Dr ஷாபியின் அடிப்படை உரிமை மனு, ஓகஸ்ட் 6ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

சட்டவிரோத முறையில் சொத்து சேகரித்ததாக சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீன்  தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்துள்ளது.
குறித்த மனு, இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அறிவிப்பு உரிய முறையில் கிடைக்கவில்லை என  சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான, பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசித் முதலிகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மீண்டும் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு விடுக்கவும், மனுவை விசாரிக்கவும் திகதி குறிக்குமாறு,  பிரதி சொலிஸிட்டர் நாயகம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமையால், பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவிக்கவும், மனுவை 6ஆம் திகதி விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

முஸ்லிம் டாக்டர்களிடம் இருந்து, சிங்கள நோயாளர்களைத் தூரமாக்கும் சதித்திட்டம்

இவர் சிறந்த வைத்தியர் இவரின் மனைவியும் ஒரு சிறந்த வைத்தியர் இவர்கள் பரம்பரை பணக்காரர்.
சிசேரியன் அறுவைச் சிகிச்சையை ஒரு டாக்டர் மேற்கொள்ளும்போது அவருக்கு உதவியாக ஒரு டாக்டரும் இரண்டு தாதிமாரும் இருப்பார்கள்.
ஒவ்வொரு கிரியைக்கும் தேவையான உபகரணங்களைத் தாதிமாரே எடுத்துக் கொடுப்பார்கள். அது தவிர மயக்க மருந்து கொடுக்கும் டாக்டரும் அவரது தாதிமாரும் இருப்பார்கள்.
இது தவிர பல ஊழியர்கள் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள்..இந்த நிலையில் 4000 பேரில் நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சையை எப்படி மேற்கொள்ள முடியும்? இது முஸ்லிம் டாக்டர்களிடம் இருந்து சிங்கள நோயாளர்களைத் தூரமாக்கும் ஒரு முயற்சியாகும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண நோயாளர்களே-
While a doctor is performing a Caesarean section, there will be an assisting doctor, two nurses, one anaesthetist, her nurses and many other employees in the operation theatre. The assisting nurse only give the instruments necessary for the each step of surgery. Majority of these staff are Sinhalese. In these circumstances, how a doctor can perform surgical sterilization in 4000 females? This is an attempt to keep away the patients from Muslim doctors.

Mohamed Riyath

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம்! பைசல் காசிம் வழங்கி வைத்தார்

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது.

அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பைசல் காசிமிடம் இருந்து அம்பியூலன்ஸை பெறுவதையும் அருகில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ஐ.எல்.எம்.மாஹிர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

அந்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்படும் என்று பைசல் காசிம் அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இன்று அது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சால் நாட்டில் உள்ள மேலும் பல வைத்தியசாலைகளுக்கும் இன்று அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

[ஊடகப் பிரிவு]

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு -பைசல் காஸிமின் ஏற்பாடு

(முகம்மட் வாஜீத்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் வேண்டுகோளுக்கு அமைய சுகாதார அமைச்சு 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிதி 6 கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் நவீன வைத்திய கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடையே நேற்று [07.05.2019] சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

பைசல் காசிமால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி தொர்பான வேலைத் திட்டம் இதன்போது கலந்துரையாடப்பட்டு மேற்படி தொகையை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ஒதுக்கப்படும் இந்த நிதியைக்கொண்டு 6 லட்சம் சதுர அடிகள் கொண்ட 6 மாடிக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதோடு அவற்றுக்கான நவீன வைத்திய கருவிகளும் வழங்கப்படும்.

வைத்திய கட்டடங்கள்,சத்திர சிகிச்சை பிரிவு,குழந்தை மற்றும் மகப்பேற்றுப் பிரிவு,நரம்பியல் பிரிவு மற்றும் புற்றுநோய் பிரிவு போன்றவை அவற்றுள் அடங்கும்.

