முஸ்லிம்கள் தமது உரிமைகளை பேணிப் பாதுகாத்துக் கொள்ள சகலரும் பிரார்த்திக்க வேண்டும். அஸாத் சாலிம்

நாட்டில் நிலையான சமாதானம் நீடிக்கவும், முஸ்லிம்கள் தமது உரிமைகளை பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்  இத்திருநாளில் சகலரும் பிரார்த்திக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகூறும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தியாகத்தின் அடையாளமாக விளங்கும் இத்தினத்தில் நாங்கள் உழ்ஹிய்யாக் கடமை உள்ளிட்ட எமது பணிகளை மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டும். உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் போது நாட்டின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறாமல் அதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தியாகம் என்பது அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. இலங்கையில் கூட தொடர்ந்தும் நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல தியாகங்களை செய்துள்ளோம். பல கோடி சொத்துக்கள், பல உயிர்களையும் இழந்துள்ளோம்.
தற்போதும் முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாமலாக்க பேரினவாதிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் நாங்கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறான நிலையில் நாங்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், தியாக சிந்தையுடனும் செயலாற்ற வேண்டும்.

ஒற்றுமையே எமது சமூகத்தின் பலமாகும். எமக்கெதிராக வரும் சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமைக்காகவும் உலக முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும் இந்நாளில் பிரார்த்திப்போம்,” என்று அஸாத் சாலி வேண்டிக்கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “ஈதுல் அழ்ஹா” ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாக சிந்தையையும், சகிப்புத் தன்மையையும் அதிகம்

வலியுறுத்தும் “ஈதுல் அழ்ஹா” எனப்படும் தியாகத் திருநாளில் நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையையும், நெருக்கடியான காலகட்டத்தையும் கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் உச்ச கட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பெருநாளை நாங்கள் சந்திக்கின்றோம். வெறுப்புப் பேச்சினதும், இனவாத வன் செயல்களினதும் பின்னணியில் அச்சத்திற்கும் நம்பிக்கையீனத்திற்கும் மத்தியில் வாழ நேர்ந்திருப்பதையிட்டு நிம்மதியையும் அமைதியையும் வேண்டி நிற்கும் முஸ்லிம்கள் கவலையடைகிறார்கள்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களும் அன்னாரின் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், ஹாஜரா அம்மையாரும் அன்றைய அரேபிய தீபகற்பகத்தில் முகங்கொடுத்த இன்னல்களுக்கு அவர்களது அளப்பரிய தியாகம் வரலாற்றில் சான்று பகன்று கொண்டிருக்கின்றது.
அதன் வெளிப்பாடாகத்தான் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் ஒன்று திரண்டு தங்களது ஈமானிய உணர்வை பிரகடனப்படுத்துகின்றனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை ஒவ்வோராண்டும் உலகம் கண்டு வியக்கின்றது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் வறுமையிலும் செல்வத்திலும், நோயிலும் சுகத்திலும் தியாகத்தின் வலிமையையும் சகிப்புத் தன்மையின் சிறப்பையும் ஹஜ்ஜுப் பெருநாள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.
இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களது வாழ்வில் மலர்ச்சியும், புத்தெழுச்சியும் ஏற்பட வேண்டுமென மீண்டும் உளப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை
உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது…
:
மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை விசுவாசம் உலகமுள்ள வரை ஞாபக மூட்டப்படும்.இவ்வாறான தியாகங்களை சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கடைப்பிடிப்பதே எமது எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்.ஏகத்துவ மார்க்கங்களைப் பின்பற்றும் யூத, கிறிஸ்தவ மதங்களும் இப்றாஹீம் நபியை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஏகத்துவ ஒற்றுமையுள்ள யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய சமூகங்களைப் பிளவுபடுத்த சில கைக்கூலிகள் களமிறக்கப்பட்டுள்ளதே எமக்கு ஏற்பட்டுள்ள சவால்களாகும்.ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய சில கயவர்களையும் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளே கைக்கூலிகளாகக் களமிறக்கியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் இயேசுநாதரையும் (ஈஷா நபி) இறைதூதரென முஸ்லிம்கள் நம்புகின்றனர். எனவே எமது உறவுகளைப் பிரிக்க எந்த சக்திகளாலும் இயலப் போவதில்லை.எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட ஈஸ்டர் தினத் தாக்குதலை வைத்து எமது சமூகத்தை தனிமைப்படுத்த சில இனவாத சக்திகள் முயன்று தோற்றுவிட்டன.

இச்சோதனை காலங்களில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாக நடந்து கொண்டமை சகோதர சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தினரும் கைக்கூலிகளின் சதித்திட்டங்களுக்கு இரையாகமல் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளை அடையாளம் காணப் பொறுமையாக நடந்து கொண்டமை தீர்க்கதிரிசி ஆப்ரஹாம் (இப்றாஹீம்) நபியின் பொறுமையையே ஞாபகமூட்டுகிறது.

