பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை – ரணில்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எனினும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறினார்.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை, பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“2020ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுமா? அவ்வாறு இல்லையென்றால் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றாவது முன்வைக்கப்படுமா? அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு இடைக்கால கணக்கறிக்கை மூலமாக நிதி ஒதுக்கும் நிலையில் அரசாங்கதின் வரவு அதிகரிக்காது செலவு மட்டுமே அதிகரிக்கும்.
அதனை தொடர்ந்து மீண்டும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் நிலையில் அதன் பின்னர் வரும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க எழுப்பிய பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் நபருடைய ஆட்டோ, மோட்டார் கைக்கிள்களுக்கு தீ வைப்பு

இன்று வெள்ளிக்கிழமை -30- அதிகாலை 03.00 மணியளவில் ஆனமடுவ, சங்கட்டிக்குளம் பகுதியில் நியாஸ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றும் 2 மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு – வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், இந்தப் பேச்சு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது. ஐதேக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
கடைசியாக நடந்த மூன்று அதிகர் தேர்தல்களிலும் இந்தக் கட்சி ஐதேக தலைமையிலான கூட்டணி நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்து வந்தது.

கோத்தாபயவை தோற்கடிக்கும் சூத்திரம் தயார், வாக்குறுதிகளை மறந்துவிட்டார் மைத்திரி

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான யாப்பை உரு­வாக்கும் பணிகள்    முழு­மை­ய­டைந்­துள்­ளன. ஜன­நா­யக தேசியக் கூட்­டணி கைச்­சாத்­தி­டப்­படும் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார்.
எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தனது குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்­கி­யதை போன்று குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்க வேண்­டிய தேவை எமக்கு  கிடை­யாது என்று  சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
அல­ரி­மா­ளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜன­நா­யக தேசிய முன்­னணி
ஐக்­கிய தேசிய முன்­னணி தனது பங்­காளி கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து உரு­வாக்க தீர்­மா­னித்­தி­ருந்த ஜன­நா­யக தேசிய முன்­னணி கடந்த மாதம் 5ஆம் திகதி நிறைவு பெறும் நிலையில் இருந்­தது. உரு­வாக்­கப்­பட்ட கட்சி யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ளவேண்­டிய தேவை காணப்­பட்­டதால்  கூட்­டணி விவ­காரம் பிற்­போ­டப்­பட்­டது.
கட்­சியின் யாப்பு உரு­வாக்கம் தொடர்பில் கடந்த இரண்டு வார கால­மாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில்  பேச்­சு­வார்த்தை இடம்பெற்­றது. பங்­காளி கட்­சி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் கட்­சியின் தலை­மைத்­துவ சபை­யினால் பெயர் குறிப்­பி­டப்­பட்டு  கூட்­ட­ணியின் ஊடாக தெரிவு செய்­யப்­ப­டுவார். பொதுச்­செ­ய­லாளர் காரி­யா­லய  செயற்­பா­டுகள் சுயா­தீ­ன­மாக செயற்­படும். உள்­ளிட்ட விட­யங்கள் தற்­போது  நிறைவுப் பெற்­றுள்­ளன.  அடுத்த மாதத்தின் முதல் வாரத்­திற்குள் கூட்­டணி நிச்­சயம் ஸ்தாபிக்­கப்­படும்.
கொள்கை திட்டம்
ஜன­நா­யக தேசிய  முன்­ன­ணியின் கொள்கை திட்­டங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார். புதிய அர­சியல் பய­ணத்தை நோக்­கிய  கொள்கை திட்டம் உரு­வாக்­கப்­படவேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.
 கொள்­கைத்­திட்டம் உரு­வாக்­கலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க,  மனோ கனேசன், ரிஷாத் பதி­யுதீன்,  அகில விராஜ் காரி­ய­வசம், ரவி கரு­ணா­நா­யக்க, கபீர் ஹசிம், மற்றும் திகாம்­பரம் ஆகியோர்  செயற்­ப­டு­வார்கள்.  தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அர­சி­யல்­வா­தி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும்.
ஐ.தே.க. வின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்கை
கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு அப்பால்  சென்று  செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எவரும் விதி­வி­லக்கு கிடை­யாது.  வீதி­களில்  கோஷம் எழுப்பி  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை  தெரிவு செய்ய முடி­யாது. கடந்த நாட்­களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்த பேரணி கட்­சி­யினை அவ­ம­திப்­ப­தா­கவே  காணப்­பட்­டது.
கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­னையும், கொள்­கை­க­ளையும் இழி­வுப்­ப­டுத்தி ஒரு­போதும் ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கிய பத­வி­களை ஒரு­போதும் பெற்று விட முடி­யாது. கட்­சி­யினை பலப்­ப­டுத்­தியே சிறந்த அர­சி­யலை முன்­னெ­டுத்து செல்லவேண்டும்.
ஊடக  சுதந்­திரம்
நல்­லாட்சி அர­சாங்கம் ஊட­கங்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்த சுதந்­திரம் தற்­போது மறக்­கப்­பட்­டுள்­ளது. இன்று  சில ஊட­கங்கள்  ஊடக தர்­மத்­திற்கு அப்பாற் சென்று செயற்­ப­டு­வது வருத்­தத்­திற்­கு­ரி­யது.  இன்று  ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட அரச அதி­கா­ரிகள் ஊட­கங்­க­ளினால்  சரியோ, பிழையோ பகி­ரங்­க­மாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றார்கள். ஆனால் கடந்த நான்கு வருட கால­மாக எந்த ஊட­க­வி­ய­லா­ளரும் படு­கொலை செய்­யப்­ப­டவும், இல்லை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கவும் இல்லை.
கடந்த அர­சாங்­கத்தில் ஊடக சுதந்­திரம் எவ்­வாறு  காணப்­பட்­டது என்­ப­தற்கு  லசந்த  விக்­ர­ம­துங்க உட்­பட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை  ஒரு எடுத்­துக்­காட்­டாகும்.  ஜன­நா­ய­கத்தை மீறி சர்­வா­தி­கா­ர­மாக செயற்­பட்­ட­வர்கள் இன்று  ஜன­நா­யகம் பற்றி கருத்­து­ரைப்­பது நகைப்­பிற்­கு­ரி­யது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் அப்­போது மதிக்­கப்­ப­ட­வில்லை.  இதன் தொடர்ச்­சியே  பொது­ஜன பெர­மு­னவின் இளைஞர் மாநாட்டில் இடம் பெற்­றது.
 படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க மற்றும் ரக்பி வீரர் தாஜீதின் ஆகி­யோ­ரது உற­வி­னர்­களை காணும் போது வெட்கி தலை­கு­னிய வேண்­டிய நிலை தற்­போது காணப்­ப­டு­கின்­றது.  சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக செயற்­பட்ட  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015ஆம் ஆண்டு தேர்தல் பிரச்­சார மேடை­களில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் அனைத்­தையும் முழு­மை­யாக மறந்து விட்டார்.
தமிழ் மக்கள்
வடக்கு  உள்­ளிட்ட நாட்டில் வாழும்  தமிழ் மக்கள் இன்று உரி­மைக்­காக வீதியில் இறங்கி   சிங்­கள மக்­க­ளுக்கு  நிக­ராக அர­சாங்­கத்­தினை விமர்­சிக்­கின்­றார்கள். இந்த சுதந்­தி­ரமே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான வெற்­றி­யாகும். கடந்த அர­சாங்­கத்தில் தமிழ் மக்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. எவரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்படவில்லை.  இனவாத அரசியலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்  பாதுகாக்கப்படும்.
 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யும் சூத்திரம் பலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுந்த பதிலடி வழங்கப்படும். தமிழ்  மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை முதலில் உருவாக்கி அதனூடாக ஜனநாய மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சம் தண்டனை  பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

