் சொல்லித்தந்த அசான்கள் கௌரவிப்பும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பப் பகுதியில் நடைபெறவுள்ளதாக செய்திப்பிரிவின் உதவி ஆசிரியர் எஸ்.பர்சான் தெரிவித்தார்.

வளரச்சி கண்டு வரும் இணையத்தள ஊடக வலையமைப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட களம் பெஸ்ட் பல்வேறு பட்ட செய்திகளையும் மக்கள் கத்துக்களையும் பதிவேற்றம் செய்திருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாக வலம் வந்து கொண்டிருக்கும் களம் பெஸ்ட் இணையத்தளம் தனித்துவமான பாணியில் நம்மவர்களை முதன்மைப்படுத்தி சமூகத்திற்கான முன்னடுப்புக்களைச் செய்து வருகின்றது.

களம் பெஸ்டின் வளர்ச்சியில் பங்கு வகித்த செய்திப்பிரிவினர், பிராந்திய செய்தியாளர்கள், விளம்பரதாரா்கள், வாசகர்கள் ஆகியோர்கள் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வுகளில் நமது பிராந்தியத்தின் அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் அதிதிகளாக கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர் ஹக்கீமின் அமைச்சுப் பதவி கைமாறுகின்றது?

Image title

நிதி அமைச்சுப் பொறுப்பு கபிர் ஹாசிமிற்கு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் இவ்வாறு நிதி அமைச்சுப் பொறுப்பு ஹாசிமிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிதி அமைச்சராக கடமையாற்றி வரும் கருணாநாயக்கவிற்கு வர்த்தக அல்லது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுப் பதவி வழங்கப்படம் என குறிப்பிடப்படுகிறது.

பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு வேறும் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு நகர திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சு மாத்திரம் வழங்கப்பட்டு பதவி குறைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சமூகத்தின் பொறுப்புமிக்க செயலே ஆனந்த தேரருடனான விவாதம்- முஹம்மத் அன்வர்

Image title

(முஹம்மத் அன்வர் – இளைஞர் அமைப்பாளர்.அ.இ.ம.கா)

எல்லாப் புகழும் படைத்தவன் ஒருவனுக்கே. இலங்கைத் திருநாட்டின் முஸ்லீம்களின் வரலாற்றில் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சோம தேரருடன் நடத்திய விவாதம் முஸ்லீம் சமூகத்தின் மூலை முடுக்குகளில் எந்தளவு முஸ்லீம்களின் சுதந்திரக் குரலாக ஒலித்ததோ, அதே போன்று இன்று இந்த சமூகத்தின் மீது வாஞ்சை கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்திதான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் ஆனந்த தேரருடன் நடத்தும் நேருக்கு நேரான கலந்துரையாடல்.

இது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம், முஸ்லீம்கள் மீது காலாகாலமாக கட்டவிழ்த்து விடப்படுகின்ற பேரினவாத பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தமாகவே இன்று எமது சமூகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது தேசியத் தலைமையின் வெற்றி எமது சமூகத்தின் வெற்றியாகவே நாம் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக நாம் இன்றைய எல்லா பர்ளுத் தொழுகைகளின் பின்னும் இறைவனை வெற்றிக்காக வல்ல நாயனிடம் துஆச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சமூகத்தின் விடுதலைக்காய் போராடும் ஒரு தலைமைக்கு அச்சமூகத்தின் எல்லாப்பரப்புகளில் இருந்தும் நம்மாலியன்ற உதவிகளை செய்வது சமூகத்தை நேசிப்போரின் கடமை, உபத்திரவம் செய்யாமலிருப்பது அதில் கடை நிலை. ஆனால் தமது வங்குரோத்தை மறைக்க, கருத்திலாத பதர்கள் மூலமான கருத்தை சமூகத்திடம் திணிப்பது சமூகத்துரோகமாகவே சமூகம் இனங்கண்டுள்ளது. தமது விசுவாசத்தையும், எதிர்காலப் பதவிகளையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் சமூகத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு செய்திதான் இது. முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்தும் எளிய செயலாகவும் இதனைக் கொள்ளலாம்.

ஆனந்த தேரரின் அப்பட்டமான குற்றச்சாட்டுகள் சிங்கள சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் பரப்பப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் பற்றிய பிழையான ஒரு கண்ணோட்டத்தினை அடிப்படையாக கொண்டே இக்குற்றச்சாட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தனியே வில்பத்து விவகாரமாக இதனைக் கொள்வது, அரசியல் அறியாமை என்றே கொள்ளப்பட வேண்டும்.

நிரந்தராமாக இலங்கை வாழ் முஸ்லீம்களை ஏனைய சமூகங்களிடம் இருந்து தனிமைப்படுத்தி எமது நாட்டில் இருந்து இல்லாதொழிக்கும் கைங்காரியத்தின் தொடர்நிலை நிகழ்வாகவே நாம் இதனைக் கொள்ளவேண்டியுள்ளது.வில்பத்து விவகாரம் தொடர்பில் மிக ஆதாரபூர்வமான பல்வேறு சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசம் ஒரு மீள் குடியேற்றம் என்பதில் மாற்றம் கிடையாது. அத்துடன் இதில் தனியே ரிஷாத் என்ற நபரின் மானம், கொள்கை, நம்பிக்கை சம்பத்தப்படவில்லை.

முழுச்சமூகத்தின் மீதான ஒரு சதிவலையே, மாய வலையாய் எம்மீது போர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்த மதத்தை நாம் மதிக்கின்றமைக்கான வெளிப்படையும், சிங்கள மக்களிடம் இருந்து முஸ்லீம் சமூகத்திற்கு தேவையான ஆத்மார்த்த ரீதியிலான ஆதரவை பெற்றுக் கொள்வதற்குமான இம்முயற்சி, இந்தப் பொறுப்பு தேசியத் தலைவர் ரிஷாத் பதுர்தீன் அவர்களின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லீம்களில் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தலைமை தற்காலத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் எமது மக்களுக்காக என்றும் களத்தில் இருப்பது அவர்மீதான முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்குகிறது. சமகாலத்தில் முழு இலங்கை முஸ்லீம்களும் அவரது தலைமையின் கீழ் அணிதிரளும் நாள் வெகு தூரத்திலில்லை. எல்லாவற்றிக்கும் இறைவன் போதுமானவன். நாம் வெற்றிக்காக பிரார்த்திக்கின்றோம்.