இஸ்லாத்தின் கடமைகளை ஏனைய சமூகத்தினரின்,நம்பிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையாமல் பொறுமை,நிதானமாக மேற்கொள்வது இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். எனவே உழ்ஹியாக் கடமைகளை நிறைவேற்றும் முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாதும் இஸ்லாம் போதிக்கும் ஜீவகாருண்யத்தையும் பின்பற்றுவதே சிறந்தது.

எதிரே வரும் நாட்கள் தேர்தல்களை எதிர் கொள்ளவுள்ளதால் எமது செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதிகள் அரசியல் மூலதனமாக்குவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து விட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரை பெரும்பான்மையினருக்கு எதிரானோராகக் காட்டும் கடும்போக்கர்களின்,
தந்திர நகர்வுக்குள் முஸ்லிம்கள் விழுந்து விடாமல் பக்குவமான முறையில் எமது மார்க்கக் கடமைகளைச் செய்ய வேண்டும்.

கடும்போக்கர்களுக்கு அடிபணியாத, தலைமையை அடையாளம் காணும் வரை, பொறுமையாக இருப்பதே சமுகத்துக்குப் பாதுகாப்பாக அமையுமென்றும் அமைச்சர் ரிஷாத் ஈகைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

மிக விரைவில் பாரதூரமான, விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் – சங்கரத்ன தேரர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நேற்று பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் இன்று வரவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ் மக்களை அரசாங்கமும், த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா? என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் த.தே.கூட்டமைப்பினருடனான அலரிமாளிகை சந்திப்பின் பிரகாரம் நேற்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் நியமிக்கபட்டு வருகை தந்து பகல் 1.30 மணியளவில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சங்கரத்னதேரர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று வந்த கணக்காளர் அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக் கூறியுள்ளார். அவரிடம் முறையான நியமனக்கடிதமோ இடமாற்ற கட்டளைக்கடிதமோ இருக்கவில்லை.

இது எதற்காக நடைபெற்றது? இது தமிழ் மக்களை சீண்டிப்பார்க்கும் நாடகமா? அல்லது பேய்க்காட்டும் நடவடிக்கையா?

இன்னுமின்னும் ஏமாற்றும் செயற்பாட்டில் சென்றுகொண்டிருந்தால் மிக விரைவில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த நாடகம் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. கல்முனை தமிழ் மக்கள் சகல தமிழ் எம்.பிக்களிடத்திலும் என்ன கூறினார்கள் என்பதை சகலரும் அறிவீர்கள்.

இன்னமும் தமழர்களிடையே அரசியல் செய்யவேண்டும் என்றால் நாளைக்கிடையில் நிரந்துர கணக்காளரொருவர் நியமிக்கப்படுவதோடு, தனியான கணக்கும் திறக்கப்படவேண்டும். இதுவே எமது நிலைப்பாடு.இதனை மீறி தேசியம் சர்வதேசம் என்று கூறி பூச்சுற்ற புறப்பட்டால் நாளை இங்கு வரவேண்டிய தேவையிருக்காது.

கோடீஸ்வரன் எம்பியும் கூறியுள்ளார். நான் வருவதென்றால் கணக்காளரோடு தான் வருவதாக. அப்படி வந்தால் வரலாம். இல்லாவிட்டால் தமிழ் மக்கள் நல்ல பதிலை எதிர்வரும் காலத்தில் சொல்வார்கள். எனவும் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று ஆக்கபூர்வமானதொரு குத்பா பிரசங்கம்

( Firows Mohamed )

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று ஆக்கபூர்வமானதொரு குத்பா பிரசங்கத்தை கேட்க நேரிட்டது. உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட குத்பா பிரசங்கத்துக்கும் இன்றைய குத்பா பிரசங்கத்துக்கும் பாரிய வேறுபாட்டை உணர்ந்தேன்.

• எங்களுக்கு தனிப்பட்ட தேவைகள் இருந்தாலும், நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான அரசியல் தலைவர்களை கண்டபடி விமர்சிக்கக்கூடாது.

• முஸ்லிம்களுக்கு வரவிருந்த மிகப்பெரிய ஆபத்தை, எமது அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக தங்களது இராஜினாமாக்கள் மூலம் தடுத்தமைக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

• பொது இடங்களில் மாற்றுமத சகோதரர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்.

• குரோத மனப்பாங்கை வளர்க்காமல், ஆரோக்கியமான கருத்துகளை மாத்திரமே சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டும்.

• ஊடகங்களை சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை தவிர்த்து, சமூக நலனின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தவேண்டும்.

வெறுமனே மார்க்க விடயங்களை மாத்திரம் குத்பா பிரசங்கத்தில் அள்ளித் தெளிக்காமல், காலத்துக்குப் பொருத்தமான் வகையில் இடம்பெற்ற இன்றைய குத்பா பிரசங்கம் ஆரோக்கியமானதொரு முன்னெடுப்பாகும்.

