நிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம்

பள்­ளி­வா­சல்­களில் முஸ்லிம் பெண்­க­ளுக்கும் தொழுகை நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும் என்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்­யப்­பட்ட மனுவை இந்­தி­யாவின் உயர் நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

அகில பாரத இந்து மகா­சபா அமைப்பின் கேரளா கிளையின் தலைவர் சுவாமி தத்­தாத்­ரேய சாயி ஸ்வரூப் நாத் என்­பவர் கேரள மேல் நீதி­மன்றில் இவ்­வ­ழக்கைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

இம் மனுவை குறித்த நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது. இந் நிலையில் இதற்கு எதி­ராக அவர் இந்­திய உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந் நிலையில் நேற்று முன்­தினம் இந்­திய உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகாய் தலை­மை­யி­லான அமர்வில் இவ் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

விசா­ரணை தொடங்­கி­யதும், இந்த மனுவை தாக்கல் செய்ய மனு­தா­ர­ருக்கு முகாந்­திரம் ஏதும் இல்லை என்று கூறிய நீதி­ப­திகள், கேரள மேல் நீதி­மன்றம் ஏலவே வழங்கி தீர்ப்பில் இந்த மனு வெறும் விளம்­ப­ரத்­துக்­காக மட்­டுமே தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறி­ய­தையும் சுட்­டிக்­காட்­டினர். மேலும், ஒரு முஸ்லிம் பெண்­மணி முன்­வந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்தால் அந்த மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்து கொள்ளத் தயாராகவுள்ளோம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

கட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில்

தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இன்று -27- குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று  சிறிலங்கா வரவுள்ளார்.
அதிகாரபூர்வ வெளியாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தரித்துச் செல்லவுள்ளார்.
தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.
இரு தலைவர்களும் குறுகிய நேரப் பேச்சுக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல்

எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது முர்ஸியின் உடல் எகிப்தின் கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
முர்ஸிக்காக பாலஸ்தீனம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் ஜனாஸா (காயிப்) தொழுகை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது – ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம்

– திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது –
இலங்கை கிழக்கு, வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு  வருமாறு மு.க. ஸடாலினை திங்கட்கிழமை காலை சந்தித்த போது  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் திங்கட்கிழமை காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸடாலினை அவரது இல்லத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு ரவூப் ஹக்கீம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் ரவூப் ஹக்கிமிக்கு மு.க. ஸடாலின் ரவூப் ஹக்கீம்க்கு நினைவு பரிசை வழங்கினார்.
இந்த சந்திப்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விரைவில் தமிழக முதல்வராக வந்து மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார்.
நீங்கள் விரைவில் இலங்கை வரவேண்டும் அங்குள்ள கிழக்கு மற்றும் வடக்கு மாகாண   மக்களையும் மலையக மக்களையும் நீங்கள் சந்தித்து உரையாட வேண்டும் . ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கொடுக்கிறோம்.
மு.க. ஸடாலின் ரவூப் ஹக்கிடம் சமீபத்தில் இலங்கை நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை குறித்து கேட்டார் அதற்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியல் பின்புலம் இருக்கிறது என்றும் விரிவாக எடுத்து கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. என்று விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இலங்கையில் நடைபெறும் பல்வேறு அரசியல் மற்றும் தமிழர்கள் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள்.
இந்த சந்திப்பின் போது சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கிழக்கு மாவட்ட பொருளாளர் இசட். ஆசாத், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது,  நெல்லை மேற்கு மாவட்ட எம்.எஸ்.எப். பொருளாளர் ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி உள்பட பலர் உடன் இருந்தார்கள்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற மோடியை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து வழிபாடுகளை முன்னெடுத்த மோடி, பேராயரிடம் குண்டு தாக்குதல் தொடர்பாக கேட்டறிந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமரை விமாநிலையத்தில் வரவேற்றார்.

 

மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே கெட்ட செய்தி – அமெரிக்க இங்கிலாந்து பத்திரிகைகள் தாக்குதல்

தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கி விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் மிகப்பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்ற தனி மனிதர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மோசமான செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி என்று கார்டியன் விமர்சித்துள்ளது.
இந்து உயர் சாதியினர் ஆதிக்கம், பெரு முதலாளிகளிக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்றும் கார்டியன் எச்சரித்துள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. மோடி சிறந்த பிரச்சாகர் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள கார்டியன், பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
இதே போல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தி கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உலகளவில் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவை ஆகும். இவை இரண்டுமே மோடி வெற்றி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்

புதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 25முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
1, நவாஸ் கனி – தமிழ் நாடு
2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்
3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் – பிஹார்
4, டாக்டர் முஹம்மது ஜாவித் – பிஹார்
5, ஹஸ்னின் மசூதி – கஷ்மீர்
6, முஹம்மத் அக்பர் லோன் – கஷ்மீர்
7, ஃபாரூக் அப்துல்லா – காஷ்மீர்
8, ஏ. எம்.ஆரிஃப் – கேரளா
9, ஈ.டி.முஹம்மது பஷீர் – கேரளா
10, முஹம்மது ஃபைசல் – லக்‌ஷதீவு
12 இம்தியாஸ் ஜலீல் – மஹாராஷ்டிரா
13, அசாதுத்தீன் உவைசி – தெலுங்கானா
14, குவார் தானிஷ் அலி – உத்திர பிரதேசம்
15, அஃப்சல் அன்சாரி – உத்திர பிரதேசம்
16. ஹாஜி முஹம்மது யாகூப் – உத்திர பிரதேசம்
17, எஸ்.டி. ஹசன் – உத்திர பிரதேசம்
18, முஹம்மது அசாம்கான் – உத்திர பிரதேசம்
19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் – உத்திர பிரதேசம்
20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் – உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி – மேற்கு வங்கம்
22, காலிகுர்ரஹ்மான் – மேற்கு வங்கம்
23, அபூ தாஹிர் கான் – மேற்கு வங்கம்
24, சஜாத் அஹமத் – மேற்கு வங்கம்
25 ் குஞ்ஞாலி குட்டி. கேரளா

இலங்கையில் மத சிறுபான்மையினர், ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் நாட்டை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருவதாக  தெரிவித்துள்ளது.
இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது.
இந்நிலையில், இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம், எதிர்க்கட்சி, சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகிறது.
எவ்வாறாயினும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்நிலையில், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு ஐ.நா. ஆதரவு வழங்கும்.
நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் விரோதப் போக்கினால் Tamil Win & Lanka Sri க்கு எழுதுவதை நிறுத்திக் கொண்ட எம்.எம்.நிலாம்டீன்

கடந்த 4 வருடங்களை கடந்தும் சுவீஸ் நாட்டில் இருந்து அட்மின் மூலமாக இய்ங்கும் தமிழ் வின் லங்கா சிறீ இணைய தளங்கள் ஊடாக இலங்கை நிலவரங்கள் பல இரகசிய தகவல்கள் அடங்கிய நேர்காணல்கள் மற்றும் அவசர செய்திகள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஒரு ஊடக பயணத்தை திறம்பட செய்துள்ளேன்.

எனது செய்திகள் நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் மிக அதிகமாக தமிழ் உலகம் முளுவதும் ரீச் ஆகியுள்ளது .. தமிழ் வின் லங்கா சிறீ இணைய தளங்களின் வரலாற்றிலே எனது நேர்காணல்கள் மட்டுமே You Tube ல்‌ மிக அதிகமாக Reach ஆகியுள்ளது .எல்லாப் புகளும் இறைவனுக்கே சமர்ப்பணம் .

Tamil Win > Lanka siri > JVP தளங்களின் owner சிறிகுகன் ( சுவிஸ் ) மற்றும் தமிழ் வின் நெறியாளர் தமிலரசு ( அசோக் ) ஆகிய இருவருக்கும் என்றும் கடமை பட்டுள்ளேன் .

நேற்று வரைக்கும் இலங்கை தீவுக்குள் தமிழ் ஊடகங்களில் write பண்ணி வந்த எனக்கு இன்று உலகம் முளுவதும் பரந்து ? பறந்து வாளும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகனாக அதுவும் தமிழ் மக்களால் அதிகளவு பார்க்கப்படும் நோக்கப்படும் கேட்கப்படும் ஒரு ஆய்வாளராக வலம் வந்தேன்.

எந்தவொரு முஸ்லிம் ஊடகருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது .இந்த இடத்தில் நமது R.சிவராஜா அவர்களுக்கு இதயம் நிறைந்த Thanks ..காரணம் நமது R.சிவராஜா அவர்கள் சுடர் ஒளியில் தந்த வாய்ப்புக்கள் என்னை இன்று ஈரோப்பிய தேசம் முளுவதும் இளுத்துச்‌ சென்றுள்ளது.

என்னதான் நாம் திறமை என்றாலும் ஒரு அரங்கேற்ற மேடை வேண்டாமா? என்னை தமிழ் பேசும் உலகம் முளுவதும் அரங்கேற்றிய பெருமை தமிழ் வின் நெறியாளர் தமிலரசு ( அசோக்) இவரையே சாரும் சேரும் .நல்ல நெறியாளர் ..இருவரும் சிறப்பாக பயணித்தோம்.
இவர்களை நான் என்றும் மறக்க முடியாது .

இன்று என்னை Australia >கனடா எல்லாம் நேர்காணல் கேட்டு வருகின்றார்கள் என்றால் தமிழ் வின் தளமும் இந்த தமிலரசும் தான் முளுக் காரணம் . என்னை அறிமுகமாக்கிய பெருமைக்கு இந்த தமிலரசு முளுப் பொறுப்பு ….

