ஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை!

  • November 21, 2019
  • 511
  • Aroos Samsudeen
ஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை!

ஜக்கிய தேசியக் கட்சியின் கெபினட் அமைச்சர்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தொகுதியான மன்னார் மட்டுமே வெற்றி.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகியன.

பிரதமர் ரணில் , செல்வாக்குமிக்க சிரேஷ்ட அமைச்சர்கள், தற்போது பெரிய கதையளக்கும் மனோ கணேசன் உட்பட அனைவரது தொகுதிகளும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் படு தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வன்னி உட்பட கிழக்கின் முஸ்லிம் தொகுதிகளில் சஜித் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

காரணம் – முஸ்லிம் சமூகம் அவர் மீது வைத்த நம்பிக்கை ஆகும்.

( ஏ எச் எம் பூமுதீன் )

Tags :
comments