முஸ்லிம்களின் நிம்மதியான இஸ்லாமிய வாழ்விற்கு வழியமைக்க பிரார்த்திப்போம் – முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெருநாள் வாழ்த்தில் தெரிவிப்பு

முஸ்லிம்களின் நிம்மதியான இஸ்லாமிய வாழ்விற்கு வழியமைக்கும் நன்நாளாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், மிகுந்த துன்பத்தின் மத்தியில் முஸ்லிம்கள் இப்பெருநாளை இந்நாட்டில் கொண்டாடுவது பெருத்த வேதனை அளிக்கிறது. முஸ்லிம் விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக இலங்கைத் திருநாட்டின் அமைதி மற்றும் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் அமைதி ஏற்படுவதற்கும் முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்விற்கும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்தி ஒரு தேசத்து மக்கள் என்ற வாஞ்சையோடு வாழச் செய்வதோடு முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.

மேலும் ரமழான் மாத்தில் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணிவருவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக மாற முயற்சிப்போமாக.

நோன்புகாலத்தில் செய்த நல்லமல்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் புனித இஸ்லாம் மார்க்கத்தின் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்து மரணிப்பதற்கும் இறைவன் அனைவருக்கும் அருள் புரிய பிரார்த்திப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

– ஊடகப் பிரிவு –

முஸ்லிம்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட பிரார்த்திப்போம் – சிராஸ் மீராசாஹிப் பெருநாள் வாழ்த்து

ஒரு மாதகாலமாக புனிதமான நோன்பு இருந்து இந்த நோன்பின் மூலம் ஏழைகளின் பசியை ஏனையவர்களும் அறிந்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது இலங்கை திருநாட்டில் வாழும் எல்லா இன மக்களிடையேயும் சாந்தியும்,சமாதானமும்,புரிந்துணர்வும் ஏற்பட இந் நன்நாளில் இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

எமது முஸ்லீம் மக்கள் அனைவரும் ஏனைய இன மக்களான சிங்களவர்கள்,தமிழர்கள்,கிறிஸ்தவர்களோடு அந்நியொன்யமாகவும், விட்டுக்கொடுப்போடும் வாழ்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒருமித்து பாடுபடுவோம் என இந்நன்நாளில் உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்

மேலும் எமது நாட்டிலும் உலகிலும் வாழும் எல்லா முஸ்லிம்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவும், சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளவும் அருள்புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்போமாக

அனைத்து சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் நழ்வாழ்த்துக்கள்.

கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்,
மெற்ரோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகர்

-ஊடகப் பிரிவு-

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ ஈகைத் திருநாளில் பிரார்த்திப்போம் – யாழ் மாநகர சபை உறுப்பினர் எம்.எம் நிபாஹீர்

பாறுக் ஷிஹான்
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத் திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ பிரார்த்திப்போம் என யாழ் மாநகர சபை உறுப்பினர் எம்.எம் நிபாஹீர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமான பெருநாள் தினத்தில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திக்க வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் செயற்படவேண்டிய காலகட்டத்தில் வீண் விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து அமைதியாக இப்பெருநாளை கொண்டாடவேண்டும்.
அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்திருப்பது கவலைக்குரியது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்திருப்பது கவலைக்குரியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் பித்ர் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தீவிரவாத சிந்தனைப் போக்கின் விளைவாக முஸ்லிம்களில் சிலர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்மைக்கால வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதவாறு இந்நாட்டின் முஸ்லிம் சமூகம் பாரிய சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகியிருக்கும் வேளையில் இவ்வாண்டு “ஈதுல்பித்ர்” ஈகைத்திருநாளை நாம் சந்திக்கின்றோம்.
ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து இறைவணக்கத்தில் அயராது ஈடுபட்டு நோன்பு நோற்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்திருப்பது கவலைக்குரியது.
மூன்று தசாப்தகால கோர யுத்தம் ஓய்ந்து, நாட்டில் சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், நீண்ட இடைவெளியின் பின்னர் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்லிணக்கச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் சந்தேகமும், அச்சமும் ஆழமாக குடிகொள்ள ஆரம்பித்திருப்பது மட்;டுமல்ல, இவ்வளவு காலமாக சமய, சமூக தனித்துவத்தைப் பேணி சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த உரிமைகளைக்கூட பறிகொடுக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்று வரும் முஸ்லிம் நாடுகள் சிலவற்றிலும் ஏனைய சில நாடுகளிலும், இலங்கையிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவும், சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளவும் அருள்புரியுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக.

