தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் சம்பியனாகத் தெரிவு – பின்னடைவு கண்ட கிழக்கும், வடக்கும்

  • October 29, 2019
  • 296
  • Aroos Samsudeen
தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் சம்பியனாகத் தெரிவு – பின்னடைவு கண்ட கிழக்கும், வடக்கும்

(எஸ்.எம்.அறூஸ்)

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 45ஆவது தேசிய விளையாட்டு விழா கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளை , வின்சென்ட் டயஸ் மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2000 இற்கும் அதிகமான மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் இம்முறை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் (2.12 மீற்றர்) திவங்க பெரேரா பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்ட வீராங்கனை (13.90 செக்கன்) டபிள்யு.வீ.எல்.சுகந்தி பெற்றுக்கொண்டார்.சிறந்த வீரா்கள் இருவருக்கும் சொகுசு கார்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 99 கூடுதலான தங்கப்பதக்கங்களைப் பெற்று ஒட்டு மொத்தமான சம்பியனாக மேல் மாகாணம் தெரிவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதி வீரமுதன்மைக் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

51 தங்கப்பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தை மத்திய மாகாணம் பெற்றுக்கொண்டது. 32 தங்கப்பதக்கங்களைப் பெற்று வடமேல் மாகாணம் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதேவேளை கிழக்கு மாகாணம் வழமை போன்று எட்டாவது இடத்திலும், வட மாகாணம் ஒன்பதாவது இடத்திலும் தெரிவாகியதுடன் எந்தவித முன்னேற்றத்தையும் வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை.

சம்பியன் மேல் மாகாணம் 99 தங்கம், 78 வெள்ளி, 81 வெண்கலம்

இரண்டாமிடம் மத்திய மாகாணம் 51 தங்கம், 38 வெள்ளி, 60 வெண்கலம்

மூன்றாமிடம்  வடமேல் மாகாணம் 32 தங்கம், 33 வெள்ளி, 44 வெண்கலம்

நான்காமிடம் தென் மாகாணம்  29 தங்கம், 31 வெள்ளி, 45 வெண்கலம்

ஐந்தாமிடம் சப்ரகமுவ மாகாணம் 19 தங்கம், 30 வெள்ளி, 38 வெண்கலம்

ஆறாமிடம் வடமத்திய மாகாணம் 17 தங்கம், 20 வெள்ளி, 41 வெண்கலம்

ஏழாமிடம் ஊவா மாகாணம் 11 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம்

எட்டாமிடம் கிழக்கு மாகாணம் 08 தங்கம், 06 வெள்ளி, 09 வெண்கலம்

ஒன்பதாமிடம் வடக்கு மாகாணம் 03 தங்கம், 09 வெள்ளி, 10 வெண்கலம்

என மாகாணங்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் தேசிய சாதனைகளும், போட்டி சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பதுளையில் நிலவிய குளிர் காலநிலை மற்றும் தொடர்ச்சியான மழை, ஈரலிப்பான ஒடுபாதை என தேசிய விளையாட்டு விழா  சுவாரஸ்யம் இன்றி முடிவடைந்தது. ஆனாலும் போட்டி ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு விழாவை மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

இறுதிநாள் நிகழ்விலும், பரிசளிப்பு வைபவத்திலும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா, விளையாட்டு அபிவிருத்தி  திணைக்கள பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல, விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகர் சுசந்திக்கா ஜெயசிங்க, பதுளை மாநகர சபை மேயர் பிரியந்த அமரசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

போட்டிகளின் முதல் நாள் காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் 3.30மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தைப்   பெற்று சாதனை படைத்தார் , இவர் தேசிய விளையாட் டு விழாவில்  பெறும் 3 ஆவது  தங்கப் பதக்கம் இதுவாகும்.