இந்த வேலைத் திட்டம் பூரணப்படுத்தப்பட்ட பின் கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாண மக்கள் எவரும் கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களுக்குச் செல்லாமல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே எல்லாவகையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.

மேற்படி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கடந்த வருடம் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பைசல் பைசல் காசிம் 2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் பின் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த வாக்குறுதிக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வைத்திய கலாநிதி நக்பர் பயணம்.

பைஷல் இஸ்மாயில் –

இந்தியா குஜராத் மானில அகமதாபாத்தில் நடைபெறும் 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் பயணமாகின்றார்.

60 நாடுகள் பங்குபற்றும் இந்த 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாடு 13 ஆம் திகதி தொடர்க்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின்போது உலகளாவிய ரீதியில் 9 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதில் இலங்கை சார்பாகச் செல்கின்ற 40 பேர் அடங்கிய அதிகாரிகள் மற்றும் ஆயர்வேத வைத்தியர்கள் கொண்ட குழுவில் இலங்கை சார்பாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் ஆய்வுக் கட்டுரை ஒன்று சமர்ப்பிக்கபட்டு அதில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையிலுள்ள கிராமப் புரங்களில் வாழுகின்ற மக்களுக்கு சுதேச மருத்துவ முறையை எவ்வாறு கொண்டு சென்று அதனை மக்கள் மயப்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் தனது அனுபவ ரீதியான அந்த ஆய்வுக் கட்டுரை அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1வது மாபெரும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சியும் – 2018

பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சுதேச திணைக்களமும், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து நடாத்தும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சியும் ‘சுதேச மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புக்களை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவருதல்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இந்த மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று தினங்களில் திருகோணமலை மாவட்ட உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாநாடும், கண்காட்சியும் 03 பகுதிகளாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் 4, 5 ஆம் திகதிகளில் சுதேச, ஆங்கில மருத்துவம் சார்ந்த வல்லுனர்கள், வளவாளர்கள், சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களினால் பல்வேறு வகையான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கடவுள்ளதாகவும், இம்மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட மலேசியா மற்றும் இந்தியா நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். மேலும் சுமார் 80க்கும் மேற்பட்ட சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களின்; ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இம்மாநாட்டின் மற்றொரு நிகழ்வாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாராம்பரிய மருத்துவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான விடயங்களாகவும் இது இடம்பெறவுள்ளது.
குறித்த மூன்று தினங்களிலும் அரச, மாகாண ஆயுள்வேத திணைக்களங்கள், அரச தனியார் சுதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள், சுதேச மருத்துவ பல்கலைக் கழகங்கள், பாராம்பரிய வைத்தியர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் இது நடாத்தப்படவுள்ளன. இக்கண்காட்சியில் மூலிகைப் பரம்பல், மூலிகைகளை இனங்காணல் தொற்றாநோய்களின் தீவிரத்தன்மையை குறைக்கவும் நோய் வராமல் தடுக்கவும் உரிய உணவுகள் நாளாந்த பழக்கவழக்கங்கள் யோகா பயிற்சிகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
ஆயுள்வேத மருத்துவ உல்லாசத்துறையில் பிரபல்யமான பஞ்சகர்மம், தொக்கணம், வர்மம், கிஜாமா போன்ற சிகிச்சை முறைகள் மற்றும் உளவள சிகிச்சை என்பனவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் விசேட இலவச மருத்துவ முகாம் இந்தியா, இலங்கை சுதேச மருத்துவர்கள் கொரியா அக்குபஞ்சர் மருத்துவர்கள் பாராம்பரிய வைத்தியர்கள் உள்ளடங்கிய குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
இம்மாநாடு கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஊடாக சுதேச மருத்துவ துறைக்கு ஓர் அங்கீகாரம் கிடைப்பதுடன் மாணவர்கள் பொதுமக்களிடையே உணவு, வாழ்க்கை நடைமுறை பழக்கவழக்கங்களில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாயம் ஒன்றை கட்டி எழுப்ப நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தொற்றா நோய்களுக்கான மருத்துவ விஞ்ஞான கலந்துரையாடல் மற்றும்  ஆயுள்வேத கண்காட்சி என்பன நடைபெறவுள்ளன. என்றார்.
சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சிக்கு சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித செனாரத்ன, சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காசீம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போஹல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட அமைச்சின் உயராதிகாரிகள், வைத்தியர்கள் என கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்களை முகம் நிமிர்த்தி வாழ செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