இப்போது இந்தக் குண்டு வெடித்த நாள் தொட்டு இன்று வரையும் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் தமிழ் பெண்களை கடத்தி ஜிகாத்தாக மாற்றி குண்டு வெடிக்க வைப்பது என்றும் ..

ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை நோக்கி இந்த 4 ஊடகங்கள் மற்றும் bettinaatham>betrinews இங்கும் சகல தமிழ் ஊடகங்களும் மிகவும் மோசமாக முஸ்லீம்கள் மீது காள்ப்புணர்ச்சி கொண்டு சோனிகளை ஒரு vali பண்ண வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்து வஞ்சம் தீர்ப்பது போன்று செய்து வருகின்றார்கள்..

தமிழ் வின் செய்தி ஒன்று முஸ்லிம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு செய்தியின் உள்ளே பார்த்தால் வெங்காயம் பாண் வெட்டும் கத்திகள் .இப்படி ஏராளம் .

இப்படியாக சோனிகளை பளி தீர்க்கும் படலம் ஒன்றை ஒட்டு மொத்த தமிழ் ஊடக வெறியர்கள் அரக்க குணம் கொண்டு ஒரு கலவரத்தை கொண்டு வரும் நோக்கோடு செயல்பட்டு வருக்கின்ரானுகள்.

அதனால் இந்த தேனிலவு கடந்த 03-05-2019 யுடன் முடிந்து விட்டது .இந்த தளங்களில் நிராஜ் டேவிட் இல்லை என்றால் அல்லது அவர் விலகிச் சென்றால் நான் மீண்டும் தொடரும் வாய்ப்பு வரலாம்.நிராஜ் அங்கு ஊதியம் பெற்று வேலை செய்கின்றார். நீண்ட காலம் வேஷம் விஷம் நீடிக்காது..பார்ப்போம் .In the name god….

லண்டன் ஐ‌பி‌சி பெருத்த நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.ஆனால் Tamil Win > Lanka siri > JVP தளங்கள் மட்டுமே இலாபத்தில் இயங்கி வருகின்றது.இந்த தளங்கள் மூலமாக கிடைக்கும் இலாப பணத்தின் மூலமே இவர்களின் லைஃப் போகின்றது.

. Tamil Win > Lanka siri ஆகிய இரண்டு தளங்களையும் கடந்த 4 ஆண்டுகள் கடந்தும் வளர்த்த பெருமை எனக்கு நிறைய உண்டும் ,05 சதமும் ஊதியம் பெறாமல் இலவசமாக அவர்கள் நினைத்த நேரத்தில் விரும்பிய வாறு நேர்காணல் கொடுத்துள்ளேன். இன்று வரை அவர்களிடம் நான் 05 சதம் ஊதியம் பெற்றதில்லை.. நான் ஊதியம் பெறும் ஊடகனும் இல்லை .

Tamil Win > Lanka siri > JVP இணைய தளங்களின் உரிமையாளர் சிறிகுகன் அவர்கள் தனது உடல் நிலையால் IBC கம்பனிக்கு கடந்த வருடம் விற்று விட்டார்.

அதனால் Tamil Win > Lanka siri > JVP இணைய தளங்கள் IBC யுடன் இணைத்து விட்டார்கள் .
இப்போது லண்டனில் இருந்து இயங்கும் IBC TV யுடன் இணைந்துள்ள Tamil Win > Lanka siri > JVP ஆகிய இணைய தளங்களையும் மட்டக்களப்பு நிராஜ் டேவிட் ( காலம் சென்ற முன்னாள் மட்டு MP ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மருமகன் ) தலமை பொறுப்பு எடுத்துள்ளார்..

இந்த நிராஜ் டேவிட் இந்த தளங்களில் புகுந்த பின்னர் முற்றாக தமிழ் முஸ்லிம் இனவாதத்தை கக்கும் இல்லை விஷம் கக்கும் தளமாக மாறி விட்டது.அதனால் இந்த தளங்களில் எனக்கு இருந்து வந்த தேன் நிலவை முறித்து விட்டேன்.

இனவாதம் என்ற தீ மூட்டி குளிர்காய்ந்த யாரும் இந்த பிரபஞ்சதில் உயிரோடு இல்லை.அப்படியான அரக்க குணம் கொண்டவர்களின் குடும்பம் கூட மிஞ்சுவதில்லை .அப்படியானவர்கள் இந்த பிரபஞ்ச்தில் அவல சாவுகளை காண்பர்.நிச்சயம் நடக்கும் .அறிவோம் .

