நுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு

(அகமட் எஸ். முகைடீன், பாறூக் சிஹான்)

நவநாகரிக ஆடைகளின் சம்ராஜ்யமாக திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தினால் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பினருக்கு (நுஜா) ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ,ன்று (18) சனிக்கிழமை அஸ்லம் பிக் மார்ட் நிறுவன முன்றலில் நடைபெற்றது.

அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.பி.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ. மஜீத், பொருளாளர் சுல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் (நுஜா) உறுப்பினர்களுக்கு ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தின் 50 வீத விலைக் கழிவுக்கான கூப்பன் வழங்கிவைக்கப்பட்டன.

ஊடகவியலாளர்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜின் மகோன்னத சேவையினை நுஜா ஊடக அமைப்பினர் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

நடப்பு சம்பியனை வீழ்த்தி மேல் மாகாண மத்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (21) நடைபெற்றன. இந்த போட்டிகளுடன் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் முடிவுற்றதோடு எதிர்வரும் சனிக்கிழமை (23) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மேல் மாகாண மத்திய அணியை மேல் மாகாண வடக்கு அணி எதிர்கொள்ளவுள்ளது.

கிழக்கு மாகாணம் எதிர் ஊவா மாகாணம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் ஊவா மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது.

 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 45.4 ஓவர்களுக்கு 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான கவிந்து லக்ஷித சிறப்பாக ஆடி 48 ஓட்டங்களை குவித்தார்.

ஊவா மாகாணம் சார்பில் பந்துவீச்சில் ஷேதக்க தெனுவன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ரந்துனு கங்கானாத் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஊவா மாகாண அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் – 171 (45.2) – கவிந்து லக்ஷித்த 48, ஷேதக்க தெனுவன் 3/19, ரன்துனு கங்கானாத் 2/21

ஊவா மாகாணம் – 13/0 (2.1)

முடிவு – முடிவு இல்லை (No Result)

மேல் மாகாணம் மத்திய எதிர் தென் மாகாணம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சம்பியன் தென் மாகாண அணியை 2 விக்கெட்டுகளால் போராடி வீழ்த்திய மேல் மாகாண மத்திய அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எனினும் தென் மாகாண அணிக்காக சதுன் மெண்டிஸ் அபார துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 80 ஓட்டங்களை பெற்றதோடு அவர் இந்த தொடர் முழுவதிலும் சோபித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென் மாகாண அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சதுன் மெண்டிஸ் தனது 80 ஓட்டங்களை பெற 94 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். இவரைத் தவிர, வினுர துல்சர 86 பந்துகளுக்கு முகம்கொடுத்து 44 ஓட்டங்களைப் பெற்றார்.

கொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்து விஜேசிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அஷேன் டானியல் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி இலக்கை எட்ட போராட வேண்டி ஏற்பட்டது. கலண பெரேரா (33*) மற்றும் துனித் வெல்லாலகே (27*) கடைசி வரை போராடி மேல் மாகாண மத்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

இதன் மூலம் அந்த அணி 48.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 198 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வெற்றியுடன் மேல் மாகாண வடக்கு அணியுடனான இறுதிப் போட்டிக்கு மேல் மாகாண மத்திய அணி தெரிவானது.

போட்டியின் சுருக்கம்

தென் மாகாணம் – 197 (49.4) – சதுன் மெண்டிஸ் 80, வினுர துல்சர 44, நிபுன் மாலிங்க 26, சமிந்து விஜேசிங்க 4/44, அஷேன் டானியல் 3/37, சந்தூஷ் குணதிலக்க 2/14

மேல் மாகாணம் மத்திய – 198/8 (48.4) – சிதார ஹபுஹின்ன 31, கமில் மிஷார 25, பசிந்து சூரியபண்டார 31, ஷேனால் தங்கல்ல 24, கலண பெரேரா 33*, துனித் வெல்லாலகே 27*, சதுன் மெண்டிஸ் 33/3

முடிவு – மேல் மாகாண மத்திய 2 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான திலங்க சுமதிபால கடந்த 20 ஆம் திகதி தெரிவித்தார்.

