றிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது – சுமதிபால

  • October 9, 2019
  • 493
  • Aroos Samsudeen
றிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது – சுமதிபால
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல்,  தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது.
கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது.
தீவிரவாதத்தை ஆதரித்ததாகக் கூறப்படும் றிஷாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்டத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.
பொதுமக்கள் அவரை நம்பவில்லை, எனவே அவருடன் இணைந்த ஒரு வேட்பாளரை சுதந்திரக் கட்சியினால் ஆதரிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :
comments