மாத்தறை கொடவில மைதானத்தில் 2017ம் ஆண்டு நடை பெற்ற 43 ஆவது தேசிய விளையாட் டு விழாவில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார்.அதே போன்று 2016 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணதில் நடை பெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் 3.41 மீற்றார் உயரம் பாய்ந்து தங்கப்  பதக்கம் பெற்றிறிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாணத்தின் என்.ஐ.உதேனி சில்வா 3.10 மீற்றர் உயரம்  தாவி பெற்றுக்கொன்டார்,  வெண்கல பதக்கத்தை அதே மாகாணத்தை சேர்ந்த கே.எல்.எஸ்.கே. பெரேரா 3.00 மீற்றர் உயரம் தாவி பெற்றுக் கொண்டார்.

 

பெண்களுக்கான குண்டு  போடுதல்

 

தங்கப் பதக்கம்  எம்.என்.டி.முத்து நாயக்க -மத்திய மாகாணம் (12.19m)

வெள்ளிப் பதக்கம்  பி.ஏ.பிரியங்கிகா குமாரி – தென் மாகாணம்  (12.08M)

வெண்கலப் பதக்கம்  பி.பி.எஸ்.கிளறன்ஸ் _  ஊவா  மாகாணம் (11.37).

 

பெண்களுக்கான  400 மீற்றர்  தடை தாண்டல் ஓட்டம்

 

தங்கப் பதக்கம் ஜீ. ஏ.  சாமர துலானி _  தென் மாகாணம்

வெள்ளிப் பதக்கம் டீ. ஜி. என். டி விக்கிரம சிங்க –  வட மேல் மாகாணம்

வெண்கலப் பதக்கம் என். டி. ஜி. என்  லக்மாலி –  தென் மாகாணம்.

 

ஆண்களுக்கான 400 மீற்றர்  தடை  தாண்டல்  ஓட்டம்

 

தங்கப் பதக்கம் ஏ. எல். ஏ. ஐ. ரத்மசேன – சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப் பதக்கம்  ஏ. எல்.ஏ. ஐ. ரத்னசேன – சப்ரகமுவ  மாகாணம்,

வெண்கலப் பதக்கம்

கே. ஏ. ஆர். மதுசன் –  தென் மாகாணம்

 

ஆண்களுக்கான  பரிதி வட்டம்  எறிதல்

கிழக்கு மாகாணத்தின் செட். டீ. எம். ஆஸீக் பரிதுவட்டத்தில் 43.59 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் பெற்று தேசிய விளையாட்டு விழாவில் ஹெட்றிக் சாதனையை ஏற்படுத்தினார். இவர் 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும், 2017 ஆம் ஆண்டு மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் இடம்பெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும் பரிது வட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு பொலனறுவை விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்ற 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பரிது வட்டத்தில் செட். டீ. எம். ஆஸீக் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். இதன்மூலம் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் பரிது வட்டத்தில் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்ற கிழக்கு மாகாண வீரராக சாதனையை ஏற்படுத்தினார்.

 

தங்கப் பதக்கம் செட். டீ. எம். ஆஸீக் –  கிழக்கு மாகாணம்

வெள்ளிப் பதக்கம் ஆர். எம். எஸ் நிரோசன – சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப் பதக்கம் எச். எம். பி. ஜி. டி. பி. ரத்நாயக்க –  மத்திய மாகாணம்

 

ஆண்களுக்கான 10000 மீற்றர்  ஓட்டம்

 

தங்கப் பதக்கம் ஆர். எம். புஸ்ப குமார _ மேல் மாகாணம்

வெள்ளிப் பதக்கம்  கே. சண்முகேஸ்வரன் – மத்திய  மாகாணம்

வெண்கலப் பதக்கம் டபில்யு. வீ. எம். உபுல் குமார – ஊவா  மாகாணம்.