போர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்டு முக பொலிவை இழந்த மக்களுக்கு இலவசமாக முக சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களையும் சமுதாயத்தில் முகம் நிமிர்த்தி வாழ செய்கின்றார் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முக சீரமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுசன் மதுசங்க தெரிவித்தார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
முக பொலிவில் குறைபாடு உடைய ஏராளமான மக்கள் அதனால் மனம் உடைந்தவர்களாக அவர்களை சமுதாயத்துக்குள் மறைத்து கொண்டு வாழ்கின்றனர். அவர்களை சமூகமும் அருவருப்புடனேயே நடத்தவும் செய்கின்றது. இந்நிலையில் அவர்களையும் பூரண மனிதர்களாக மாற்றி அமைக்கின்ற மகத்தான பணியையே நான் இலவசமாக மேற்கொண்டு வருகின்றேன். எனது இலவச சேவையை மக்களின் காலடிகளுக்கு கொண்டு செல்கின்றேன்.
யுத்த வன்செயல்களால் முக பொலிவை இழந்த மக்கள் இருக்கின்றனர். வாகன விபத்துகளில் சிக்கி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். பிறப்பிலேயே முக குறைபாடு உள்ளவர்களும் உள்ளனர். புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். முன்பெல்லாம் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு தூரங்களில் உள்ள வெளிமாவட்டங்களுக்குத்தான் நோயாளர்கள் செல்ல வேண்டி இருந்தது. அத்துடன் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு இம்மக்களுக்கு போதிய பொருளாதார வசதிகளும் கிடையாது. இந்நிலையில் தற்போது இச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான மேம்பட்ட வசதிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் முக பாதிப்பு உடைய மக்களை சரியான வகையில் அடையாளம் கண்டு உரிய சிகிச்சைகளை வழங்குகின்ற முன்னெடுப்புகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். கிராம மட்டத்தில் இருந்து எனது இவ்வேலை திட்டத்தை ஆரம்பித்து உள்ளேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று ஒரு பழமொழி உள்ளது. பெண்களுக்கு மாத்திரம் அன்றி ஆண்களுக்கும் முக அழகு முக்கியமானது. எனவே முக அழகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டு கொடுக்கின்ற சகிச்சையை எமது வைத்திய குழுவினர் நவீன முறையில் வழங்குகின்றனர். நான் கற்ற கல்வி மூலமாக மக்களின் முக அழகை மீட்டு கொடுப்பதை எனது உயர் தொழில் தர்மமாகவும், இலட்சியமாகவும் கொண்டிருக்கின்றேன்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எமது செய்திப்பிரிவு மேல் மாகாண ஆளுனர் கே.சி லோகேஸ்வரனிடம் இது தொடர்பில் வினவிய போது அவர் அதனை உறுதி செய்தார்.

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.

இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரனிடம் அறிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பட்டதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.

உணவுக்குப்பின் செய்யக்கூடாதவை…

Image title

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒரு சில செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது உடலுக்கு கேடு விளைவிக்கும். உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.

சில ஆண்கள் உணவை உட்கொண்ட உடனேயே சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் இப்படி உணவு உட்கொண்ட பின் 1 சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள். உணவை உண்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படுத்தப்படும். மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு பாய ஆரம்பிக்கும்.

எப்போதும் உணவு உண்பதற்கு முன் தான் பழங்களை சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும். அதைவிட்டு உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும்.

சிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமாவதற்கு டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது அசிட்டிக்கை வெளியிட்டு, செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும்.

