அதாஉல்லாவின் பிரச்சாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்

  • November 8, 2019
  • 237
  • Aroos Samsudeen
அதாஉல்லாவின் பிரச்சாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரஸ் கட்சியினால் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் மீது சிலர் கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசி தாக்குதல்களையும்  நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை உருவானது.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா குறித்த கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு சிலர் கூச்சலிட்டதோடு, கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனால், அங்கு பதட்டமாதொரு சூழ்நிலை உருவானது. ஆயினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எவ்வாறாயினும், இதன்போது அங்கிருந்த அதாஉல்லா தரப்பினரின் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரே இக்காடைத்தனத்தை செய்ததாக அதாஉல்லா தரப்பினர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Tags :
comments