 

பெண்களுக்கான 200 மீற்றர்  ஓட்டம்

 

தங்கப் பதக்கம் அமேஷ டி  சில் வா – மத்திய மாகாணம்

வெள்ளிப்  பதக்கம் எஸ். எச். ஹெண்டர்சன் –  மேல் மாகாணம்

வெண்கலப் பதக்கம் எப். எஸ். யாமிக் – மத்திய மாகாணம்

 

ஆண்ளுக்கான  200  மீற்றர் ஓட்டம்

 

தங்கப் பதக்கம் கே. எஸ். எல்.விக்கிரமசிங்க – சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப் பதக்கம்   பி. ஏ. சி. சி.  குமார _ வடமத்திய மாகாணம்

வெண்கலப் பதக்கம் எம். ஜி. டி. டி. எம். சில்வா – மத்திய மாகாணம்

 

ஆண்களுக்கான நீளம் பாய்தல்

 

தங்கப் பதக்கம் ஜெ. எச். ஜி. சம்பத் -ஊவா மாகாணம்

வெள்ளிப்  பதக்கம் டபிள்யு. ஏ. அமில ஜெயசிறி – வடமேல் மாகாணம்

வெண்கலப் பதக்கம் கே. கே. எம். கே. கருணாசேகர – வடமேல் மாகாணம்

 

ஆண்களுக்கான  உயரம் பாய்தல்  நிகழ்ச்சி

 

தங்கப் பதக்கம்  யு. திவங்க  பெரேரா  மேல் மாகாணம்

வெள்ளிப் பதக்கம்  கே. சி. எல். மெண்டிஸ் _  தென் மாகாணம்

வெண்கலப் பதக்கம் பி. எஸ். தாருக்க  பெர்னாண்டோ _  வட மேல் மாகாணம்

 

பெண்களுக்கான நீளம் பாய்தல்

 

 

தங்கப் பதக்கம் அஞ்சனி புலவன்ச – மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – டபிள்யு.பி எல். சுகந்தி – மேல் மாகாணம்

வெண்கலப் பதக்கம் எஸ். எச் ஹெண்டர்சன் –  மேல் மாகாணம்

 

ஆண்ளுக்கான 800 மீற்றர்  ஓட்டம்

 

தங்கப் பதக்கம் ஜி. ஆர். சதுரங்க -சப்ரகமுவ  மாகாணம்

வெள்ளிப் பதக்கம் சி. அரவிந்தன் – ஊவா  மாகாணம்

வெண்கலப்  பதக்கம்  பி. ஆர். எஸ். டி. புளுகாபிடிய – மத்திய மாகாணம்

 

பெண்களுக்கான 800மீற்றர்  ஓட்டம்

 

தங்கப் பதக்கம் கே. ஜி. டி.எம். எஸ். குமாரசிங்க –  மத்திய  மாகாணம்

வெள்ளிப் பதக்கம் டபில்யு .பி. இ. ஆர். திலக்சி – சப்ரகமுவ  மாகாணம்

வெண்கலப் பதக்கம்  என். எம். சி. டில்ருக்சி – வட மேல் மாகாணம்

 

ஆண்களுக்கான   சம்மட்டி எறிதல்

 

தங்கப் பதக்கம் எம். டி. ஆர். சீசிர  குமார _  தென் மாகாணம்

வெள்ளிப் பதக்கம்  கே. கே டி. எம். தர்மசேன –  சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப் பதக்கம்.  டபில்யு. ஜி. ஸ்.ஆர்  குமாரசிரி – வட மத்திய மாகாணம்

 

ஆண்களுக்கான  கோலுன்றிப்  பாய்தல்

 

தங்கப் பதக்கம்  எரங்க  ஜனித் -மேல் மாகாணம்

வெள்ளிப் பதக்கம் ஏ. புவிதரன் –  வட மாகாணம்

வெண்கலப் பதக்கம் என். ஜி. சமரசிங்க –  வட மத்திய மாகாணம்

 

ஆண்களுக்காண  4×100 மீற்றர்  அஞ்சலோட்டம்

 

தங்கப் பதக்கம் சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப் பதக்கம் கிழக்கு மாகாணம

வெண்கலப் பதக்கம் – மேல் மாகாணம்

 

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டம்

 

தங்கப் பதக்கம்  எச். எம். என். எம். நந்தசேன –  கிழக்கு மாகாணம்

வெள்ளிப் பதக்கம்  ஏ. என். எல். ஆரியதாச – சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப் பதக்கம்  என். எம். பி. என். குமாரி – மத்திய மாகாணம்