எனினும், நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் பொதுக்கூட்டம் நடத்தப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதனை இரத்து செய்வதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பேச்சாளர்  களம் பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் தேர்தலை நடத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள்

Image title

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் வைப்பு செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஏ.டி.எம். நிலையங்களில் நாளை புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்கள்; வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.

காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை பெற்றுச் செல்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் தாள்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தாள்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுத்­தி­க­ரிப்­பாளராக தொழிலை ஆரம்­பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி

Image title

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

நேர்­காணல்: இனோகா பெரேரா பண்­டார

தமிழில்: ஒகொ­ட­பொல றினூஸா

காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரிக்கு வரும்­போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்­தான்­கு­டியில் இருந்து முதன்­மு­றை­யாக சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­கின்­ற­போது இவர் வலி­மை­மிக்க ஓர் இளைஞர். வர்த்­தக அறிவும், மாறு­பட்ட கோணத்தில் சிந்­திக்கும் இயல்பும் இவ­ருடன் கூடவே பிறந்த திறன்­க­ளாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்­சலால்’ முதிர்ச்­சி­ய­டைந்து சாதித்­த­வ­ரான N.L.M. முபாறக், ஒரு புது­மை­யான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்­றி­யது இந்தப் புது­மை­யான மனி­த­ரி­டத்­தி­லி­ருந்தே. இந்த வடி­வ­மைப்­பா­ள­ரி­ட­மி­ருந்தே.

மிகவும் பரந்­த­ள­வி­லான வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்­பொன்றைக் கொண்­டி­ருந்­த­போ­திலும்,  ஒரு­போதும் இவர் பொது மக்கள் முன்­னி­லையில் தோன்­றி­ய­தில்லை. முதன் முறை­யாக அந்தக் கொள்­கையைத் தகர்த்து இவர் உங்­களைச் சந்­திக்க வந்­துள்ளார்.  

நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலை­ய­மைப்பை உரு­வாக்­கிய வர்த்­தகர்?

வர்த்­தகர் என்று சொல்­வ­தை­விட தொழில் முயற்­சி­யாண்­மை­யாளர் என்று அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தையே நான் விரும்­பு­கின்றேன். ஏனெனில் வர்த்­தக நோக்­கங்­களைக் கடந்த மிகச் சிறந்த நோக்­கங்கள் NOLIMIT இற்­குள்ளும் என்­னுள்ளும் இருக்­கின்­றன.  NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வரு­கின்ற வர்த்­த­கர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான ஒன்­றாகும். அவர்­க­ளுக்கு முன்­மா­திரி ஒன்றை வழங்­கு­கின்ற தொழில் முயற்­சி­யாண்­மை­யா­ள­ரா­கவும் தொழி­ல­தி­ப­ரா­கவும் என்னை நான் காண்­கின்றேன்.

நீங்கள் எவ்­வாறு அப்­படிக் கூறு­வீர்கள்?

எனக்கு இருப்­பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்­னு­ட­னேயே ஒன்றிப் பிறந்­தது. இந்தக் காய்ச்சல் கார­ண­மாக நான் பெஷன் பற்றி நிறை­யவே சிந்­திக்­கின்றேன். வர்த்­தகக் கருத்­தேற்­புக்­களை (Business Concepts) உரு­வாக்­கு­கின்றேன். அதன் மூலம் தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்றேன். நான் இந்த நாட்டில் சில்­லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்­றி­ய­மைத்து அதற்குப் புதி­ய­தொரு வடி­வத்தைக் கொடுத்தேன்.

நீங்கள் இந்­நாட்டில் எந்­த­ளவு எண்­ணிக்­கை­யான தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்­ளீர்கள்?

