Responsive Advertisement 2

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம்




சபாநாயகர் கரு ஜயசூரியவின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சிக்கலுக்கு முக்கிய காரணம் சபாநாயகரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


என்னதான் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், நாட்டில் என்ன நடந்தது என்பதை முழு உலக மக்களும் திரைப்படம் போன்று பார்த்து விட்டனர் என்பது ஒவ்வொரு பாமரனும் சொல்லும் தெளிவான கருத்தாகும்.


கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் நடாத்தப்பட்டது என்பதை அனைவரும் தொலைக்காட்சி ஊடாக நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே அந்த சம்பவத்தை வேறு விதமாக சோடித்து ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கம் கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.


கொக்கா கோலாவையும், லெமெனட்டையும் கலந்துதான் எறிந்துள்ளதாகவும் கொச்சிக்காய்த் தூள் எறியப்பட வில்லையெனவும் சம்பந்தப்பட்ட தரப்பு விளக்கமாக கூறியிருந்தது. உலகம் இன்று கைக்குள் சுருங்கியுள்ளது என்பதை மறந்து கதைவிடுவது தவறானது என்பதை புரிய, இவர்களுக்கு இன்னும் காலம் தேவைப்படுவது ஆச்சரியமாகவுள்ளது.

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம் சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம் Reviewed by Admin on November 20, 2018 Rating: 5

No comments:

Responsive Advertisement 3