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எவரும் எதிர்பாராது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாகி உள்ளது.ஒரு சிலரின் கொடிய கோட்பாடுகளை.இஸ்லாத்துடன் இணைக்கும் சில மத நிந்தனையாளர்களின் போக்குகளும் முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்றன.
தாய் நாட்டுடன் ஒன்றித்துப் பயணிக்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைத் திசை மாற்றிவிடவே இத்தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்களின் இக்கெடுதல் நோக்கங்களுக்கு பெரும்பான்மை ஊடகங்கள் சில கைகொடுத்துள்ளமை சமூக, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளையும் பாதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்ன கெடுதல்கள் ஏற்படினும் ரமழானின் பயிற்சியில் பெற்றுக் கொண்ட பொறுமையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதே எமக்கு எதிரான விரோதிகளைத் தோற்கடிக்க உதவும்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிட்டுள்ள கடும்போக்கர்களின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளுக்குப் பலியாகி எம்மை,நாமே அழித்துக் கொள்ளும் சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது. புனித ரமழானில் முஸ்லிம்கள் கையேந்திக் கேட்ட அனைத்துப் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. சிறு காரணங்களுக்காகவும் அநியாயமாகவும் கைதாகியுள்ள எமது சகோதரர்களை விடுவிப்பதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் எமது சமூகம் கூட்டாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்தக் கூட்டுச் செயற்பாடுகள் எம்மில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் பூண்டோடு ஒழிப்பதற்கும் பங்காற்ற வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.
எனவே நாட்டின் தற்போதைய நிலைமை சீரடையவும் கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் விசேட துஆப்பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் எமது சமூகத்திற்கு அவசியமாகிறது.
அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் எம் பி தெரிவிப்பு

(ஊடகப்பிரிவு)
பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் எம் பி    தெரிவித்தார்.
அவ்வாறான எந்த விசாரணைகளுக்கும் முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று மாலை (06) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது “நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு நிருபிக்கப்பட்டால் அதற்கான உச்ச தண்டனையாக, அது மரண தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” எனக்கூறிய அவர்  “என்னைக் காட்டி என்  சமூகத்தை பலியாக்காதீர்கள். முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை அழிக்காதீர்கள் உங்களின் அரசியல் தேவைகளுக்கு நாங்கள்  உதவி செய்யாத காரணத்தினால் கொடுமைகளை செய்யாதீர்கள். என்றார்
 பதவி , பட்டம், ஆட்சி, அந்தஸ்து, எல்லாம் இறைவனால்  தரப்படுபவை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். ஏகாதிபத்திய சதிகாரர்களினால் உருவாக்கப்பட்ட ISIS  இயக்கத்துடன் இலங்கையில் வாழும் 22 இலட்சம்  அப்பாவி முஸ்லிம்களை தொடர்புபடுத்தி அவர்களை அணுவணுவாக சித்திரவதை செய்வதை கைவிடுங்கள்.
ஏதோ ஒரு வகையில் இங்கே ஊடுருவி விட்ட இந்த பயங்கரவாத இயக்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை அவர்களின் மிலேச்சத்தனமான இந்த செயலை நாம் ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் இதனை வெறுக்கின்றது. உலக  முஸ்லீம் நாடுகளின் பரம விரோதியான இந்த கயவர் கூட்டத்துடன் இலங்கை முஸ்லிம்களை கோர்க்காதீர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் இந்த இயக்கத்தை இல்லாதொழிப்தற்கு முஸ்லிம்களாகிய நாம் அத்தனை உதவிகளையும் வழங்கினோம். சாய்ந்தமருதில் ஒளிந்திருந்த இயக்கத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்து, அவர்களாகவே குண்டுகளை வெடிக்க வைத்து அழிவதற்கு வழி வகுத்தோம். எங்கெல்லாம் இவர்கள் ஒளிந்துகொண்டு இருந்தார்களோ அவர்களை காட்டிக்கொடுத்தோம்  கைது செய்வதற்கும் உதவினோம். தற்கொலைதாரி ஒருவரின் மனைவி குண்டு தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் இதனை  கேள்வியுற்று அவரது கணவரின்  ஆவணங்களையும் ஒளிப்பதிவு சாதனங்களையும் பொலிஸில் ஒப்படைத்து விசாரணைக்கு உதவினார்.
நாங்கள் தலைமைத்துவத்திற்கு  கட்டுப்பட்ட ஒரு சமூகம். ஜம்மியத்துல் உலமாவின் கீழ் எமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒருமித்து பயங்கரவாத நடவடிக்கையை எதிர்த்தோம் . கண்டித்தோம். எனினும் எமது சமூகத்தை எப்படியாவது கருவறுக்க வேண்டுமென நீண்ட காலமாக துடித்து திரியும் இனவாதக்கூட்டம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மை இலக்கு வைத்து, துரத்தி துரத்தி தாக்குகின்றது. எமது உள்ளத்தை உடைக்கின்றது. நெஞ்சை பிளக்கின்றது விஷத்தை கொப்பளிக்கின்றது.
குண்டுக்தாக்குதல் நடந்து சரியாக 21 நாட்களின் பின்னர் இவர்களின் கயமைத்தனம்   சிலாபத்திலிருந்து தொடங்குகின்றது முகநூல் பதிவை  விளங்கிக்கொள்ள முடியாத இந்த அறிவிலிகள் தமது காடைத்தனத்தை கட்டவிழ்த்து. விடுகின்றனர் வடமேல் மாகாணத்தில் அத்தனை முஸ்லிம் கிராமங்களும் துவம்சம் செய்யப்படுகின்றது. தும்மல சூரிய, நாத்தாண்டிய, நிக்கவரட்டிய, கொட்டரமுல்லை, மினுவாங்கொட ஆகியவற்றிலும் இவர்கள் தமது கைவரிசைகளை காட்டினர்.
பள்ளிகள் வீடுகள், வியாபாரஸ் தலங்கள், எரிக்கப்பட்டும் தகர்க்கப்பட்டும் கிடக்கின்றன. கொட்டரமுல்லையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். எனினும் சட்டம் இவர்களுக்கு எதிராக இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனையானது.
52 நாட்கள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு நான் உதவவில்லை என்பதற்காக பழி தீர்க்கப் பார்க்கின்றனர். எங்களை பதவி நீக்க வேண்டும் என்று தேரர் ஒருவர் கண்டியில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது இனவாத பௌத்த மத குரு மாரும் கடும்போக்கர்களும் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை பழி தீர்க்க முயற்சித்தனர். தலதா மாளிகைக்கு முன்னால் சென்ற 3 முஸ்லிம் இளைஞர்களை இந்த காடையர்கள் அடித்து துன்புறுத்தினர். கடைகளை மூட வைத்து நாட்டிலே ஒரு வன்முறை சூழல் ஒன்றை உருவாக்க முஸ்தீபு செய்தனர்.
எனவே தான் சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் நாட்டின் அமைதி கருதியும் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், கபீர் காசிம், ஹலீம்,  மற்றும் நான் உட்பட இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர், மற்றும்  ஆளுநர்கள் எமது  பதவிகளை தூக்கி எறிந்தோம்  நாங்கள் யாருக்கும் பயந்து ராஜினாமா  செய்வில்லை.  இந்த நாட்டில் மீண்டும் இனக்கலவரமோ யுத்தமோ இடம்பெறக்கூடாது என்ற சமூக கடப்பாடும் பொறுப்பும் எமக்கு இருக்கிறது.
ஆனால் தேசப்பற்றாளர்கள் என கூவித்திரியும் கடும்போக்கர்கள் முஸ்லிம் கடைகளுக்கு போக வேண்டாம் எனவும் பகிஷ்கரிக்குமாறும் காட்டுச்சட்டம் போடுகின்றனர். அப்படியானால்  முஸ்லிம் நாடுகளை பகைத்து கொண்டு இவர்களால்  வாழ முடியுமா? அங்கிருந்து தானே பெற்றோல் வருகின்றது. சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார்கள். சில மத குருமார்களின் பேச்சுக்கள் கடும் போக்குவாதத்தை அப்பட்டமாக பிரதி பலிக்கிறது. ஒரு கூட்டம் தொடர்ந்தும் சதி செய்கின்றது. அவர்களை பாதுகாக்கின்றீர்கள். ஆனால் பயங்கரவாதத்தை வெறுக்கும் எங்களுக்கு தொடர்ந்தும் தொல்லை தருகின்றீர்கள்.
இந்த நாட்டிலே இன வாதிகளுக்கும் கடும்போக்கு வாதிகளுக்கும் ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு இன்னொரு சட்டமுமா பிரயோகிக்கப்படுகின்றது அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த அட்டூழியக்காரர்களை அடக்காமல், கைகட்டி, வாய் பொத்தி பொலிசாரும் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஜனாதிபதியோ, பாதுகாப்பு பிரதி அமைச்சரோ எந்த நடவடிக்கையும்  எடுக்கத் துணிகின்றார்கள் இல்லை.
ஆனால் சிறு சிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். கப்பல் சுக்கான் பொறிக்கப்பட்ட  ஆடை அணிந்த பெண் ஒருவர் சக்கரம் அணிந்தார்  என  கைது செய்யப்பட்டு 21 நாட்களின் பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
திவயின பத்திரிகை வைத்திருந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்கள் என்ற சாட்சியங்களுடன்  கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானால்  இந்த நாட்டில் சட்டம் சமனாக பேணப்படவில்லையா என இந்த உயர் சபையில் கேட்கின்றேன்