கடந்த 24 வருட காலத்­தினுள் நாம் இந்த நாட்டின் சில்­லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதி­க­மான தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். சில­வேளை இத­னை­விட அதி­க­மா­கவும் இருக்­கலாம். பாட­சா­லையை விட்­டு­வி­ல­கிய இளை­ஞர்­களை உள்­வாங்கி, அவர்­க­ளுக்குச் சிறந்­த­தொரு பயிற்­சியை வழங்கி, அவர்­களின் நடை­யுடை பாவனை மற்றும் மனப்­பாங்கு என்­ப­வற்றில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.  அவ்­வாறு உரு­வா­கி­ய­வர்­களுள் பலர் இன்று நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­கின்ற விதத்தில் சர்­வ­தேச ரீதியில் பணி­யாற்­று­கின்­றனர். NOLIMIT இல் பணி­யாற்­றி­ய­தாகச் சொன்­ன­வுடன் அவர்­க­ளுக்கு இன்று சர்­வ­தே­சத்தில் பாரிய வர­வேற்புக் கிடைக்­கின்­றது.

உங்­க­ளது பெஷன் வலை­ய­மைப்பில் தொழில்­வாய்ப்­புக்கள் முஸ்லிம் இனத்­த­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமா?

இது சகல இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் பணி­யாற்­று­கின்ற ஓரிடம். நூற்­றுக்கு, ஐம்­பது – ஐம்­பது வாய்ப்­புக்கள் அவர்­க­ளுக்கும் உள்­ளது. நான் தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கு­வது இலங்­கை­யர்­க­ளுக்கு. எமது வாடிக்­கை­யா­ளர்­களுள் பல்­வே­று­பட்ட வர்க்­கத்தைச் சார்ந்­த­வர்­களும் உள்­ளனர். அதே­போன்­றுதான் எமது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும்.

உங்­க­ளது வர்த்­த­கத்தின் நோக்கம் என்ன?

எந்­த­வொரு வர்த்­த­க­ருக்கும் மேலி­ருந்து கீழ் வரை (top to bottom) குறிப்­பான கவ­னக்­கு­வி­வொன்று இருக்க வேண்டும். அத­னூடே வாடிக்­கை­யாளர் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். இறு­தியில் மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். NOLIMIT இல் இருப்­பது முற்­றிலும் மகிழ்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­மைந்த இத்­த­கை­ய­தொரு குறிக்­கோளே.

சில நிறு­வ­னங்­களில் வாடிக்­கை­யாளர் மீது கோபத்­துடன் இருப்­ப­தைப்போல் பெண் விற்­ப­னை­யாளர் (Sales Girl) பத­வி­யி­லுள்ள யுவ­திகள் இருக்­கின்­றனர். இது சில்­லறை வணிகத் துறையின் இயல்பா…

இல்லை. ஏதே­னு­மொன்றைக் கொள்­வ­னவு செய்­தாலும், செய்­யா­வி­டினும் வாடிக்­கை­யா­ள­ருக்கு மகிழ்ச்­சி­யுடன் உத­வு­வ­துதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறி­யாகும். NOLIMIT பணி­யா­ளர்­களும் அவ்­வா­றுதான். எமது நிறு­வ­னத்தில் உயர்­மட்­டத்­தி­லி­ருந்து அடி­மட்டம் வரை­யான அனைத்துப் பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும் இத்­த­கைய மகிழ்ச்­சி­யுடன் வேலை செய்யும் உளக்­க­ருத்­துக்கு இயை­பாக்கம் அடைந்­த­வர்­க­ளே­யாவர். தனது உய­ர­தி­காரி இருந்­தாலும் சரி, இல்­லா­வி­டினும் சரி அவர்கள் இத­ய­சுத்­தி­யுடன் பணி­யாற்­றுவர். எமது முன்­னேற்­றமும் அதுதான்.

