Responsive Advertisement 2

பிரதேச சபையின் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு


வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2018 ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற  தேர்தலை முன்னிட்டு .நெடுங்கேணி பிரதேச சபையின் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு நெடுங்கேணி நகரில் அமைந்துள்ள  கந்தசாமி கோயிலில் விசேட பூஜை வழிபாட்டுடன்  ஆரம்பிக்கப்பட்டது. 




அதன் பின்னர் ஜி .ரி .லிங்கநாதன் அவர்களின் இல்லத்தில் அவரது தலைமையில் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு  நடைபெற்றது  . இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் கௌரவ  DR .ப .சத்தியலிங்கம் அவர்கள் ,மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ S . மயூரன் அவர்களும் அனைத்து வேட்ப்பாளர்கள்  மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர் .இக்கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ளவது தொடர்பான விடயங்களும் மற்றும்  தேர்தல் சட்டங்கள் உட்பட பலவிடயங்கள்  ஆலோசிக்கப்பட்டு   . வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி )  தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கே வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்ப்பாளர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது. 





சிவக்குமார்















பிரதேச சபையின் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு பிரதேச சபையின் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு Reviewed by Admin on December 28, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3