 

பெண்களுக்கான 10000 மீற்றர் ஒட்டம்

 

தங்கப் பதக்கம் .எம்.என்.எம்.நந்தசேன – கிழக்கு மாகாணம்

வெள்ளிப்பதக்கம் ஏ.என்.எல்.ஆரியதாஸ – சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப் பதக்கம் – எல்.எச்.சாமலி அனுஸா – ஊவா மாகாணம்

 

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஒட்டம்

 

தங்கப் பதக்கம்  ஜீ.எம்.எஸ்.ஆர்.விஜேவிக்ரம _ சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப்பதக்கம் _ உபுல் குமார _ ஊவா மாகாணம்

வெண்கலப் பதக்கம் – ஆர்.எம்.எஸ்.புஸ்பகுமார – மேல் மாகாணம்

 

பெண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டம்

 

தங்கப் பதக்கம் – மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – தென் மாகாணம்

வெண்கலப் பதக்கம் – மத்திய மாகாணம்

 

ஆண்களுக்கான குண்டு போடுதல்

 

தங்கப்பதக்கம் – டபிள்யு.எஸ்.எம்.பெர்னாண்டோ – மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – ஆர்.சமித்த ஜெயவர்த்தன -வடமேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – ஏ.ஐ.டி.பெரேரா -மேல் மாகாணம்

 

பெண்களுக்கான முப்பாய்ச்சல்

 

தங்கப்பதக்கம் –  பீ.எம்.ஹாஸினி பிரபோதா -வடமேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – கே.ஏ.டி.லக்ஸானி – வடமேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – ஜீ.ஆர்.எஸ்.பி.கருணாநாயக்க -சப்ரகமுவ மாகாணம்

 

ஆண்களுக்கான முப்பாய்ச்சல்

 

தங்கப்பதக்கம் – எம்.என்.சப்ரின் அஹமட் – தென்மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – ஐ.டி.எஸ்.எஸ்.ஜெயசிங்க -சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப்பதக்கம் -எல்.டபிள்யு.சி.குமாரசிறி -மேல் மாகாணம்

 

பெண்களுக்கான ஈட்டி எறிதல்

 

தங்கப்பதக்கம். – எச்.எல்.என்.டி.லீகமகி -சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – எச்.பி.டி.எச்.மதுவந்தி -ஊவா மாகாணம்

வெண்கலப்பதக்கம் – எச்.ஏ.வீ.எல்.கே.கப்புஆராச்சி -சப்ரகமுவ மாகாணம்

 

பெண்களுக்கான சம்மட்டி எறிதல்

 

தங்கப்பதக்கம் – ஏ.டபிள்யு.ஏ.எஸ்.எம்.அமரசிங்க – தென் மாகாணம்.

வெள்ளிப்பதக்கம் – எச்.ஏ.ஏ.ஏ.லக்ஸிகா – மேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – எஸ்.என்.ரத்னசிறி -சப்ரகமுவ மாகாணம்.

 

பெண்களுக்கான உயரம் பாய்தல்

 

தங்கப்பதக்கம் – துலாஞ்சலி கே.ரணசிங்க -மேல் மாகாணம்.

வெள்ளிப்பதக்கம் – எஸ்.எம்.முடித்த மதுசானி – வடமேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – டி.கே.வீ.எஸ். அபேயரத்ன -சப்ரகமுவ மாகாணம்

 

ஆண்களுக்கான ஈட்டி எறிதல்

 

தங்கப்பதக்கம் – டி.எஸ்.ரணசிங்க – தென்மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – ஆர்.என்.குமார – வடமத்திய மாகாணம்

வெண்கலப்பதக்கம் – டபிள்யு.பீ.ஆர்.எம்.பெர்னாண்டோ – வடமேல் மாகாணம்.

 

பெண்களுக்கான 100 மீற்றர்   தடைதாண்டல் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – டபிள்யு.வீ.எல்.சுகந்தி – மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – ஆர்.ஏ.இரிசானி ராஜசிங்க – வடமேல் மாகாணம்.