பணி­யா­ளர்­களின் மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது இல­கு­வாக அமைந்­ததா?

வாழ்க்­கையின் பழக்­க­மாக அதனை மாற்­றிக்­கொண்டால் அது கடி­ன­மான ஒன்­றல்ல. வாடிக்­கை­யாளர் திருப்­தி­ய­டைந்தால் மாத்­தி­ரமே அவர்கள் மீண்டும் எம்­மிடம் வருவர். அவ்­விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்­தால்தான் எமது நிறு­வனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்­கினால் மாத்­தி­ரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்­தத்தைப் பணி­யா­ளர்கள் புரிந்து கொள்­வதே முக்­கி­ய­மாகும்.

சிறந்த மனப்­பாங்கை உரு­வாக்கி பயிற்­று­விக்­கப்­பட்ட பணி­யா­ளர்கள் உங்கள் நிறு­வ­னத்­தை­விட்டு வில­கு­வ­தற்கு நீங்கள் இட­ம­ளிக்­கின்­றீர்­களா?

எம்­மிடம் உள்­ள­வர்­களில் நூற்­றுக்கு இரு­பத்­தைந்து வீத­மானோர் 25 வய­திற்­குட்­பட்ட இளைஞர் யுவ­திகள். பத்துப் பதி­னைந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக எம்­மி­டமே பணி­யாற்ற வேண்­டு­மென்ற எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் நாம் விதிப்­ப­தில்லை. ஒரு கதவு மூடப்­ப­டும்­போது இன்­னு­மொரு கதவு திறக்­கப்­ப­டு­கின்­றது. வில­கிச்­செல்­கின்ற அள­வுக்கு, நாம் புதி­ய­வர்­களை ஆட்­சேர்ப்புச் செய்து பயிற்­று­விக்­கின்றோம். அது எமக்குப் பிரச்­சி­னை­யல்ல.

உங்­க­ளு­டைய முகா­மைத்­துவப் பாங்கு யாது?

அது ஏதேனும் செயற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக நிகழ்­கின்ற ஒன்று. மேலி­ருந்து கீழ் வரை சக­ல­ருக்கும் வழங்­கப்­ப­டு­கின்ற கட­மை­யொன்று உள்­ளது. அவ­ர­வ­ருக்­கென அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த அதி­கார வட்­டத்­தினுள் அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரமும் உள்­ளது. சக­ல­வற்­றிலும் தலை­யி­டு­வதை விடுத்து குறித்த வட்­டத்­தினுள் தொழிற்­ப­டு­வதே எனது பாங்கு.

உங்­க­ளுக்கும் பணி­யாட்­தொ­கு­தி­யி­ன­ருக்­கு­மி­டையே நில­வு­வது, கொடுக்கல் வாங்­கல்கள் மாத்­தி­ரமா அல்­லது அத­னையும் தாண்­டிய பிணைப்­பொன்றா?

சிறந்த பணி­யாளர் ஒருவர் கிடைப்­ப­தென்­பது சிறந்­த­தொரு மனைவி கிடைப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும். பண்­பற்ற பணி­யாளர் ஒரு­வ­ருடன் வேலை செய்­வ­தா­னது கொடூ­ர­மான மனை­வி­யுடன் வாழ்­வ­தற்குச் சம­மா­ன­தாகும். நிறு­வ­னத்தின் முன்­னேற்­ற­மா­னது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. அதனால் அவர்­க­ளுடன் எனக்­குள்­ளது ஒரு பிணைப்­பே­யாகும்.

தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்ற போது நீங்கள் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?

அவை மிகத் துரி­த­மான தீர்­மா­னங்­க­ளாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்­கப்­ப­டு­பவை அல்ல. வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டு இருக்க முடி­யாது.

நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்­ட­மி­டு­ப­வரா?