மாலைதீவு போய் வந்தபிறகு, வேட்பாளரை அறிவிப்பேன் – இராஜதந்திரிகளிடம் ரணில் உறுதி

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்துடன் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, நோர்வே உள்ளிட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளின் தூதுவர்கள் பலரும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின், அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே, மாலைதீவுக்கு வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின் பின்னர், புதிய கூட்டணி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராஜதந்திரிகளிடம் எடுத்துக் கூறினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.
அதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு வரையும் பணிகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதன்படி கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை காபட் வீதியில் மோசடியா?

யாரின் பிழை?

அண்மையில் எமது அட்டாளைச்சேனையில் பல உள்ளக வீதிகள் காபட் வீதிகளாக போடப்பட்டுள்ளமை மிகவும் சந்தோசமான விடயமாகும் இதற்கு தூண்டுகோளாக இருந்த அரசியல்வாதிகளை இவ்விடத்தில் பாராட்டியே ஆகவேண்டும்.இருப்பினும் இவ்வாறாக போடப்பட்ட காபட் வீதிகளின் தரம் எத்தகையது அதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரம் எவ்வாறானது என்பது பரீட்சீக்கப்பட்டதா?

இவ் வேலைக்கான ஒப்பந்த்த்தை பெற்றுக் கொண்டவர்கள் சரியான முறையில் வேலைகளை முடித்துள்ளனரா? என்பது பற்றி வினாவும் எழுகின்றது இதற்கு பொருப்பாகவுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் சரியான முறையில் மேற்பார்வை செய்துதான் இவ் வேலைகள் நடைபெற்றதா என்பன இங்கு ஆராயப்படவேண்டிய விடயங்களாகும்

ஏனெனில் அண்மையில் போடப்பட்ட அட்டாளைச்சேனை கடற்கரை காபட் வீதியானது மிகவும் மோசமான தரம் குறைந்த மூலப்பொருட்கள் கொண்டு போட்பட்டுள்ளதாகவே காணப்படுகின்றது . வீதியோரத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் Stand இல் நிறுத்தி வைக்கப்பட்ட போது அந்த Stand காபட்டினுள் புதைந்து கீழே விழுந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் இங்கு காணப்படுகின்றன. எனவே இங்கு யாரின் பிழை நடந்துள்ளது என்பது அறியப்படவேண்டிய ஒரு விடயமாகும். எனவே இதற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்….