“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்?

சுஐப் எம். காசிம்

கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள்,மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் வீடுகள்,கடைகள், சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்ட பள்ளிவாசல்கள்,மத்ரஸாக்களின் அலங்கோலக்

காட்சிகளுக்குள் சொத்துக்களை இழந்த ஒவ்வொரு முஸ்லிம்களின் பெருமூச்சுக்களும் மெல்லிய இரைச்சலுடன் ஓசையிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஓசைகளை ஊடறுத்துக் கொண்டு சென்ற அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் வாகனங்களில் நாம்

மினுவாங்கொடைக்குச் சென்றோம்.அவ்வூர் முஸ்லிம்களின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாக நிமிர்ந்து நின்ற ஜவுளிக் கடைகள், ஆடம்பர ஹோட்டல்கள்,பள்ளிவாசல்கள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தமை மிகப்பெரிய ஊழித்தாண்டவத்தை நினைவூட்டியது.மிகச் சுதந்திரமான மன நிலையிலிருந்தவர்களே இவ்வாறு திட்டமிட்டு கணக்கிட்டு  இவற்றைக் குறிவைத்திருப்பர்.இவை நடந்து முடிந்த பின்னர்தான் மினுவாங்கொடைப் பள்ளிவாசலுக்கு முன்னால் பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டு காவல் பணிகளும் உஷாராக்கப் பட்டிருந்தன.எல்லாம் முடிந்த பின்னர் எதற்காக இந்தக் காவல்.

