சு.க.யை உடைத்தாரா மகிந்த? கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..??

  • October 7, 2019
  • 318
  • Aroos Samsudeen
சு.க.யை உடைத்தாரா மகிந்த? கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..??
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ள நிலையில், இரண்டாக பிரிந்து செயற்பட தயாராகி வருவதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தற்போது 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் 11 உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கும், 6 உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியிலும் இணையத் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அல்லது நாளை அறிவிக்கவுள்ளதாக சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி தொடர்பில் நேற்று இரண்டு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
Tags :
comments