கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்

கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு)

அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர்.

அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சமூகத்தின் இருப்பிற்கான ஒரு போராட்டத்தின் முன்னடுப்பிற்கு சகல கட்சிகளின் அரசியல் பிரமுகர்களும் ஆதரவளிக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் முன்னடுக்கப்பட்ட அம்பாரை கரையோர மாவட்ட விடயம் அவரது மறைவிற்குப் பின்னர் காத்திரமான முறையில் ஒழுங்குபடுத்தி முன்னடுக்கப்படவில்லை.

தேர்தல் காலங்களில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக காலத்திற்குக் காலம் பேசப்படும் அம்பாரை கரையோர மாவட்டக் கோரிக்கை உண்மைக்கு உண்மையாக அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்படவில்லை. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தி தாங்கள்தான் என்று கூறும் நமது அரசியல் தலைவர்கள் கரையோர மாவட்டக் கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்காததன் மர்மம்தான் என்ன?

தமிழர் தரப்பினர் தமது கோரிக்கைகளை ஒன்றுபட்டு அழுத்தமாக முன்வைப்பதன் ஊடாக வென்றுகாட்டுகின்ற இன்றைய நிலையில் முஸ்லிம்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் ஊடாக தமது கோரிக்கைகளை வெல்ல முடியாமல் போவதுடன் இருக்கின்ற உரிமைகளைக்கூட இழக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்று அம்பாரை மாவட்ட கச்சேரியின் நிலையை உணர்ந்து பாருங்கள். அங்கு முஸ்லிம்கள் மூன்றாந்தரமாக மாற்றப்பட்டுள்ளனர். எதிர்காலங்களில் பாரிய அநீதி இழப்பிற்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட வாய்ப்புள்ளது.

அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் இருப்பிற்கு கரையோர மாவட்டத்தின் உருவாக்கம் மிக மிக அவசியமாகும். சிங்கள, தமிழ் இனவாதிகளின் கோரப்பிடியிலிருந்து முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்கான நிலையான ஏற்பாடுதான் கரையோர மாவட்டமாகும்.

எனவே, அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான முன்னடுப்புக்களையும் செய்வதற்கு முன்வந்துள்ள மூன்று ஊடக அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு சகல தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் (ஏ.வீ.எம்) நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ‘மீடியா ஐம்பதுக்கு 50’ விலைக் கழிவில் ஆடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (18) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெறவுள்ளது.

அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.வீ.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் எம்.றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் பைசால் இஸ்மாயில், பொருளாளர் ஜூல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ஹஜ் பெருநாளை முன்னிட்டு; ஆடைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் நோக்குடன் அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜுடன் பேசியதிற்கினங்க, ஊடகவியலாளர்களின் நலனைக் கருதிற் கொண்டு அவர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் 50 வீத விலைக் கழிவில் ஆடைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வுகள் வியூகம் முகநூல் ரீ.வியின் ஊடக அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

நவ,நாகரிக ஆடைகளின் இதயமாகத் திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தில் மிகவும் சலுகை விலையில் மக்கள் ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். மிக இளம் வயதில் இவ்வாறான முன்னணி நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிடன் இப்பிராந்தியத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அதன் உரிமையாளரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜின் ஆளுமையும், அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளுமே காரணமாகும்.

SLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்

SLC டி-20 லீக் தொடரை நடத்தும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் சபை (SLC)  வெளியிட்டது. இந்தப் போட்டித் தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையால் அண்மையில் நடத்தப்பட்ட மாகாண மட்ட நான்கு நாள் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் இடம்பெற்ற கொழும்பு, தம்புள்ளை, காலி மற்றும் கண்டி ஆகிய நான்கு அணிகளுமே இந்த டி-20 லீக் போட்டிகளில் ஆடவுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 6 போட்டிகளில் ஆடவிருப்பதோடு ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தும். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தேசிய அணியின் அனைத்து ஒப்பந்த வீரர்கள், முதல்தர ஒப்பந்த வீரர்கள் மற்றும் நம்பிக்கை தரும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம், பல்லேகல சர்வதேச மைதானம் மற்றும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம் ஆகியவற்றில் இந்த தொடரின் 13 போட்டிகளும் இடம்பெறவுள்ளதோடு இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும்.

கொழும்பில் நடைபெறவிருக்கும் 13 நாட்கள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் கொழும்பு அணி காலியை எதிர்கொள்ளவுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடர் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு நடைபெறாத நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட காலத்தில் இந்த தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையால் முடிந்துள்ளது.