வெண்கலப்பதக்கம் -டபிள்யு.ஏஸ்.எஸ்.அனுத்தாரா

 

ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – ஆர்.ஆர்.டி.ரணதுங்க – சப்ரகமுவ மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – கே.டபிள்யு.எஸ்.ரன்தீவ – மேல்மாகாணம்

வெண்கலப்பதக்கம் – டபிள்யு.எம்.யு.குமார – சப்ரகமுவ மாகாணம்

 

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – கே.ஜீ..டி.எம்.எஸ்.குமாரசிங்க – மத்திய மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – எம்.ஓ.உதயாங்கனி – ஊவா மாகாணம்

வெண்கலப்பதக்கம் – ஜீ.ஏ.சயாமா துலானி – தென்மாகாணம்.

 

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – ஏ.எம்.எல்.பி.குணரத்ன -ஊவா மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – ஆர்.எம்.ராஜகருண – மேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – வை.எம்.டபிள்யு.ஜீ.எஸ்.டி. குணரத்ன

 

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – என்.எம்.சி.டில்றுக்ஸி – வடமேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – டபிள்யு.எம்.பி.என்.குமாரி – மத்திய மாகாணம்

வெண்கலப்பதக்கம் – டபிள்யு.பி.ஆர்.துலாக்ஸி – தென்மாகாணம்

 

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – ஜீ.ஆர்.சத்துரங்க – தென் மாகாணம்.

வெள்ளிப்பதக்கம் – எச்.எம்.ஈ.யு.பி.ஹேரத் -தென்மாகாணம்

வெண்கலப்பதக்கம் – ஆர்.ஏ.எஸ்.லக்மால்

 

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – அமேசா டி சில்வா – தென் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – டபிள்யு.வீ.எல். சுகந்தி – மேல் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – எஸ்.எச்.ஹென்டர்சன் – மேல் மாகாணம்

 

ஆண்களுக்கான 100 மீற்றர் ஒட்டம்

 

தங்கப்பதக்கம் – கே.எஸ்.எல்.விக்ரமசிங்க -தென் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – வை.சீ.எம்.யோதசிங்க – சப்ரகமுவ மாகாணம்

வெண்கலப்பதக்கம் – எப்.ஏ.சி.எல்.குமார -வடமத்திய மாகாணம்

 

பெண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – வடமேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – தென் மாகாணம்

வெண்கலப்பதக்கம் – மேல் மாகாணம்

 

ஆண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டம்

 

தங்கப்பதக்கம் – மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் – மத்திய மாகாணம்

வெண்கலப்பதக்கம் – ஊவா மாகாணம்

 

ஆகியோர்  நடை பெற்று முடிந்த போட்களில் வெற்றி பெற்று பதக்கங்களை சுவிகரித்துள்ளனர்.

 

 

 

மேலும் நேற்றிரவு   இடம் பெற்ற உதைபந்தாட்ட  இறுதிப் போட்டியில்   வட  மாகாணம் முதல் தடவையாக  தங்கப்  பதக்கத்தை  வென்றெடுத்தது.

 

தென் மாகாணத்துடன் இடம் பெற்ற  இறுதிப் போட்டியிலேயே  வட மாகாணம் 4-0 என்ற  கோல்கள் அடிப்படையில் வெற்றி    பெற்று தாங்கப்  பதக்கத்தை பெற்றுக் கொண்டது

 

இதில்  வெள்ளிப் பதக்கத்தை  தென் மாகாணமும் வெண்கலப் பதக்கத்தை  சப்ரகமுவ  மாகானமும்  பெற்றுக் கொண்டது.

 

இதில் எஸ். ஜானரூபன் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கிண்ணமும் 20000 ரூபா பணப் பரிசும்    வழங்கி வைக்கப்பட்டது.

 

45 வருட தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் வட மாகாணம் உதைபந்தாட்டத்தில் முதலாவது தங்கப்  பதக்கத்தை பெற்றுக் கொண்டமை குறியிடத்தக்கதாகும்.

 

பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வட மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும்,    மேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.

Tags :
comments