இது­வரை திட்­டங்கள் ஏது­மின்­றியே நிறைய விட­யங்கள் நடந்­துள்­ளன. எனினும் இறை­வனின் திட்­டத்­திற்கு ஏற்­பவே அவை நிகழ்ந்­துள்­ளன. நல்ல விட­யங்­களைச் செய்தால் முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான பாதை­யொன்று உரு­வாகும்.

மனி­தனின் முன்­னேற்­றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்­து­கின்ற காரணி என்ன?

முதலில் மற்­ற­வர்­களை முன்­னேற்­று­கின்ற முறை பற்றிச் சிந்­தி­யுங்கள். சகல தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் சாதிக்­க­வில்லை. சாதித்த அனை­வரும் தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் அல்லர். சிறந்த குறிக்­கோ­ளுடன் வேலை­செய்­வதே முக்­கி­ய­மா­ன­தாகும். அந்தக் குறிக்­கோ­ளினுள் மற்­ற­வர்­களை முன்­னேற்­றி­வி­டு­கின்ற செயற்­றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதே­போன்று வாழ்க்­கைக்கு எவ்­வித பெறு­மா­னத்­தையும் வழங்­காத நபர்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யி­ருப்­பதும் முக்­கி­ய­மாகும். சிறந்த மனி­தர்­க­ளுடன் பழ­கு­வதும், வாழ்க்­கையில் நல்ல விட­யங்­களை இணைத்துக் கொள்­வதும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

பெஷன் உல­கத்தில் நிலவும் போட்­டி­யா­னது உங்­க­ளுக்கு சவா­லான ஒன்றா?

என்னைப் போன்றே ஏனை­ய­வர்­களும் வாழ வேண்டும். ஆனால் சம­மான வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்றில் மாற்­ற­மொன்றை, புது­மை­யொன்றை வழங்­கு­வ­தற்கு என்னால் முடி­யு­மாயின் அந்த இடத்­தில்தான் நான் வெற்­றி­யா­ள­னா­கின்றேன். நான் அத்­த­கைய போட்­டியை விரும்­பு­கின்றேன். ஏனெனில், அப்­போ­துதான் எனக்கு மென்­மேலும் புதிய விட­யங்கள் குறித்துச் சிந்­திப்­ப­தற்­கான சிறந்த தூண்­டுதல் ஏற்­படும். ஆடை­ய­ணி­க­லன்­களில் மட்­டு­மன்றி வீட்டு வாசல், சமை­ய­லறை, வர­வேற்­பறை, படுக்­கை­யறை என சகல இடங்­களும் எனக்கு பெஷன். வாழ்க்­கையை வடி­வ­மைக்­கின்ற, அதனை வர்­ண­ம­ய­மாக்­கு­கின்ற, எவ்­வ­ளவோ விட­யங்கள் இருக்­கின்­றன.

நீங்கள் முத­லா­வ­தாகச் செய்த தொழில் என்ன?

பாட­சா­லையில் இருந்து வில­கி­ய­வு­ட­னேயே லங்கா ஒபரோய் ஹோட்­டலில் House Keeping  பிரிவில் தொழி­லொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்­தையை சுத்­தப்­ப­டுத்­தினேன். அறை­களை ஒழுங்­கு­ப­டுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­தினேன். பக­லிலும் வேலை, இர­விலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்­ற­வரை சிறப்­பாக வேலை செய்தேன். அது தொந்­த­ரவு என்றோ தாழ்­வா­ன­தென்றோ நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. சவூ­தியில் இருந்த பத்து வரு­டங்­க­ளிலும் அவ்­வா­றுதான்.

இன்று அந்த கடந்­த­காலம் ஞாப­கத்­திற்கு வரு­கின்­ற­போது என்ன நினைக்­கின்­றீர்கள்?

ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­திய ஒரு சிறிய பைய­னுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கக்­கூ­டிய பாரிய கம்­ப­னி­யொன்றை உரு­வாக்க முடி­யு­மாயின், இன்­றைய சந்­த­தி­யி­ன­ருக்கு எவ்­வ­ளவு விட­யங்­களைச் சாதிக்க முடியும். சரி­யான பாதை­யொன்றைத் தேர்ந்­தெ­டுத்து, அதில் அர்ப்­ப­ணிப்­புடன் பய­ணிப்­பதே அவ­சி­ய­மாகும். தாய் தந்தை இல்­லை­யெனில் ஏனைய முதி­ய­வர்­க­ளா­வது அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு வழி­காட்­டுங்கள். அத­னையே நான் நினைக்­கின்றேன்.

பத்து வருட காலம் நீங்கள் சவூ­தியில் என்ன செய்­தீர்கள்?

அது “camp operation…” நிறு­வ­ன­மொன்­றாகும். நான் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வ­ராகத் தொழிலை ஆரம்­பித்தேன். சம்­பளம் 950 ரூபா. எழு­து­வி­னைஞர், மேற்­பார்­வை­யாளர், முகா­மை­யாளர். என படிப்­ப­டி­யாக முன்­னேறி, செயற்­றிட்ட முகா­மை­யாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழி­ந­டத்தற் செயற்­பா­டு­களும் என்­னி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. 1500 பணி­யாட் ­தொ­கு­தி­யி­னரை நிரு­வ­கித்தேன். நிரு­வாகம் மற்றும் இடர் முகா­மைத்­துவம் தொடர்­பான சிறந்த அனு­ப­வங்­களை நான் அந்தத் தொழி­லின்­போதே பெற்­றுக்­கொண்டேன்.

அத்­த­கைய சிறந்த தொழிலை விட்­டு­விட்டு நீங்கள் ஏன் இலங்­கைக்கு வந்­தீர்கள்?

எனக்கே உரிய ஒன்றைச் செய்­வ­தற்கு. சில­வேளை எனக்­குள்­ளேயே தொந்­த­ரவு தரு­கின்ற பெஷன் பற்­றிய ஆர்­வத்தின் தூண்­டு­த­லா­கவும் அது இருக்­கலாம். நான் இலங்­கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பது­ளையில் துணிக்­கடை ஒன்றை ஆரம்­பித்தேன். தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­த­மையால் எனக்கு இதனைச் செய்­வ­தற்குத் தோன்­றி­யது. எனினும் ஆறு வரு­டங்­களின் பின்னர் நான் அந்த வியா­பா­ரத்தை நிறுத்­தி­விட்டேன்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்

Image title

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்(75 பில்லியன் டாலர்கள்) முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்டேகோ, வொரன் பவட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க், இந்த ஆண்டு 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Wealth-X இன் உலக செல்வந்தர் தரவரிசைப்பட்டியல்: முதலிடத்தில் பில் கேட்ஸ், 8 ஆவது இடத்தில் ஷக்கர்பர்க்

Image title

போர்ப்ஸ் பத்திரிக்கையைப் போலவே உலகின் செல்வந்தர்களைத் தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையத்தளம் சொத்துகள், முதலீடு, இலாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில், இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலுக்காக சுமார் ஒரு இலட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்யப்பட்டது.

இதில் 87.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 66.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், 60.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் ப்ளூம்பர்க் 9 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

33.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டளவில் கடலில் மீன்கள் இல்லாமற்போகும் அபாயம்

Image title

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.

இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லொரி மூலமாக குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.

தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக்கால் பொதிசெய்யப்பட்ட பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பாவனைச் சட்டம் கடுமையாக்கப்படும்

20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனை பாவிப்போருக்கு எதிராக, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வகையான பொலித்தீனை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகார சபை கூறியுள்ளது.

பொலித்தீன் பாவனையாளர்களுக்கு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர், இந்தச் சட்டத்தை அதிகாரிகள் கடுமையாக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு 10,000 ரூபாய்க்கும் குறைந்த அபராதம் அல்லது இரண்டு வருடத்துக்கும் குறைந்த சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது