கட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் – பைசர் முஸ்தபா

  • November 22, 2019
  • 662
  • Aroos Samsudeen
கட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் – பைசர் முஸ்தபா

(எஸ்.எம்.அறூஸ்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு தான் விட்டுக்கொடுப்புச் செய்துள்ளதுடன் நாட்டினதும், சமூகத்தினதும் நலன்கருதி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு இடமளிக்கப்படாத விடயம் குறித்து களம் பெஸ்டுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பைசர் முஸ்தபா மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இரண்டு அமைச்சுப்பதவிகளே கிடைத்திருக்கின்றது.

கட்சியில் அமைச்சுப் பதவியைப் பெறக்கூடிய சிரேஸ்டமானவர்கள் பலரும் இருக்கத்தக்க நிலையில் நான் அமைச்சுப் பதவியைப் பெறாமல் இருக்க முடிவு செய்து அதனை விட்டுக்கொடுத்துள்ளேன்.

நாட்டினதும், சமூகத்தினதும் நலன் கருதி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி செயற்படவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான பைசர் முஸ்தபா முன்னர் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக  மிகச்சிறப்பாகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Tags :
comments