போட்டி அட்டவணை

செவ்வாய்க்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 ஆர். பிரேமதாச
ஓகஸ்ட், 21, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச
புதன்கிழமை கொழும்பு எதிர் கண்டி பி.ப. 2 ஆர். பிரேமதாச
ஓகஸ்ட், 22, 2018 காலி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச
சனிக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 தம்புள்ளை
ஓகஸ்ட், 25, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை
ஞாற்றுக்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 தம்புள்ளை
ஓகஸ்ட், 26, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை
புதன்கிழமை காலி எதிர் தம்புள்ளை பி.ப. 2 கண்டி
ஓகஸ்ட், 29, 2018 கொழும்பு எதிர் கண்டி இரவு 7 கண்டி
வியாழக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 கண்டி
ஓகஸ்ட், 30, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 கண்டி
ஞாற்றுக்கிழமை செப்ட. 2, 2018 இறுதிப் போட்டி இரவு 7 ஆர். பிரேமதாச

 

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்த அதாஉல்லா, ஹசன் அலி, பசீர் சேகுதாவுத் பேச்சு

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் நம்பிக்கைக்குரியவருமான எம்.ரி.ஹசன் அலி மற்றும் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுத் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டேதான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடனான பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும், கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை நேற்று முன்தினம் சனிக்கிழமை(01) எம்.ரி.ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவுத் இருவரும் அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு சுமார் 4 மணித்தியாலயத்திற்கு மேல் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் தலைமைத்துவ சபையின் கீழ் முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிர்காலத்தில் அரசியல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பே பலமான சக்தியாகத் திகழும் என்ற விடயம் இன்று அரசியல் ஆய்வாளர்களால் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குரிய சமிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

அடுத்த சந்திப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் கிழக்கு மாகாண முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள் முஸ்லிம் கூட்டமைப்பை ஆதரித்து களத்தில் இறங்கி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரும் தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைவதற்கு தயாராகி வருவதுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முக்கிய முஸ்லிம் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

/images/ title

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை நமது களம் பெஸ்ட் இணையத்தளம் தெரிவித்துக் கொள்கின்றது.

நோன்பு எனக்குரியது. அதற்குக் கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து இருக்கும் நல்லடியார்களே! உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

அத்தோடு களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் செய்தியாளர்கள், ஆசிரிய பீடத்தினர், விளம்பரதாரர்கள்,வாசகர்கள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

வல்ல இறைவன் நம் அனைவர்களுக்கும் ஈருலக பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.

பிரதம ஆசிரியர்

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

//images title

எம்.ஐ.எம்.முஸ்தபா எனும் ஆளுமை காலமானார்.

(எஸ்.எம்.அறூஸ்)

கல்முனையைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமான எம்.ஐ.எம் முஸ்தபா காலமானார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருந்த மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் விளையாட்டு வீரராக, போட்டி நடுவராக, ஆசிரியராக, விரிவுரையாளராக, சாரண ஆணையாளராக, சிரேஸ்ட ஊடகவியலாளராக, விளையாட்டுத்துதுறை ஆலோசகராக கடமை புரிந்ததவர்.

தனது நீண்ட கால பணிகளுக்காக தேசிய விருதுகள் பலவற்றையும் பெற்றிருந்த முஸ்தபா சேர் பெருமையில்லாத மனிதராவார். கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை அடையாளமாக இவரைப் பார்க்கலாம். அந்த அளவிற்கு தேசியத்தில் இந்த மாகாணத்தின் பெயரைத் பதியவைத்தவர். எல்லோருடனும் அன்பாகப் பழகும் முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு பலரும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதுடன் அவருக்காக பிரார்த்தனையும் செய்துள்ளனர்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் ( தென்றல்) விளையாட்டரங்கில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் என் போன்ற பலரையும் அவரது ரசிகர்களாகவே மாற்றியது. 1992ம் ஆண்டுகளில் முஷ்தபா சேரின் விளையாட்டுக் கட்டுரைகளையும், செய்திகளையும் கேட்பதற்காக புதன்கிழமைகளில் மாலை 3.45 மணிக்கு இடம்பெறும் விளையாட்டரங்கு நிகழ்ச்சிக்காக வானொலி அருகில் அமர்ந்து கொள்வோம்.

இவரது எழுத்தாக்கம்தான் என்னையும் இலங்கை வானொலிக்கு எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது. நூற்றுக்கணக்கான விளையாட்டாசிரியர்களையும்,ஆயிரக்கணக்கான சாரண மாணவர்களையும் உருவாக்கிய ஒரு ஆசானாக முஸ்தபா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.

வானொலியில் அவரது பெயரைக் கேட்டிருந்தபோதும் நேரடியாக நான் அவரைச் சந்தித்ததில்லை. முதன் முதலாக அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் முஸ்தபா அவர்கள் மத்தியஸ்தராக கடமையாற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்தேன்.

மிகவும் அற்புதமான முறையில் நடுவர் பணியைச் செய்தார். போட்டியிட்ட இரண்டு அணி வீரா்களையும் விட மத்தியஸ்தம் வகித்த முஸ்தபாவின் எடுப்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அன்றிலிருந்து முஸ்தபா சேரைப்பற்றிய ஈடுபாடு என்னுள் இன்னும் அதிகமானது. நான் பாட்சாலை மாணவராக இருந்ததால் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக அவருக்கு கைலாகு கொடுத்துவிட்டு வெளியேறினேன்.

பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நான் தொடர்ந்தும் பங்குபற்றி வந்ததால் என்னைப்பற்றி அறிந்து கொண்டதுடன் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் நானும் தொடர்ந்தும் விளையாட்டுச் செய்திகளை எழுதினேன். அதனால் என்னை அழைத்து என்னை உற்சாகப்படுத்தியதுடன் விளையாட்டுத்துறை வரலாறுகளையும் சொல்லித்தந்தார்.

2001ம் ஆண்டு நான் நவமணி பத்திரிகையில் முஸ்தபா அவர்களை நேர்முகம் கண்டேன். அந்த நேர்முகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் எனக்கும் பத்திரிகைத்துறையில் நல்லதொரு இடத்தைத் தந்தது. அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு என்னை வருமாறு எனது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்துச் சொல்லுவார். அங்கு சென்றதும் கல்லூரிச் செய்தி மட்டுமல்ல தேசிய ரீதியிலான செய்திகளைக்கூட டைப் செய்து வைத்திருப்பார்.

எனது விளையாட்டுத்துறை செய்தி சேகரிப்பில் நல்லதொரு ஆலோசகராக இருந்து வழிகாட்டிய முஸ்தபா சேரின் காலமான செய்தி கேட்டதும் மிகுந்த கவலையடைந்தேன். இவரிடம் கற்ற ஆசிரியர்கள் நாட்டின் நாலா பகுதிகளிலும் கற்பிக்கின்றனர். அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இவரிடம் கற்ற ஆசிரிய மாணவர்கள் முஸ்தபா சேரின் கற்பித்தலை ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி அணி தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் சம்பியானாக வருவதற்கு முஸ்தபா அவர்களின் பயிற்சியே காரணமாக அமைந்தது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றிய முஸ்தபா அவர்கள் பின்னர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லுரியில் இனைந்து கொண்டு விரிவுரையாளராக கடமை கடமை புரிந்ததுடன் இறுதியில் சிரேஸ்ட விரிவுரையாளராக ஓய்வு பெற்றுச் சென்றார்.

ஓய்வு பெற்றதும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பகுதி நேர உடற்கல்வி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

உதைபந்தாட்ட வீரராக, மத்தியஸ்தராக இலங்கை உதைபந்தாட்டத்துறைக்கு ஆற்றிய பணிக்காக எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் பாராட்டி பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இது கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை தந்த விடயமாகும். அத்தோடு சாரணியத்துறையில் ஆற்றிய பணிக்காக தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.

கல்முனை பற்றிமாக் கல்லூரி மற்றும் வெஸ்லிக் கல்லூரிகளின் பழைய மாணவரான மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களுக்கு திருமணம் முடித்து ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது விளையாட்டுத்துறை ஈடுபாடுகளுக்கு இவரது மனைவியின் ஒத்துழைப்பும்,ஆதரவும் பெரும் உந்து சக்தியாக இருந்ததாக பல தடவைகள் அவரே பல நிகழ்வுகளில் கூறியுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம்களான முகம்மட் இஸ்மாயில், ஆசியா தம்பதிகளின் மூத்த புதல்வரான முஸ்தபா அவர்களுக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர்.

மட்டக்களப்பு வெபர் மைாதனத்தில் உதைபந்தாட்டப் போட்டி ஒன்று இடம்பெற்றபோது அப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக முஸ்தபா அவர்கள் கடமையாற்றியுள்ளார். இதற்கு பிரதம அதிதியாக வெபர் அடிகளார் கலந்து கொண்டுள்ளார். போட்டி முடிவில் உரையாற்றிய வெபர் அடிகளார் கிழக்கு மாகாணத்தில் உதைபந்தாட்டம் செத்துவிட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் முஸ்தபாவின் மத்தியஸ்தத்தைப் பார்த்தபோதுதான் தெரிகின்றது கிழக்கில் இன்னும் உதைபந்தாட்டம் சாகவில்லை என்று பேசிய விடயம் முஸ்தபாவின் திறமைக்கு இதைவிட சான்று தேவையில்லை என்பதை பறைசாற்றியது.

கல்வி மற்றும் விளையாட்டு,சாரணியத் துறைகளுக்கு அப்பால் உடகத்துறையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வீரகேசரிப் பத்திரிகையில் தென்கிழக்கு பிராந்திய செய்தியாளராக கடமையாற்றியதுடன் மக்களது குறைபாடுகளையும், பிரச்சினைகளையும் உடனுக்குடன் கொண்டு வந்தவர்.

அன்றைய காலகட்டத்தில் செய்திகளையும் படங்களையும் பத்திரிகைக்கு அனுப்புவதில் உள்ள கஸ்டங்களையும்.சவால்களையும் என்னிடம் பலமுறை சொல்லி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்.

இப்படி பல்வேறு துறைகளில் ஆளுமையுள்ளவராக இப்பிராந்தியத்தில் தடம்பதித்த எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குற்றங் குறைகள் மன்னிக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

//images title

//images title

//images title

//images title

//images title

இன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்.

ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன.

மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம்.

அந்த வகையில் யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரைக்கு அமைய 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

‘தீர்மானமிகு தருணங்களில் விமர்சனப் பார்வை கொண்டோர்’ என்பதே இம்முறை சர்வதேச ஊடக தினத்தின் தொனிப்பொருளாகும்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் பத்திரகைகளால் கூட்டாக பத்திரகை சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது இது உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் பிரகடனப்படுத்தப்பட காரணமாய் அமைந்தது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இல்லாதொழிக்கும் பட்சத்தில் முழு சமூகத்திலும் சமாதானமும், நீதியும் நிலைநாட்டப்படும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுதந்திர உடகத்தை கௌரவித்து, அதற்கான கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தி இந்தநாளை அனுஷ்டிப்பது அவசியமானதொன்று எனவும்அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட துன்பங்கள் மற்றும் ஒழிப்பு செயற்பாடுகளால் ஊடகவியலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த சந்தர்ப்பத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஊடகவியலாளர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

/images/ title

 

இறக்காமம் சிலை விவகாரம் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ்

அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ்

இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் இனவாதிகளால் கட்டப்படவுள்ள கட்டிடத்தை தடுத்து நிறுத்துவதுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்  விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இல்லாத விடயம் ஒன்றை உருவாக்கி சிறுபான்மையின மக்களை இனவாதத் தீயில் சிக்க வைப்பதற்கான சூழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவே மாணிக்கமடு பிரச்சினையை நாம் பார்க்கின்றோம். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பல வழிகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் பொதுபல சேனாவும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் நேற்று இறக்காமத்திற்கு விஜயம் செய்தது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.

மாவட்ட செயலகத்தில்  மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை எட்டுவதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டதாக அறிகின்றோம். இங்குள்ள முஸ்லிம்,தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான திட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.  இவர்களுக்கு  இதற்குரிய அதிகாரத்தை வழங்கியது யார் என்ற  கேள்வி எழுகின்றது.

 நாட்டில் இனவாத பிரச்சினைக்கு தூபமிட்டுள்ள ஞானசாரவுக்கு மாவட்ட அரசாங்க அதிபரை கட்டுப்படுத்தி உத்தரவிடும் பொறுப்புக்கள்  நல்லாட்சி அரசு வழங்கியுள்ளதா? என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இளைஞர்களின் நியாயத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு புறக்கணிப்புக்கள் ஆரம்பித்துள்ளது என்கின்ற விடயம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் இறக்காமம் மாணிக்கமடு சிலையும், புதிய கட்டிடம் கட்டப்படும் விவகாரமும் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

நல்லாட்சி உருவாக்கத்தில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்திற்கு முழுமையான எதிர்ப்பை இனவாதத்தைக் கொண்டு வெளிக்காட்டிய பொதுபல சேனா இன்று முஸ்லிம்களை இனவாதத் தீக்குள் அகப்பட வைப்பதற்காக அம்பாரையில் களமிறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இறக்காமம் மாணிக்கமடு விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெறாமல் தடுப்பதுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை  உடனடியாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தையும், செயற்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமையும்.

 கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருந்ததனாலேயே தோல்வியடைந்து வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமல் நழுவல் போக்கில் செயற்படுமாக இருந்தால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியை மாற்றுவதற்கான ஆரம்பமாக இறக்காமம் மாணிக்கமடு பிரச்சினையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கொள்வார்கள்  என்ற நிலையையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகங்களுக்கிடையில் இன உறவை கட்டியெழுப்பி சுபீட்சமான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இவ்வாறான சம்பவங்களும், இனவாதத்தைக் கக்கும் இனவாதி ஞானசாரவும் பெரும் தடையாகவே இருக்கின்றனர்.

இனவாத ஞானசாரவும் அவரது குழுவினரும் முன்னடுக்கவுள்ள சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கு அம்பாரையில் உள்ள அரச அதிகாரிகள் துனைபோகக் கூடாது. இனவாதத்தைக் கக்குவதன் மூலம் முஸ்லிம்களை ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது. தேசிய அரசியலின் மாற்றத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் முக்கியத்துவம் மிக்கது என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

/images/ title

சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை

சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வந்த சோதனை

தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் எழுதப்பட்ட விடயங்களில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தொடர்பிலும் எழுதப்பட்டிருக்கின்றது. காணி உறுதியை டிபெக்ஸினால் அழித்து மாற்றி எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாமல் பதிவில் இல்லாத ஒரு அமைப்பினை வெளிக்காட்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இப்புத்தகத்திலேயே சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

மூத்த சட்டத்தரணி என்பதுடன் ஒரு அரசியல்வாதியாகவும் உள்ள நிசாம் காரியப்பர் சட்டத்துறைக்கு எதிரான விடயத்திற்கு துனைபோய் கள்வர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று எழுதப்பட்டுள்ள வியடம் பாரதூரமானதாகும்.

இந்த விடயத்தை சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளதுடன் இது தொடர்பில் சட்ட நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும். பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் உறவினராகவும்,நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்த நிசாம் காரியப்பர் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு ஆதரவாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று செயற்பட்டிருக்க மாட்டார் என்பது கட்சிப் போராளிகளின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் மூத்த சட்டத்தரணியாக மதிக்கப்படும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தொடர்பில் எழுதப்பட்டுள்ள விடயம் பொய்யானதாகவே இருக்கும் பட்சத்தில் உடனடியாக இப்புத்தகம் தொடர்பில் சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்வரவேண்டும்.

சட்டத்துறைத் தொழிலுடன் அரசியல் ரீதியாகவும் பதவிகளை வகித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களின் கௌரவத்திற்கு இவ்விடயம் பெரிதும் மாசு கற்பிக்க இடம் கொடுப்பதால் இவ்விடயம் பொய்யானது என்பதை நிருபிக்கின்ற பொறுப்பு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இருக்கின்றது.

பலரினதும் உரிமைக்காகவும், நியாயங்களிற்காகவும் நீதிப்படிகளை ஏறிய சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தன்னைப்பற்றி பிழையாக எழுதப்பட்ட விடயத்திற்காக நடவடிக்கை எடுக்காமலா இருக்கப் போகின்றார்?

Image title

தேசிய விளையாட்டு விழா நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

(எஸ்.எம்.அறூஸ்)

42ஆவது தேசிய விளை­யாட்டு விழா யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நாளை 29 முதல் அக்­டோபர் 2 வரை நடை­பெ­ற­வுள்­ளது.

நாளை நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இங்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள், மத்தியஸ்தர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதிப்போட்டி நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் முதல் தட­வை­யாக நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான தீபத்தை ஏற்றும் சந்­தர்ப்பம் யாழ். மாவட்­டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளை­யாட்டு வீராங்­கனை ஒரு­வ­ருக்கும் வீரர் ஒரு­வ­ருக்கும் கிடைத்­துள்­ளது.

இலங்கை வலை­பந்­தாட்டம் மற்றும் மகளிர் கூடை­பந்­தாட்ட அணி­களில் இடம்­பெற்­ற­வரும் வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி மற்றும் ஆசி­யாவின் முன்னாள் அதி சிறந்த கோல்­போடும் வீராங்­க­னை­யு­மான ஜயன்தி சோம­சே­கரம் டி சில்­வா­வுக்கு விளை­யாட்டு விழா தீபத்தை ஏற்றும் அரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

வலை­பந்­தாட்­டத்தில் வீராங்­க­னை­யாக, தலை­வி­யாக, பயிற்­று­ந­ராக, நிரு­வா­கி­யாகப் பிர­கா­சித்த இவர் வேம்­படி மகளிர் கல்­லூ­ரியின் பழைய மாண­வி­யாவார். இவர் சிறந்த மெய்­வல்­லு­ந­ரு­மாவார்.

அட்டன் நெஷனல் வங்கி ஒன்றில் கிளை முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் இவர் வர்த்­தக வலை­பந்­தாட்ட சங்­கத்தின் தலை­வி­யாக தற்­போது செயற்­ப­டு­கின்றார்.

இவ­ருடன் இணைந்து தீபத்தை ஏற்­ற­வுள்­ளவர் இலங்­கையின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான சூசைப்­பிள்ளை அன்­த­னிப்­பிள்ளை க்ளிபர்ட் ஆவார்.

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் 1969இல் இலங்கை பாட­சா­லைகள் அணி­யிலும் 1972இல் தேசிய அணி­யிலும் இடம்­பெற்­ற­துடன் கல்­லூ­ரியின் அதி உயர் ஜொனியன் ஈக்ள் விருதை முத­லா­ம­வ­ராக 1972இல் வென்­றெ­டுத்தார். பீ. ஏ. பட்­ட­தா­ரி­யான இவர் இதே கல்­லூ­ரியில் உதவி அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

கால்­பந்­தாட்­டத்தில் யாழ். மாவட்­டத்தில் அதி சிறந்த வீர­ராக விளங்­கிய இவர் சி பிரிவு பயிற்­றுநர் சான்­றி­த­ழைக்­கொண்­டவர்.

தனது கல்­லூரி அணி, கழ­கங்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக அணிகள் பல­வற்­றுக்கு பயிற்­று­ந­ராக செயற்­பட்ட இவர் யாழ். கால்­பந்­தாட்ட லீக்கின் தலை­வ­ராக பல வரு­டங்கள் பதவி வகித்தார். இவர் முதல்­தர மத்­தி­யஸ்­த­ரு­மாவார்.

42ஆவது தேசிய விளை­யாட்டு விழா யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நாளை 29 முதல் அக்­டோபர் 2 வரை நடை­பெ­ற­வுள்­ளது.

அத்­துடன் மெய்­வல்­லுநர் போட்­டிகள், கடற்­கரை கபடி, கால்­பந்­தாட்டம், கூடைப்­பந்­தாட்டம், கயிறிழுத்தல் போட்டிகள் என்பன இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

தேசிய விளை­யாட்டு விழாவின் ஆரம்ப விழா துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நாளை வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் நடை­பெ­ற­வுள்­ளது.

இதேவேளை, உதைபந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட அணி கலந்து கொள்கின்றது.கிழக்கு மாகாண அணி இன்று மாலை போட்டியில் கலந்து கொள்கின்றது.

இம்முறை நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்திற்கு பல பதக்கங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தெரிவித்தார்.

பரிது வட்டம் நிகழ்ச்சியில் ஆசீக், நீளம்பாய்தலில் மிப்ரான்,100 மீற்றர் ஓட்டத்தில் அஸ்ரப், 200 மீற்றர் ஓட்டத்தில் ரஜாஸ்கான்,உயரம்பாய்தலில் குருகே முக்கிய எதிர்பார்ப்பைக் கொண்ட வீரா்களாக உள்ளனர்.

அதேவேளை, நடந்து முடிந்த பெண்கள் கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப்பதக்கமும், ஆண்கள் கிரிக்கட் போட்டியில் வெண்கலப்பதக்கமும். ஆண்கள் கபடிப்போட்டியில் தங்கப்பதக்கமும், காட்டா கராத்தே போட்டியில் பால்ராஜூக்கு தங்கப்பதக்கமும். பெண்களுக்கான சைக்கில் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும், கடற்கரை கரப்பந்தாட்ட்த்தில் வெள்ளிப்பதக்கமும் மேலும் சில போட்டிகளிலும் கிழக்கு மாகாணத்திற்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Image title

புனித ஹஜ் பெருநாள் இன்று

புனித ஹஜ் பெருநாள் இன்று

தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பெருநாளாக ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.

இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள், இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.

இற்றைக்கு சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர் இப்றாஹிம் நபி அவர்களின் மனைவியான சாரா மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகன் இஸ்மாயில் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை, இறைக் கட்டளையின் பிரகாம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவுகூறப்படுகின்றது.

நபி இப்றாஹிம் அலைஹிஸ்சலாம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலைஹிசலாம் அவர்களை பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அதனை தடுத்து, ஓர் ஆட்டை இறக்கி அதனை பலியிடுமாறு கட்டளையிடப்பட்டார்.

இறைதூதர் இப்றாஹிம் அலைஹிசலாம் அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.

Image title

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம்

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு உதயம்

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பின் அங்குரார்ப்பண வைபவம்இன்று மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொள்கின்றார்.

இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்ற முன்னணி செய்தி இணையத்தளங்களை ஒன்றினைத்ததாக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்படுகின்றது.

தேசியத்திலும், சர்வதேசத்திலும் முன்னணி வகிப்பதும்,விர்க்க முடியாத ஊடகமாகவும் இணையத்தள ஊடகங்கள் காணப்படுகின்றது. அந்த வகையில் இணையத்தளங்களை ஒன்றினைத்து அவர்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி தேவைகளை ஆராய்ந்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் முன்னடுக்கப்படவுள்ளது.

நமது பிராந்தியத்தில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் செய்தி இணையத்தள ஊடக வளர்ச்சியில் தங்களுடைய பல்வேறுபட்ட சேவைகளையும், நலன்களை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 13 இணையத்தளங்கள் ஒன்றினைந்து மேற்கொள்ளும் இமு்முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.

Image title

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அட்டாளைச்சேனை விஜயம்

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அட்டாளைச்சேனை விஜயம்

அறிவும்,ஆளுமையும்,அழகும் தன்னகத்து கொண்டு நாட்டில் பலராலும் பேசப்படுகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிற்கு வருகை தரவுள்ளார்.

இந்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இப்படியானதொரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது விளையாட்டு வீரா்களின் அதிர்ஸ்டமாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் விருப்பமுள்ளவராகவும், அதனை முன்னேற்றுவதில் ஆர்வமுள்ளவராகவும் தயாசிறி ஜயசேகர காணப்படுகின்றார்.

