ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.அறூஸ்)

மலேசியாவில் ஜூன் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள பெண்களுக்கான ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியளிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியிலிருந்து இரண்டு வீராங்கனைகள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விலகிக் கொண்டுள்ளனர்.

அணித்தலைவி சாமரா அத்தப்பத்து மற்றும் அமா காஞ்ஞனா ஆகிய இருவருமே விலகியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஹர்ஸித்த மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அணித்தலைவி சாமரா அத்தப்பத்து விலகிக் கொண்டுள்ளதால் அணித்தலைவியாக சசிகலா சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியினர் நாளை வியாழக்கிழமை நாட்டிலிருந்து புறுப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வருமாறு

யசோதா மெண்டிஸ், அனுஸ்கா சஞ்சீவனி, ரொபிகா வென்டோர்ட், ஹாஸினி பெரேரா, சசிகலா சிறிவர்த்தன, நிலக்ஸி டி சில்வா, உதேஸிக்கா பிரபோதினி, சுகந்திக்கா குமாரி, ஒஸாதி ரணசிங்க, நிபுனி ஹன்ஸிக்கா, மல்ஸா சிஹானி, அச்சினி குலசூரிய, இனோசி பெர்ணான்டோ, ஹர்ஸித்தா மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் அடங்குவதுடன் மேலதிக வீராங்கனைகளாக சிறிபாலி வீரக்கொடி, கவிஸா டில்காரி, சத்யா சாந்திபனி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கண்டியில் இணைய பாவனை வேகம் குறைய காரணம் இதோ!

சில பிரதேசங்களில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் நாங்கள் இது தொடர்பில் விசாரித்த போது கண்டி பிரதேசத்தில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மையமாக கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவோர் குறித்து கவனம் செலுத்துவதற்காகவே இவ்வாறு இணைய வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

பாதுகாப்பு அமைச்சு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் இந்நிலமை சரி செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்

/images/ title

வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது.

அதன்படி, தற்போது வட்ஸ்அப்பில் உள்ள இமோஜி சேவையை புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உள்ள இமோஜியை விட மேலும் பல இமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது நாம் என்ன இமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான இமோஜிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough) உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, வட்ஸ்அப்பில் MP3, ஈமெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை

/images/ title

2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, நாசாவுக்கு 19.5 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான விளக்கமான திட்ட அறிக்கையைத் தயாரித்து, வரும் டிசம்பர் முதலாம் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது.

அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 ஆம் ஆண்டளவில் விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

சிவப்பு கோளில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வினை இந்த விண்கலம் மேற்கொள்ளும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா மறுபிரவேசம்: அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

Image title

2017 ஆம் ஆண்டில் அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை நோக்கியா அறிமுகம் செய்யவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமது மறுபிரவேசத்தை அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நோக்கியா அன்ட்ரோய்ட் ஸ்மார்ட் ஃபோன்கள், சாம்சங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கு சவாலாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா டி1சி, சி9, இ1, நோக்கியா ஸ்வான், பி1 போன்ற ஐந்து மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா டி1சி யில் 5 – 5.5 அங்குல ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி / 3ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி சேமிப்பு திறன் ஆகியன இருக்கும் எனவும் நோக்கியா சி9: 64-பிட் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 21 எம்பி பின்பக்க கெமரா, 8 எம்பி முன்பக்க கெமரா கொண்டிருக்கலாம் எனவும் உத்தியோகபூர்வமில்லா செய்திகள் தெரிவிக்கின்றன.

நோக்கியா இ1 இல் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் ஆட்டம் ப்ராசஸர், ஃபுல் எச்டி 1080பி ரெசெல்யூஷன் மற்றும் 2ஜிபி ரேம், 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 32 ஜிபி சேமிப்பு திறன், 20 எம்பி பின்புற கெமரா, 5 எம்பி முன்பக்க கெமராவைக் கொண்டிருக்கக்கூடும் எனவும்

நோக்கியா ஸ்வான், 5.3 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 810 அக்டாகோர் செயலி, 4ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு திறன், எல்இடி ப்ளாஷ், 42எம்பி பின்புற கெமராவைக் கொண்டிருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா பி1 ஆனது 5.3 அங்குல எச்டி ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 820 செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னெல் மெமரி, 22.6 எம்பி பின்பக்க கெமரா என்பனவற்றைக் கொண்டிருக்கக்கூடும்.

வாட்ஸ் எப் பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்

Image title

சமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி உரையாடலுக்கு வாட்ஸ் எப் செயளி மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றது. இதன் பாவணையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

வாட்ஸ் எப்பில் இது நாள் வரை ஓடியோ தொலைபேசி அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் எண்டராய்ட் இயங்குதளத்தில் வாட்ஸ் எப்பை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ தொலைபேசி அழைப்பு வசதியை தற்போது உத்தியோகபூர்வமாக அந்த நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.