ஏன் இந்த  நாட்டில் முஸ்லிம்கள் அடிக்கடி அச்சுறுத்தப்படுகி ன்றனர்.ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கு ஒட்டு மொத்த சமூகமும் எவ்வாறு பொறுப்புக் கூற முடியும்.  சரவதேச பயங்கரவாதத்தின் பங்கில் முஸ்லிம்களுக்கு ஒரு துளியும்பங்கில்லை என்பதை இவர்கள் புரிய மறுப்பது ஏன். தொடர்ச்சியான பொறுமையைக் கோழைத் தனமாகக் கொண்டதன் எதிரெலிகளா இவை எங்களுக்குள் நாங்கள் நொந்து கொண்டோம்.

இந்த நோவினைகள் நிரந்திரமாகி சிங்கள- முஸ்லிம் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்துமா? என்ற வேதனையுடன் கொட்டாரமுல்லை  கிரமாத்திற்குச் சென்றோம். கிராமத்தின் மருங்கிலிருந்த முஸ்லிம்களின் 4 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு அங்கு ஆரவாரம் செய்த கும்பல், அந்த வீடுகளில் ஒன்றுக்குள் உயிர்ப்பிச்சைக்காக அடைக்கலம் தேடி ஒழிந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையான பெளசுல் அமீர்டீன் என்பவரை வாளால் வெட்டி, சித்திரவதை செய்து அவரது உயிரை பறித்தெடுத்த துற்பாக்கிய சம்பவத்தை கேள்வியுற்றோம்.

இதயமுள்ள அனைவரையும் கிரங்கடித்த இந்த சம்பவத்தில் ஊர் மக்கள் ஒடுங்கி இருக்க அவரது ஜனாஸா உயிரின் உறவினர் வீடொன்றில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஜனாஸா வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புருவங்கலை விழித்து பதில்  ஏதுமின்றி மெளனித்திருந்தார்.  அவருடன் சென்றிருந்த அகில இலங்கை மக்கள காங்கிரஸின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் முக்கியஸ்தர் ஹுசைன் பைலா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.என்.நசீர்  உட்பட முக்கியஸ்தர்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் அங்கிருந்தனர்.

அந்த வேளையில், ஜனாஸாவுக்கு மரியாதை செலுத்த  அந்த பிரதேசத்தின் முக்கிய மதகுருவான மாகல் கடவ்வெல புண்ணியசார நாயக்க தேரரும் வந்திருந்தார். இதன் போது, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அளவாவிய அவர் சிங்கள-முஸ்லிம்களின் உறவுகள் தொடர்பில் மிகவும் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அத்துடன் அங்கு குழுமி இருந்த ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த அவர். “அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நான் வவுனியாவில் இருந்த போது அவரது மக்கள் பணிகளை நேரடியாக கண்டிருக்கின்றேன். இன மத பேதமின்றி உதவி செய்து வருபவர் போலிக்காரணங்களை கூறியும் ஆதாரமில்லாத வீண் விமர்சனங்களை செய்தும் அவர் மீதான குற்றாச்சாட்டுக்களை வேண்டுமென்றே சுமத்துகின்ற்னர் அவரை சிலர் வேண்டுமென்றே ஓரங்கட்ட கட்ட நினைப்பது  வேதனையானது.” என்று  தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையுடன் கொட்டம்பிட்டிய கிராமம் நோக்கி நகர்ந்தன எமது வாகனங்கள்.

அங்கு வீடுகள்,வாசல்கள், உடைத்து நொrஉக்கப் பட்டு ஏதிலிகளாக்கப்பட்டு கண்ணீர் சிந்தியவாறு நின்ற முஸ்லிம் தாய்மார்கள், பொறுமையுடன் விம்மி அழுத சகோதரிகள்,பொறுமையிழந்து ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றிருந்த இளைஞர்கள்,அனைத்தையும் இழந்துவிட்ட விரக்தி நிலையில் கிடந்த தந்தையர்கள் அனைவருடனும் அளவளாவினோம்.திட்டமிட்டு நடத்தப்பட்ட இவ்வெறித்தனங்கள் வௌியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட இளைஞர்களால் நடாத்தப்பட்டதென ஊரவர்கள் ஊர்ஜிதம் செய்ததிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ள முடிந்தது.ஒட்டு மொத்த சிங்கள சகோதரர்களின் சிந்தனைகளில் இந்த வன்முறைகள் இல்லையென்பதே அது.காவலுக்கு நின்ற பாதுகாப்புபடையின, கட்டிவைக்கப்பட்ட பொம்மைகளாகப் பார்த்து நிற்க பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் தரை மட்டமாக்கப்பட்டிருந்ததும், பள்ளிவாசல்களின் சிசிடி கமராக்கள் சீருடை அணிந்த சிலரால் எடுத்துச் செல்லப்பட்டதும் காடையர்களைக் காப்பாற்றும் முயற்சிகளாக இருந்ததாகவே,அவ்வூர் மக்கள் குமுறினர்.