இனவாதங்களைக் கடந்து தேசத்தை நேசிக்கின்ற ஒருவராக தனது அரசியல் பயணத்தை கொண்டு செல்கின்றார். தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்வுகளில் இவரது விவாத ஆற்றல் பிரமிக்கத்தக்கது. நள்ளிரவு தாண்டியும் இவரது நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

குறிப்பிட்ட அமைச்சுக்கள் கிடைத்தால் மாத்திரம்தான் சேவை செய்ய முடியும் என்று சொல்லித்திரியும் நமது அரசியல்வாதிகள் மத்தியில் தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சைப் பாரமெடுத்து பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

விளையாட்டுத்துறையின் பழமையான சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வீரா்களுக்கான சன்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான வீரா்களுக்கு ஜனாதிபதி விருது,கிராமப்புற மைதானங்களிற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு, விளையாட்டு சங்கங்களிற்கு முன்னுரிமை, விளையாட்டு வீரா்களுக்கு சிறந்த பயிற்சிக் கட்டமைப்பு, சிறுபான்மையின வீரா்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு போன்ற விடயங்களை அமுல்படுத்தி வருவதுடன் அதற்கான மேலதிக திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு ஆளுமையுள்ள விளையாட்டமைச்சர் நமது மண்ணுக்கும் வரவேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம் விருப்பமாக இருக்கின்றது. விளையாட்டுத்துறை அமைச்சருடன் குருணாகலில் உள்ள நண்பர்கள் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அட்டாளைச்சேனைக்கு அவரைக் கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் புணரமைக்கப்பட்ட வெபர் மைதானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில் இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். இதில் நமது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.

இத்திறப்பு விழா நிகழ்வில் லக்கி விளையாட்டுக் கழக செயலாளர் எ.எல்.கியாஸ்தீன், பொருளாளர் யு.எல்.முனாப் மற்றும் உயர்பீட அங்கத்தவர்களும் கலந்து கொள்வதுடன், விளையாட்டுத்துறை அமைச்சரை அட்டாளைச்சேனைக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது..

Image title

நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடம் பூர்த்தியடைவதுடன் நான்காவது ஆண்டில் கால் பதிக்கின்றது.

பல்வேறு சவால்களுக்கும், இடர்பாடுகளுக்கும் முகம்கொடுத்து நமது சமூகத்தின் உரிமைக்குரலாய் தனித்துவமாய் தலை நிமிர்ந்து நிற்பதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

இன்று இணையத்தளங்களின் ஆதிக்கம் நம்மை ஆட்கொண்டிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் நமது சமூகத்தின் உரிமையிலும், நலனிலும் நாம் அக்கரை கொண்டவர்களாக இருப்பது மிக முக்கியமாகும்.

ஒரு செய்தி நிறுவனத்தை முன்கொண்டு செல்வதென்பது கடினமான ஒரு பணியாக இருந்திட்டபோதிலும் களம் பெஸ்ட் நமக்காக உழைத்து வருகின்றது. செய்திகளையும், தகவல்களையும் முந்திக்கொண்டு தருவதில் களம்பெஸ்ட் எப்போதும் முதன்மையானதுதான்.

இலங்கையின் செய்தி இணையத்தள வரலாற்றில் பல விடயங்களை அறிமுகப்படுத்திய பெருமை களம் பெஸ்டுக்கு இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் தலையங்கத்தைக் குறிப்பிடலாம்.சமகால விடயங்கள் பலவற்றையும் உள்ளடக்கியதாக ஆசிரியர் தலையங்கம் எழுதப்படுகின்றது. பலரினதும் கருத்துக்கள் எமக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.

இந்த மூன்று வருடகாலத்தில் எமக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்த ஆசிரிய பீடத்தினர், ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், விளம்பரதாரர்கள்,நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சமூகவாதிகள், இலக்கியவாதிகள் மற்றும் முதன்மையான பெருமதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி அடைகின்றோம்.

எதிர்காலத்திலும் களம் பெஸ்டின் வளர்ச்சிக்கும்,வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையும் எங்களிடம் இருக்கின்றது.அது மட்டுமல்ல களம் பெஸ்ட் தொடர்பான காத்திரமான கருத்துக்களையும் அவர்களிடமிருந்து எதிர்பாக்கின்றோம்.

களம் பெஸ்ட் தனி ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ சொந்தமானதல்ல அது ஒரு சமூகத்தின் உரிமைக்கான தடம். அதனை நாம் நேசத்தோடு வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு நாம் பங்காளர்களாக இருந்து பங்களிப்புச் செய்வோம் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.

பிரதம ஆசிரியர்

களம் பெஸ்ட் செய்தி இணையத்தளம்

Image title

இலங்கை கிரிக்கட் அணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு – பிரதியமைச்சர் ஹரீஸ் கவனம் கொள்வாரா?

