அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவாக முடியாதென்பதால், அவருக்கு வாக்களிப்பதில் பிரயோசனம் இல்லை

  • November 10, 2019
  • 183
  • Aroos Samsudeen
அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவாக முடியாதென்பதால், அவருக்கு வாக்களிப்பதில் பிரயோசனம் இல்லை
தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய, எதிர்வரும் 16ஆம் திகதி தானும் தனது வாக்கை அவருக்கு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டில் 4 முதல் இலட்சம் வாக்குகள் இருக்கின்றன. இளைஞர்கள், இவர்களும் வேண்டாம் அவர்களும் வேண்டாம் என நினைத்து மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்தால், நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் அவர்களின் வாக்கு ஆற்றில் வீசிய அரிசி போல் ஆகிவிடும்.
நாட்டுக்கும், மதத்திற்கும், இனத்திற்கு அந்த வாக்குகள் பெறுமதியாக இருக்காது. அநுரகுமாரவின் பேச்சுகளை நானும் விரும்புகிறேன். நோக்கம், கொள்கை என்பது சிறந்தவை.
நவம்பர் 16ஆம் திகதி சிறந்த பேச்சுக்கு வாக்களிக்கும் தினமல்ல. நாங்கள் நாட்டின் தலைவரை தெரிவு செய்ய போகிறோம். நவம்பர் 16ஆம் திகதி அநுரகுமார ஜனாதிபதி தெரிவாக முடியுமாயின் நானும் அவருக்கு உதவி செய்வேன்.
ஜனாதிபதியாக தெரிவானால், அவர் கூறுவதை செய்ய முடியும். ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என்றால், நாம் அளிக்கும் வாக்குகளில் பிரயோசனம் இல்லை என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments