கல்முனை பிராந்திய பதில் பணிப்பாளராக டொக்டர் ஜீ.சுகுனன் நாளை பதவியற்பு.

  • October 10, 2019
  • 89
  • Aroos Samsudeen
கல்முனை பிராந்திய பதில் பணிப்பாளராக டொக்டர் ஜீ.சுகுனன் நாளை பதவியற்பு.
(றிசாத் ஏ காதர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியவர் டொக்டர் ஜீ.சுகுனன் 2019.10.11ஆந் திகதி வெள்ளிக்கிழமை நாளை பதில் பணிப்பாளராக பதவியேற்கவுள்ளார்.
டொக்டர் ஜீ.சுகுனன் கடந்த ஆறுமாதங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியதுடன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராகவும் கடமையாற்றியிருந்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் ஏ.எல்.அலாவுத்தீன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டொக்டர் ஜீ.சுகுனன் பதில் பணிப்பாளராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Abdulcader Risath
Tags :
comments