எனினும் குறித்த வசதியானது வாட்ஸ் எப் ’பீட்டா’ பயனாளிகளுக்கு மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ தொலைபேசி வசதியானது எதிர்காலத்தில் எல்லா வித வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவருமா என்பதை பற்றி அந்நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது

பெரும் ஆபத்து வந்துவிட்டது.!

Image title

சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன.

இந்நிலையில் விண்ணில் சுற்றிவரும் ஒரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்துக்குள் சுற்றி வருகிறது.

15 கிலோ மீற்றர் அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. அது சுற்றுப்பாதை சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும் போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும். இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

17 வயது மாணவன், 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார்

Image title

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊ­டாக இலங்­கையின் 37 இணை­யத்­த­ளங்கள் ஊடு­ருவல் செய்­யப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டள்ளது.

இந்த பேஸ் புக் கணக்­கா­னது “யக்கடயா போரம்” (yakadaya forum) எனும் பெயரில் ஆரம்­பிக்­கப்­பட்ட குழு­வொன்­றுடன் இணைந்து செயற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.

இந்த “யக்கடயா போரம்” மேல­தி­க­மாக ரத்து உகுஸ்ஸா, சுமேதா தன விஜய, கோயா ஹெக்கர் (goyahacker) ஆகிய பெயர்­க­ளிலும் பேஸ்புக் கணக்­குகள் உள்­ள­மையும் அவை­ய­னைத்தும் இணை­யத்­தள தகவல் ஊடு­ருவல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதும் கண்­ட­றி­யப்­பட்­டன என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மிகவும் தனி­மை­யான கோள்

Image title

விண்­வெ­ளியில் வெறு­மை­யான பிராந்­தி­ய­மொன்றில் காணப்­பட்ட இளம் கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

2 மாஸ் ஜே 1119 – 1137 என அழைக்­கப்­படும் இந்தக் கோள் 10 மில்­லியன் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பூமி­யி­லி­ருந்து சுமார் 95 ஒளியாண்­டுகள் தொலைவில் காணப்­பட்ட அந்தக் கோள் எமது வியா­ழக்­கி­ர­கத்தை விடவும் 8 மடங்கு திணிவைக் கொண்­ட­தாகும்.

கோள்கள் நட்­சத்­தி­ர­மொன்றை சுற்றி வரு­வதே வழ­மை­யா­க­வுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்­கென நட்­சத்­தி­ர­மொன்­றையும் கொண்­டி­ராது தனித்துக் காணப்­ப­டு­கின்­றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம்: இனி தகவல்களைத் திருட முடியாது

Image title

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாத வகையில், மறையாக்க வசதி (encryption) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் குழு எண்ணிக்கை வரம்பு 100 இல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக encryption எனப்படும் மறையாக்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்கள் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாது.

புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோர் இனிமேல் கவலையின்றித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆனால், வாட்ஸ்அப் நிர்வாகம் இந்த வசதியால் தீவிரவாதிகள் இனி தகவல்களைத் திருட முடியாது என அறிவித்துள்ளது.

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு

Image title

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. 

இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த வண்ணம் காணப்படுகிறது.

Image title

Image title

அப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கைவிடப்பட்டது

Image title

அப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான கடவுச் சொல்லை (password) அமெரிக்க பொலிஸாருக்கு வழங்க மறுத்த அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ரிஸ்வான் பரூக் என்பவரும் அவரது மனைவியும் 14 பேரைச் சுட்டுக் கொன்றனர். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் காவல் துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, அவர்களிடமிருந்த ஐபோன் கைப்பற்றப்பட்டது ஆனால், அது கடவுச் சொல்லால் (password) பாதுகாக்கப்பட்டிருந்தது.

அப்பிள் ஐபோனைப் பொருத்தவரை, கடவுச்சொற்களை குறிப்பிட்ட முறைக்குமேல் தவறாக பயன்படுத்தினால், அந்த போனில் உள்ள முந்தைய தகவல் பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும் வகையில் செயல்படக்கூடிய பாதுகாப்பு அம்சம் (security cover) நிறுவப்பட்டுள்ளது.

ரிஸ்வான் பரூக்கின் ஐபோனில் பதிவு செய்யப்பட்டிருந்த கடவுச் சொல்லை அமெரிக்க FBI அதிகாரிகளால் ஊடுருவ (ஹேக் செய்ய) முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது ஆனால், வாடிக்கையாளரின் நம்பிக்கை எங்களுக்கு முக்கியம், அவர்கள் கோரினால் மட்டுமே கடவுச் சொல்லைத் தரமுடியும் எனக் கூறி பொலிஸாரின் கோரிக்கையை அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

அமெரிக்க அரசு பலமுறை நிர்பந்தம் செய்தும், தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அந்தரங்கமும் முக்கியம் எனக் கூறி இவ்விவகாரத்தில் அப்பிள் நிறுவனம் உறுதியாக இருந்து விட்டது.

அப்பிள் நிறுவனத்துக்கு ஆதாரவாக கூகுள், பேஸ்புக் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட இருபது நிறுவனங்கள் குரல் கொடுத்தன.

இதைத் தொடர்ந்து FBI தரப்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அப்போது, ஐபோனை ஊடுருவுவதற்கு FBI க்கு உதவ சிறப்பு மென்பொருளை உருவாக்கித்தர வேண்டும் என அப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, அப்பிள் நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே அமெரிக்க பொலிஸார் சமீபத்தில் பரூக்கின் ஐபோனுக்குள் ஊடுருவி தங்களுக்கு வேண்டிய முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

இதனால், எந்தவித கடவுச்சொல்லாக இருந்தாலும் அதனுள்ளே ஊடுருவ முடியும் என்ற நம்பிக்கை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, இனி இந்த விவகாரத்தில் அப்பிள் நிறுவனத்தின் தயவு நமக்கு தேவை இல்லை என பொலிஸார் முடிவு செய்தனர் இந்த முடிவை அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நேற்று (28) கலிபோர்னியா நீதிமன்றத்தில் அமெரிக்க அரசின் சார்பில் இரண்டு பக்கங்களை கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கடவுச்சொல் விவகாரம் தொடர்பாக, அரசின் சார்பில் அந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதித்துறை கைவிடுவதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்பிள் ஐபோனின் கடவுச்சொல்லுக்குள் ஊடுருவும் முயற்சியில் அமெரிக்க பொலிஸார் வெற்றிபெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை எதுவித தகவலையும் வெளியிடவில்லை.

ஓராண்டு விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்

Image title

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கொட் கெல்லி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மிச்செல் கோர்னிகோ ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஆய்விற்காக சென்றனர்.

இவர்கள் பூமிக்கு வெளியே 340 நாட்கள் பயணித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்த இவர்கள், கசகிஸ்தானின் பாலைவனப் பகுதியில் திட்டமிட்டபடி இன்று காலை தரையிறங்கி உள்ளனர்.

340 நாட்கள் விண்வெளி பயணித்தின் போது இவர்கள் 144 மில்லியன் மைல்கள் பயணித்துள்ளனர். பூமியை 5440 முறை சுற்றி வந்துள்ளனர். பூமியின் சுற்று வட்டப்பாதையில் 10,880 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை இவர்கள் கண்டுள்ளனர். பூமியின் பல்வேறு வண்ணம் கொண்ட 1000 படங்களை ட்விட்டரிலும், இன்ஸ்டகிராமிலும் அவ்வப் போது வெளியிட்டு வந்துள்ளனர்.

இதற்கு முன் 1990 களில் ரஷ்யர் ஒருவர் 438 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டார். இதுவே இன்றளவும் உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை கெல்லி மற்றும் கோர்னிகோ கிட்டதட்ட நெருங்கி உள்ளனர்.

விண்வெளியில் அதிகபட்சமாக மனிதன் எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகிறது. 2030 இல் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளதால், அதற்கான முன்னோட்டமாக இதனை கருதுகிறது. ஆனால் கதிரியக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது

சனி கிரகத்தை சுற்றும் நிலாவில் கடல் நாசா கண்டுபிடிப்பு

Image title

சனி கிரகத்தை சுற்றி வரும் பல நிலவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் இருந்தது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

சனி கிரகத்தை ஆய்வு செய்ய, கேசினி விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. தனது பயணத்தில், சனி கிரகத்தின் என்சிலடுஸ் நிலாவின் வடக்குப் பகுதிக்கு ஆயிரம் மைல் தொலைவில் இருந்தபோது, அப்பகுதியை கேசினி படம் எடுத்து அனுப்பியது.

படத்தில் காணப்பட்ட வரிகளும், பள்ளங்களும், பூமியைச் சுற்றி வரும் நிலவில் இருக்கும் வரிகள், பள்ளங்களுக்கு இணையாக உள்ளது.மேலும் கேசினி அனுப்பியுள்ள படத்தை நுணுக்கமாக ஆராய்ந்ததில், அங்கு ஏற்கனவே கடல் இருந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம். எனினும், “இதுபற்றி உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது. விண்வெளி விந்தைகளை தீர்த்து வைக்க ஆர்வம் காட்டி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களில், என்சிலடுஸ் நிலவை கேசினி வெகு அருகில் நெருங்கும். அப்போது அனுப்பி வைக்கும் படங்களில் மேலும் பல ஆச்சர்யங்கள் வெளிப்படும்” என்று நம்புகிறோம் என கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள கேசினி திட்டத்தில் பணியாற்றும் பால் ஹெல்பென்ஸ்டீய்ன் தெரிவித்துள்ளார்.

கூகுள் பலூன் குறித்து, யாரும் அஞ்ச வேண்டாம் – ஹரின்

Image title

கூகுள் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது.

கடந்த காலத்தில் பொது மக்களின் பணத்தை எடுத்து செய்மதி அனுப்பியது போன்றது இல்லை இந்த வேலைத்திட்டம்.

இது தோல்வி அடையும் பட்சத்தில், கைவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.