மழை காரணமாக தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • September 24, 2019
  • 211
  • Aroos Samsudeen
மழை காரணமாக தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.அறூஸ்)

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நாளை மறுதினம் ஆரம்பமாகவிருந்த 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சீரற்ற காலநிலையினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி கனிஸ்க்க ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இளைஞர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கபட்டதுடன் விரைவில் போட்டியை நடத்தவதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரநடவடிக்கைகள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 31 ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாக இருந்தது.

26ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரை நான்கு நாட்களாக நடைபெறவிருந்த த 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3000 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவிருந்தனர்.

20 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவுகளுக்காக இடம்பெறவுள்ள மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகளில் வடகிழக்கு மாகாணங்களில் இருந்தும் கூடுதலான வீர,வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளமை தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments