தன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய

  • December 1, 2019
  • 405
  • Aroos Samsudeen
தன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய
இராணுவத்தின் பணிக்குழாம் அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே முகாமில் பயிற்சி பெற்ற இரண்டு நண்பர்கள் அரசியல் நண்பர்களாக நேற்று மீண்டும் சந்தித்தனர்.
இது அரசியல் விடயங்கள் பற்றி பேசுவதற்கான சந்திப்பல்ல. ஒருவர் இன்று இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். மற்றையவர் இந்தியாவின் பொதுப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி ஜெனரல் வி.கே.சிங் ஆவார். இந்த சந்திப்பில், அவர்கள் இருவருடனும் பயிற்சி பெற்ற, இன்று ஓய்வு பெற்றிருக்கும் மேலும் 15 இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இது கடந்தகால நினைவுகளை மீட்டுகின்ற மிகவும் சுமுகமான சந்திப்பாக அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அமைதிகாக்கும் படையின் அதிகாரிகளாக இலங்கையில் சேவையில் ஈடுபட்டவர்களாவர். அந்தக் கடந்தகால நினைவுகள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள் இந்தக் கலந்துரையாடலில் உள்ளடங்கி இருந்தது. அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த புதிய நண்பர்களாக கடந்த காலத்தில் பிரிந்து சென்றனர்.
கடந்த கால நட்பினூடாக இரண்டு நாடுகளினதும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பாரிய அரண் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருப்பது இதில் முக்கியமான விடயமாகும்.
Tags :
comments