இரு­தய நோய்க்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு உதவும் விற்­றமின் டி :புதிய மருத்­துவ ஆய்வு

Image title

இரு­தய நோயால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விற்­றமின் டி ஆனது பெரிதும் உத­வு­வ­தாக புதிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

சுமார் 70 வய­து­டைய மார­டைப்­புக்­குள்­ளான 163 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்வின் பிர­காரம் சூரிய ஒளியி­லி­ருந்து கிடைக்கப் பெறும் விற்­றமின் டி போஷ­ணை­யா­னது உட­லெங்கும் குரு­தியை விநி­யோ­கிப்­ப­தற்­கான அவர்­க­ளது இரு­த­யத்தின் ஆற்­றலை அதி­க­ரிப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.

லீட்ஸ் போதனா வைத்­தி­ய­சா­லையைச் சேர்ந்த குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் முடி­வுகள் சிக்­காகோ நகரில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அமெ­ரிக்க இரு­த­ய­வியல் கல்­லூ­ரியின் 65 ஆவது வரு­டாந்த உச்­சி­மா­நாட்டில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

விற்­றமின் டி போஷணை ஆரோக்­கி­ய­மான எலும்­புகள் மற்றும் பற்­க­ளுக்கு அவ­சி­ய­மா­க­வுள்­ள­துடன் முழு உட­லி­னதும் நல­னுக்கு மிகவும் அத்தியாவ­சி­ய­மானதாக கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் பலர் இந்தப் போஷ­ணையை போதி­ய­ளவில் பெறா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வய­தா­ன­வர்கள் சூரிய ஒளியில் நட­மா­டு­வது மிகவும் குறை­வாக உள்­ள­துடன் சூரிய ஒளியைப் பயன்­ப­டுத்தி விற்­றமின் டி போஷ­ணையை உற்­பத்தி செய்­வ­தற்­கான அவர்­க­ளது தோலின் ஆற்­றலும் மிகவும் குறை­வா­க­வுள்­ள­தாகக் கூறிய இந்த ஆய்வில் பங்­கேற்ற இரு­த­ய­வியல் நிபு­ண­ரான மருத்­துவ கலா­நிதி கிளோஸ் விட், தாம் ஆய்வில் பங்­கேற்ற வயோ­தி­பர்­களில் ஒரு பகு­தி­யி­ன­ருக்கு வரு­ட­மொன்­றுக்கு தின­சரி 100 மைக்­ரோ­கிராம் விற்­றமின் டி மாத்­தி­ரை­யையும் மற்­றைய பகு­தி­யி­ன­ருக்கு மருந்­தற்ற இனிப்பு மாத்­தி­ரை­யையும் வழங்கி இந்த ஆய்வை மேற்­கொண்­ட­தாக தெரி­வித்தார்.

இதன் போது விற்­றமின் டி மாத்­தி­ரையை உள் எடுத்­த­வர்­களின் இரு­த­யத்தின் குரு­தியை உட­லெங்கும் விநி­யோ­கிக்கும்

ஆற்­ற­லா­னது 26 சதவீதத்­தி­லி­ருந்து 34 சத வீதமாக அதிகரிக்கின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது. விற்றமின் டியை சூரிய ஒளி யிலிருந்து மட்டுமல்லாது எண்ணெய்த் தன்மையான மீன்கள், முட்டைகள் மற்றும் காலை நேர தானிய (சீரியல்) உணவுகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் .

ஆரோக்­கி­ய­மான வய­தா­ன­வர்­களில் இரு­த­யத்தின் குருதி விநி­யோக ஆற்றல் 60 சத­வீ­தத்­துக்கும் 70 சத­வீ­தத்­துக்கும் இடைப்பட்­ட­தாகவுள்ளது.

மருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்

Image title

மருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் அமைந்துள்ள மருந்துக் களஞ்சியங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரச ஔடத சட்டவாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்துத் தட்டுப்பாடு நிலவுமாயின், அதனை தவிர்த்தல், விலைமனு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மருந்து விநியோகம் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசேட கவனம் செலுத்துமென அமைச்சு மேலும் கூறியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவனின் பரிதாப நிலை

Image title

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவர் வாகன விபத்தினால் சுய நினைவிழந்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்ற எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் ஷசீன் கவிந்து நெத்மின உட்பட அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டுவதற்காக சப்ரகமுவ மாகாண சபையினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவர் ஷசீன் கவிந்து உள்ளிட்ட சிலர் பயணித்த வேன், தனியார் பஸ்ஸொன்றுடன் மோதியது.

இந்த விபத்தின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷசீன் கவிந்து நெத்மின, இரத்தினபுரி பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றதை அடுத்து குணமடைந்தார்.

எனினும், இந்த நிலை சில தினங்கள் மாத்திரமே நீடித்தது.

புலமைப்பரிசில் பரீட்சையில் பலவற்றை நினைவில் வைத்து 188 புள்ளிகளைப் பெற்ற ஷசீன் கவிந்து நெத்மினவுக்கு தற்போது எதுவும் நினைவில் இல்லை.

மாணவனின் தலையினுள் காயமேற்பட்டுள்ளமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வளமான எதிர்காலத்திற்காக முதல் படியை எடுத்து வைத்த ஷசீன் கவிந்து நெத்மினவின் இந்த பரிதாப நிலையைக் குணப்படுத்துவதற்காகும் செலவைக் கூட ஈடு செய்ய முடியாமல் பெற்றோர் பரிதவிக்கின்றனர்.

எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்

Image title

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல்தொடர்புகள் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் 1000 இற்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது.

ஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 இலட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிக்கா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸிக்காவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிக்கா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோன்டுராஸ் மற்றும் நிகாரகுவா நாடுகளில் தலா ஒரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து ஹோன்டுராஸ் நாட்டில் 3,200 பேருக்கும், நிகாரகுவாவில் 29 பேருக்கும் இந்நோய் தொற்று பரவியுள்ளது, தெரியவந்துள்ளது.

நியூயோர்க் நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தாக்கம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெப்ப பிரதேசமாக கருதப்படும் புளோரிடா மாநிலத்தில் ஸிக்கா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

அங்குள்ள தட்பவெப்ப நிலை ஸிக்கா வைரஸை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக சாதகமாக அமைந்துள்ளதால், புளோரிடா மாநிலம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் ரிக் ஸ்காட் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட், மியாமி-டாடே, டம்பா பிராந்தியத்தில் உள்ள ஹில்ஸ்பரோ, தென்மேற்கில் உள்ள லீ கவுன்ட்டி மற்றும் சான்ட்டாரோஸா கவுன்ட்டியில் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புயலைப்போல இந்த நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸிக்கா வைரஸ் பரவுவதையடுத்து சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஐந்தாவது மாநிலம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸிக்கா நோய்த்தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் ஸிக்கா பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ சில டிப்ஸ்…

Image title

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்…

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்        சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ்  சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால்,  எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து  அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய்  வழிவது குறையும்.

* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து  முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி,  முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து  வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண் ணெய்  தன்மை குறையும்.

முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க…

* குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க  வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று  விடும்.

* பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு  முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும்,முகத்தில் ரோமங்கள் வளராது.

68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை (04) அட்டாளைச்சேனையில்

Image title

அபு அலா –

இலங்கையின் 68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை ஒன்றை நாளை காலை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடாத்தவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (03) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடாத்தவுள்ள இந்த நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை காலை 7.30 மணிக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை இப்பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவை அட்டாளைச்சேனை பிரதான வீதியினூடாகச் சென்று பிரதேசத்திலுள்ள சகல உள்ளக வீதிகளினூடாகவும் வலம்வரவுள்ளது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இன்றிரவு 8.00 மணியுடன் தங்களின் இரவுநேர உணவுகளை உட்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.