நல்ல மனங்களின் சாபத்திக்கு நிச்சயம் ஆளாகுவார்கள். ஒரு கிறிஸ்தவ குடும்பதில் பிறந்து வளர்ந்த இவர்கள் கேவளம் ஊடக தர்மத்தை புதைத்து விட்டு தமிழ் முஸ்லிம் துவேசத்தை விதைத்து இந்த இரண்டு இனமும் சேர முடியாத வாறு விஷம் கக்கி வருவது மனித சாபத்திக்குரியது .

இன உறவு வேண்டித்தான் இந்த ஊடக பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் இந்த தமிழ் இனவாதிகள் விடமாட்டானுகள்.இங்கு சக்தி காரனுகள் இப்படியாக இனவெறியை கக்கி வருக்கின்றானுகள்.இனிமேலும் தமிழ் முஸ்லிம் உறவு வருமா என்பதில் எனக்கு நிம்பிக்கை இல்லை..

எனது கண்டனத்தை சொல்லி விட்டு இனிமேல் உங்களுடன் பயணிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டேன் .

M.M. Nilamdeen.

ஓமான் சென்ற ரிஷாட் நாடு திரும்பினார்

ஓமானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டி ருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலை நாடு திரும்பினார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவிக்ரம ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில் ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

திருமணம் செய்யாமலே பிள்ளைபெற்ற, நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறிஇ ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது.
இதனால் அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் அதே ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகினார். அதனை தொடர்ந்து, அக்கட்சியின் செல்வாக்கு மிக்கவரும், ஆக்லாந்தின் ஆல்பர்ட் மவுண்ட் தொகுதியின் பெண் எம்.பி.யுமான ஜெசிந்தா தலைவர் பதவியை ஏற்றார்.
பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது.
ஜெசிந்தா பிரதமராக பதவி ஏற்றார். 37 வயதில் பிரதமரானது மூலம் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார்.
பெண்ணியவாதியான ஜெசிந்தா பிரதமர் ஆவதற்கு முன்புஇ தனியார் தொலைக்கட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டுடன் காதல் வயப்பட்டார். 2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினை தொடர்பாக ஜெசிந்தாவை, கிளார்க் கேபோர்டு சந்தித்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இந்த ஜோடிக்கு காதல் பரிசாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானில் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. ஜெசிந்தா நாட்டு பிரச்சினைகளை பார்க்க வேண்டியிருப்பதால், கிளார்க் கேபோர்டு தனது தொகுப்பாளர் பணியை துறந்துவிட்டு, வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் திருமணத்துக்கு நிச்சயம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஈஸ்டர் விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயம் நடந்ததாக ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

புர்கா தடை மீதான, இலங்கையின் முடிவு துணிகரமானது. மோடியும் இதை பின்பற்ற வேண்டும் – சிவசேனா பிடிவாதம்

இலங்கையை போன்று இந்தியாவிலும் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையை போல் இந்தியாவிலும் புர்கா அணிவதை தடை செய்யுமாறு சிவசேனா அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சிவசேனா அமைப்பின் உத்தியோகப்பூர்வ நாளிதழான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாளிதழில் இலங்கையின் முடிவு துணிகரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கையை பின்பற்றி இந்தியாவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எனது நாட்டை விட்டுவிடுங்கள் – ISIS பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரியின் செய்தி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்
ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்கு தெரிவிக்கவிரும்புவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பு  சிறியநாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த தசாப்தத்தில் இலங்கையிலிருந்து சென்று ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற சிறிய குழுவினர் குறித்து அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணைகளின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தங்கமங்கை கோமதிக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு!

திருச்சி விமானநிலையத்தையே திக்குமுக்காட வைத்தனர். திருச்சி வாசிகள். விமானநிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே 1 மணிநேரத்திற்கு மேலாக பொதுமக்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சால்வை ஆளுயர ரோசமாலை அணிவித்து மகிழ்ந்தனர்.

தங்க மங்கை கோமதி மாரிமத்து திருச்சி விமான நிலையத்தில் பேசிய போது…

ஆசிய போட்டியில் தங்கம் வெல்ல நான் ஓடும் போது காலணி கிழிந்திருந்தது உண்மை.

அது என்னுடைய அதிர்ஷ்ட காலணி. அனைத்து தரப்பினரும் என்னை பாராட்டுவது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வது.

திருச்சி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு. சொந்தவூரான முடிகண்டம் ஊருக்கு முன்னதாக மணிண்டம் பகுதியில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது பேசியது அரசு தரப்பில் எனது கிராமத்திற்கு சாலை வசதியும் பேருந்து வசதியும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளேன்.

என்னை போல் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு உருவாக வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எனக்கு பயிற்சி அளிப்பதற்காக எனது தந்தை உறுதுணையாக இருந்தார் . அவர் தற்போது என்னோடு இல்லாதது கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்று கண்ணீர் மல்க கோமதி கூறினார்.