ஒரு வகையில் பழிவாங்கும் தாக்குதல்களாகவும் இதை ஏற்க முடியாது.தேவாலயங்களில் தமது உறவுகளை இழந்த கிறிஸ்தவ சகோதரர்கள் செய்திருந்தால் பதிலீடு அல்லது பழிவாங்கல் தாக்குதல்களாக இதைக் கருதலாம்.இரு நூறு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள், பஸ்களில் வந்த வாலிபர்கள்,வேன்டிப்பர் ரக வாகனங்களில் கத்திகள்,பொல்லுகள்,வாள்களுடன் வீர வசனங்களும்,வெறுப்புக் கோஷங்களும் வெறுப்பூட்டும் வார்த்தைகளுடனும் வந்த காடையர் பட்டாளத்தால் குருநாகல் மாவட்டத்தின் சுமார் 32 முஸ்லிம் கிராமங்கள் துவம்சம் செய்யப்பட்டன.

கொட்டாம்பபிட்டிய மத்ரஸதுல் அல்ஜமாலியா அரபுக்கல்லூரி எரிக்கப்பட்டு மாணவர்களின் விடுதிகளிலிருந்த அத்தனை பொருட்களும் இழுத்து வரப்பட்டு எரிக்கப்பட்டன. ரமழான் மாத விடுமுறையில் மாணவர்கள் வீடு சென்றிருந்ததால் பலரின் உயிர்கள் காப்பற்றப் பட்டிருந்தமை அவ்வூர் மக்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

 

சில கிராமங்களில் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்த இவர்கள், சிறுநீர் கழித்து மத வெறியைத் தீர்த்துள்ளனர்.இன்னும் சில பள்ளிவாசல்களில் கண்ணாடிகள், அலுமாரிகள், தளபாடங்களை உடைத்தும் வெறி அடங்காத இக்கும்பல் புனித குர்ஆன்பிரதிகளை ஒன்று திரட்டி எரித்து விட்டு வௌியேறுகையில் தாக்குதலில் தப்பியிருந்த பள்ளிவாசலின் எஞ்சியிருந்த ஒரேயொரு சொத்தான சுவர்க் கடிகாரத்தையும் உடைத்து நொருக்கியதன் மனநிலைகள் எவ்வளவு பயங்கரமானது,எத்தனை விகாரமானது.

இவ்வாறானோருக்குப் புனர்வாழ்வளிப்பதே அரசின் முதற் தேவையாக இருக்குமோ என நான் நினைத்துக் கொண்டேன். எத்தனை பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டதோ அவை எதிலிருந்தும் ஒரு வாளாவது இருக்கவில்லை.அங்கு உடைக்கப்பட்ட சகல மத்ரஸாக்களிலும் சமயலறைப் பொருட்கள் தவிர எந்த ஆயுதங்களும் அகப்படவில்லை.

இம்மாவட்டத்தைப் பொறுத்த வரை இக்கிராமங்களிலுள்ள அத்தனை முஸ்லிம்களும் நாளாந்த தொழிலாளிகள்,அன்றாட உழைப்பாளிகள்.பழங்கள்,காய்,கறிகளை விற்பனை செய்வதற்காக வீதியோரங்களில் கட்டப்பட்டிருந்த இம்மக்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டு குப்புறக்கிடந்தமை இவர்களின் வாழ்க்கையும் வீழ்த்தப்பட்டதற்கான சாட்சிகளாக காட்சியளித்தன.

அங்கு கண்ட அத்தனை காட்சிகளும் ஒரு சமூகத்தின் திட்டமிட்ட சூறையாடலுக்கான சாட்சிகளாகத் தென்பட்டன. புனித நோன்பு காலமாகையால் இப்தார் (நோன்பு துறத்தல்) வேலைகளுக்கான ஆயத்தங்களைச் செய்யும் வேளையிலே இந்த அக்கிரமங்கள் நடத்தப்பட்டது.தூக்கிய பிள்ளைகளோடும், காய்ச்சிய கஞ்சி,ஆக்கிய சோறுகளைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடிய பலர்,குழந்தைகளைத் தூக்கியவாறு தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறிய தாய்மார் எனப் பலதரப்பினரும் அபயம் தேடி காடுகள்,குளங்கள்,வயல்களுக்குள் பதுங்கிக் கிடந்ததால் சகல கிராமங்களும் வெறிச்சோடின.

