“பிரதமர் பதவியிலிருந்து, ரணில் நீக்கப்படுவார்”

  • November 1, 2019
  • 339
  • Aroos Samsudeen
“பிரதமர் பதவியிலிருந்து, ரணில் நீக்கப்படுவார்”
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவி த்தார்.
வட கொழும்பு தேர்தல் தொகுதியின் மக்கள் ஐக்கிய முன்னணி இளைஞர் அமைப்பின் தலைவர் நிஸ்புல் பிரசன்ன தலைமையில் ^இரவு கிராண்ட்பாஸில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் பிரசார கூட்டத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
லங்கா பொதுஜன பெரமுனவுடன் பல கட்சிகள் இணைந்திருப்பது எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத் திறமையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என்பதனாலேயாகும். இதன் காரணமாகவே தொழிலாளர் காங்கிரஸும் எம்முடன் கைகோர்த்துள்ளது.
எமது வெற்றி உறுதியானது, நவம்பர் 17ஆம் திகதி அரசியல் புரட்சி ஏற்படும். இந்நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்வார்.
Tags :
comments