(எம்.கே.எம்.நியார் – பதுளை)
பது /அல் அதான் ம.வி க.பொ (உ/தர) கலைப்பிரிவில் கல்வி கற்கும் மொஹமட் சாfபிர் இந்தோனேசியாவில் நடைபெறும் 47வது ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளராக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டு 14.11.2019 ஆம் திகதி இலங்கை அணியுடன் இந்தோனேசியாவிற்கு பயணமானார்.
இவர் பதுளை, பதுளுபிடிய , முஹமது சுல்பான் மற்றும், சுலைஹா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வர் ஆவார். பாடசாலைக்கு பெறுமை ஈட்டிக்கொடுத்த இவருக்கு அதிபர். . ஆசிரியர்கள், பா.அபி.ச, பழைய மாணவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
பது /அல் அதான் ம.வித்தியாலயம் உதைபந்தாட்டத்தில் தேசிய ரீதியில் பல சாதனைகளைப் படைத்த கல்லூரி என்பதுடன் இலங்கை தேசிய அணிக்கு பல முன்னணி வீரா்களை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.