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

(எஸ்.எம்.அறூஸ்)

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான  ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களான சஜித் இந்திரரத்ன, ரமேஷ் நிமந்த, பந்துல உடுபிஹில ( அணித் தலைவர் ), உதித் மதுவன்த, டில்ஷான் சந்துருவன், சனுக்க, நிபுன் சதுரங்க, சண்டீப் நிஸன்சல, கஜித் கொட்டுவெகொட, நிவன்த கவிஷ்வர,  இலங்கசிங்க, அத்தநாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ,  சனோஜ் செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கை தேசிய அணியில் சில முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். இளவயது அணியிலும் சில முஸ்லிம்கள் இடம்பெற்றனர். பிரபல பாடசாலை அணிகளிலும் தற்போதும் முஸ்லிம் மாணவர்கள் ஆடிவருகின்றனர். எனினும் அண்மைய காலங்களில் இலங்கை தேசிய அணிகளில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்காக பர்வீஸ் மஹ்றூப், ஜெஹான் முபாரக்,நவீட் நவாஸ், உவைசுல் கர்னைன், மர்ஹூம் அபுபுவாத் போன்ற வீரா்கள் இடம்பெற்று விளையாடியதுடன் அர்சாத் ஜூனைத் இலங்கை ஏ அணிக்காகவும், 23 வயதுக்குட்பட்ட அணிக்காகவும் விளையாடி சிறந்த சாதனைகளைப் படைத்திருக்கின்றார்.

முஸ்லிம் என்ற காரணத்திற்காக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை அர்சாத் ஜூனைத் இழந்திருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.  மூவர்ஸ் அணிக்காக இசாம் கௌஸ் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இலங்கை ஏ அணிக்காக அவரை எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தெரிவுக்குழு தெரிவு செய்யவில்லை.

நவீட் நவாஸ் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் பங்குகொண்டு சிறப்பாக விளையாடிய போதிலும் தொடர்ந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான புறக்கணிப்பாகும். இதனை தட்டிக்கேட்பதற்கு நமது ஊடகங்களே முன்வரவில்லை. ஆனால் எங்களால் முடிந்த எதிர்ப்புக்களை கட்டுரையாக அன்று எழுதினோம்.

பர்வீஸ் முஹ்றுப் சிறப்பாக விளையாடினார். மெத்தியுஸ் அணிக்குள் வந்ததும் அதனை காரணமாக வைத்து மிகவும் கச்சிதமாக மஹ்றூபை அணியிலிருந்து கழற்றிவிட்டார்கள். மஹ்றூபிற்கு நடந்த அநீதியை மஹேல ஜெயவர்த்தன கண்டித்திருக்கின்றார்.

அண்மைக்காலமாக கொழும்பு ஸாஹிராவின் இம்றாஸ் ராபி மற்றும் நிக்ஸி அஹமட் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்னர்.இவர்கள் இருவரும் பாடசாலைகள் போட்டியில் 1000 ஓட்டங்களைப் பெற்றருக்கின்றனர். பந்துவீச்சில் உமர் களக்கினார். அதேபோன்றுதான் இன்று ஸாஹிராவுக்கு முகம்மட் அஹ்னப் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

கிரிக்கட்டில் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதற்காக இம்றாஸ் ராபி மற்றும் உமர் போன்ற இளம் வீரா்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

நிக்ஸி அஹமட்டிற்கு பயிற்சியாளரின் நெருக்கடிகள் அவரை மனதளவில் பாதித்திருக்கின்றது.இருந்தபோதும் உள்ளுர்போட்டியில் அசத்தி வருகின்றார். நிக்ஸி அஹமட் மற்றும் அஹ்னப் இருவரும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்ட ரீதியாகவே மலேசியாவுக்கான சுற்றுப்பயணத்திற்கு இளம் வீரா்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணம் சார்பாகவும், அம்பாரை மாவட்டம் சார்பாகவும் குறித்த இரண்டு வீரா்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்.  இந்த விடயத்தில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் பாரிய அநீதியை இழைத்துள்ளதாக களம் பெஸ்ட் இணையத்தளம் கருதுகின்றது.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு அளித்ததற்காகவே மாவட்ட ரீதியாக வீரா்கள் தெரிவு செய்யப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இதன் மூலம் தனது நன்றியறிதலை சுமதிபால செய்துவிட்டார்.

தற்போது நமது சமூகத்தின் சார்பில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருக்கின்ற எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் இது விடயத்தில் உரிய கவனத்தை செலுத்த வேண்டும். வீரா்களின் திறமைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும், கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் சுமதிபாலவுக்கும்  தெரியப்படுத்தி இன்று ஏற்பட்டுள்ள புறக்கணிப்பை நிவர்த்தி கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பாரப்பாகும்.

Image title