கல்முனையில் “எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு”

  • November 30, 2019
  • 220
  • Aroos Samsudeen
கல்முனையில் “எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு”
(முகம்மட் அப்ராஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு எச்.ஐ. வி எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் ஊடகங்கள் மூலம் தெளிவூட்டும் “எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு” அண்மையில்

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இதன் போது எய்ட்ஸ் நோய் என்றால் என்ன? ஆரம்பத்தில் எச்.ஐ. வி .நோய் எவ்வாறு தொற்று ஏற்ப்படும் வழிகள் ,எச்.ஐ. வி பரவும் முறைகள் இதனை கட்டுப்படுத்தும் முறைகள், எச்.ஐ வி. நோய்க்கு உள்ளானவர்ககளுக்கான சிகிச்சை முறைகள் பற்றி துறை சார்ந்த வைத்தியர்களால் தெளிவூட்டப்பட்டதுடன் கலந்துரையாடலும் மேற்க்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இவ் பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில்
இவ் நோய் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு ,ஆலோசனைகள் ஆகிய வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதன் போது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் ,தேசிய பாலுறவு நோய்கள் கட்டுப்பாட்டு சமூக நோய் பிரிவு வைத்திய நிபுணர் சந்தியா ஹேரத்
மற்றும் கல்முனை பிராந்திய பாலுறவு நோய்கள் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்.பி.என்.ஜீவனி ,பாலுறவு நோய் பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
comments