தகவல் – Arsath Bihari

சஜித்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள், குழப்பம் ஏற்படுத்துவோரை விலக்குங்கள் – பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியின் கொள்கையையும் மீறியே செயற்பட்டு வருகின்றார்.கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.
அதேபோல் இன்று சஜித் பிரேமாதாசவுடன் ஒரு அணி உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களை தவிர பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதமருடன் இணைந்து கட்சிக்காக செயற்பட  தயாராக உள்ளனர். ஆகவே கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்தும்  நபர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதே நல்லதென நான் நினைக்கிறேன். அவர்கள் வெளியேறினால் எம்மால் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் உள்ள இழுத்தடிப்புகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(ஆர்.யசி)

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.பி.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், எஸ்.பி.திஸாநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்ரியை சந்தித்தார் கோட்டா – முக்கியமான தீர்மானங்கள் எட்டப்பட்டன !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்தது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டு பேசி பல முக்கியமான தீர்மானங்களை எட்டியுள்ளதாக தகவல். அந்த தீர்மானங்களை இப்போதைக்கு பகிரங்கப்படுத்தாதிருக்கவும் இருவரும் உடன்பட்டுள்ளனர் .

குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கூட்டணி அமைக்க நடந்துவரும் பேச்சுக் குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த தரப்பில் பேச்சுக் குழுவுக்கு பசில் ராஜபக்ச தலைமை வகிப்பாரென தெரிகிறது. சுதந்திரக் கட்சியில் தமக்கு நெருக்கமான சிலரை மைத்ரி பெயரிடவுள்ளதாக அறியமுடிந்தது.

இந்த சந்திப்பின்பின்னரே- கோட்டாபய வழங்கிய விருந்துபசாரத்தில் சுதந்திரக் கட்சி எம் பிக்கள் கலந்து கொள்ள மைத்ரி அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மைத்திரிக்கு உரிய அந்தஸ்தை வழங்க கோட்டா இதன்போது உத்தரவாதம் அளித்தாரெனவும் மேலும் அறியமுடிந்தது.

நன்றி -தமிழன்

கஞ்சிபான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறை

கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று (23) தீர்ப்பு வழங்கியது.

5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று (23) விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதியான கஞ்சிபான இம்ரான் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கஞ்சா வைத்திருத்தல் மற்றும் கஞ்சா கடத்தியமை போன்ற 2 குற்றச்சாட்டுகளுக்காக தலா 3 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் 5.300 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் கஞ்சிபான இம்ரான் மீது 2018 செப்டம்பர் 13 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பங்கேற்பு

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரவி ஜயவர்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அவசரகாலச் சட்டம் காலாவதியானது

கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, சிறிலங்கா அதிபர் மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.
அவசரகாலச்சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதையும் சிறிலங்கா அதிபர் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டு வந்த போதும், சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் அதற்கு ஆதரவு அளித்து வந்தன.
இதற்கிடையே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என  நம்புவதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

இணை அமைப்பாளர்கள் நியமித்து சஜித் ஆதரவு எம் பிக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் – ரணில் அதிரடி !

சஜித் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் அமைப்பாளர்கள் பதவிகளுக்கு இணையாக புதிய இணை அமைப்பாளர்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

இதன்படி மாத்தறை , பண்டாரகம உட்பட்ட பல தொகுதிகளுக்கு இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக யாரும் கட்சிக்குள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த அமைப்பாளர்கள் பலர் முயன்று வருவதன் காரணமாகவே ரணில் அதிரடியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ரணிலின் இந்த முடிவால் கலக்கமடைந்துள்ள எம் பிக்கள் , இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை ரணிலிடம் எப்படிப் பெறுவது என்பது குறித்து யோசனை செய்து வருவதாக தெரிகிறது.

தலைவருக்கு எதிராக யாராவது, செயற்பட்டால் கடும் நடவடிக்கை – ஐதேக எச்சரிக்கை

கட்சி தலைவரின் செயற்பாட்டிற்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தேவையான தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வெற்றிபெறுவதற்கான தீர்மானம் கட்சியினால் முன்னெடுக்கப்படும். இதுவரையில் எந்தவொருவரும் பெரஹரவில் செல்லவில்லை.
இந்நிலையில், பலர் குறித்தும் பிரச்சினைகள் உள்ளன. பொருத்தமான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

மங்களவின் வீட்டில், சஜித் – சம்பந்தன் சந்திப்பு, ஜனாதிபதி தேர்தல் பற்றி நீண்டநேரம் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.