தொண்டமான் எந்தப்பக்கம் சாயப்போகிறார்..?

  • October 10, 2019
  • 71
  • Aroos Samsudeen
தொண்டமான் எந்தப்பக்கம் சாயப்போகிறார்..?
கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இதொகாவின் மூத்த உதவித் தலைவரும், பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பொனஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக மகிந்த அமரவீர கூறியுள்ளது அடிப்படையற்றது. அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை.
அதேவேளை, சஜித் பிரேமதாசவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறு்பபினர் ஒருவர் கூறியிருப்பதும் தவறான கருத்து.
இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
கட்சியின் நிறைவேற்றுக்குழு கூடிய இறுதி முடிவை எடுக்கும். வரும் 13ஆம் நாள் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags :
comments