 

ஆனால் இன வெறியர்களின் இரைச்சல்கள் மாத்திரம் காதுகளைத் துளைத்து அச்சத்தை அதிகரித்ததாகவும் அம்மக்கள் கூறினர்.இந்தப் பிரதேசத்தில் இன்னுமொரு பள்ளிவாசலை உடைக்க வருவதாகக் கேள்வியுற்ற மௌலவி ஒருவர் மாரடைப்பு வந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் எமக்குச் சொல்லப்பட்டது. முஸ்லிம்களைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியதா? அல்லது அமைதியைப் பேணும் பொறுமை ஏவிவிடப்பட்ட இளைஞர்களிடம் இருக்கவில்லையா என்ற சிந்தனையில் சகலரும் பெருமூச்சு விட்டவாறு பண்டுவஸ் நுவரப் பகுதிக்குச் சென்றபோது எங்களை இருள் கவ்விக் கொள்வதற்கு முன்னர் பயம் பற்றிக் கொண்டது.

நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கண்கள் குளமாகியதை அவதானித்த பெண்கள் முந்தானைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்களை யார் பாதுகாப்பது? இதற்குப் பின்னர் இவ்வாறு நடைபெறாதென்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற தொனியில் நோக்கினர்.அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் நெருக்கடி நிலைகளில் நிதானம் அவசியமென்றும் ஆறுதல் கூறிய அமைச்சர்,சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் உறவுகள் இவ்வாறான வன்முறைகளால் தகர்ந்து போகாமல் பாதுகாப்பது அவசியமெனத் தெரிவித்தார்.

 

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றுக்காக ஒரு சிலர் செய்த பயங்கரவாதச் செயலுக்கு எதிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் ஏழைக் கிராமங்கள் இலக்கு வைக்கப்பட்டமைக்குப் பின்னால் எந்தச் சக்திகள் உள்ளதென்பதை ஆராயும் மனநிலையில் அப்பாவி முஸ்லிம்கள் இல்லை. ஆனால் எறும்பு புற்று கட்டுவதைப் போல் கடின உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள்,கடைகள்

தகர்க்கப்பட்ட ஏக்கத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு வாழ்நாளைக் கழிக்கப் போகின்றனர் என்பதே அடுத்த சவாலாக இருக்கப் போகிறது.

குளியாப்பிட்டிசேதங்களை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

குளியாப்பிட்டி சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப் பகுதி மக்களையும் சந்தித்தார்.

பட உதவி : இர்ஷாத் ரஹ்மத்துள்ளா

48 மணிநேரத்தில் 30 முஸ்லிம், கிராமங்கள் மீது தாக்குதல் – 9 பள்ளிவாசல்களுக்கு சேதம்

எம்.எப்.எம்.பஸீர்)

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய சுமார் 30 முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரையான 48 மணிநேர தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், பெருமளவு முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இந்த வன்முறை சூழல் குருணாகல் மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அளவுக்கு தீவிரமடைந்தமையால் அதனைக் கட்டுப்படுத்த இன்று மாலை 4.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் முழு வட மேல் மாகாணத்துக்கும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதன்படி வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் உள்ள 47 பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க பிரதேசத்தின் பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பாதுகாப்பு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குருணாகல் பொலிஸ் வலயத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாபிட்டிய பொலிச் வலயத்தில் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளிலும், நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்தில் உள்ள 10 பொலிஸ் பிரிவுகளிலும், புத்தளம் பொலிஸ் வலயத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் வலயத்தின் 7 பொலிஸ் பிரிவுகளிலும் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று குளியபிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெட்டிபொல வீதியில் நான்கு முஸ்லிம் கடைகள் மீது கும்பல் ஒன்று நடத்திய தககுதல்களுடன் குளியாபிட்டிய பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்மாகியிருந்தன.

குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்போரில் நலவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிற்பகல் 2.00 மணியாகும் போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நிலைமை மோசமடிந்ததை அடுத்து பின்னர் நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கொபேய்கனே மற்றும் ரஸ்னாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவற்றையும் மீறி வன்முறைகள் கட்ட விழ்த்துவிடப்படலாம் எனும் அச்சம் மற்றும் சில உளவுத் தகவல்களை மையப்படுத்தி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய முழு வட மேல் மாகாணத்துக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று குளியாபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் குளியாபிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பிங்கிரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்முறைகள் பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அமைச்சர்களே இராஜினாமா செய்யுங்கள் ! வலுக்கிறது கோஷம்

( ஏ எச் எம் பூமுதீன் )

முஸ்லிம் அமைச்சர்களை – தமது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு முஸ்லிம் சமுகம் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அறிய வருகின்றது .

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

“இன்னும் இந்த அரசில் இருக்க உங்களுக்கு வெட்கமில்லையா? ” என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் இன்று இரவு முகா வைச் சேர்ந்த ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க,

#. டான் பிரசாத் மீண்டும் அட்டகாசம்.
கொலன்னாவ பகுதி முஸ்லிம்களுக்கு நேரடியாக சென்று அச்சுறுத்தல்.
வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு.

#. கொழும்பில் மயான அமைதி.

#. பாதுகாப்பாக இருக்குமாறு மாளிகாவத்தை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்.

#. சில முஸ்லிம் குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்வு.

#. குருநாகல் அசம்பாவிதத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் மரணம்.?

#. முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் விழிப்பில்..

#. பாதுகாப்பு அதி உச்ச நிலையில்..