முஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் – மின்னல் ரங்காவும் இணைவு

  • December 3, 2019
  • 283
  • Aroos Samsudeen
முஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் – மின்னல் ரங்காவும் இணைவு
சுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது.
அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி பழைய காயங்களை தோண்டுவதோடு அதனோடு சேர்த்து முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரது படத்தையும் இணைத்து இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்ற கேள்வியை அந்த காணொளி எழுப்பி நிற்கிறது.
இந்த தாக்குதல் இலங்கை அரசியல் பரப்பை புரட்டிப்போட்ட பெருஞ்சுனாமியாகும்.
அதன் அதிர்வலைகளை தொடர்ந்தும் பேணிய பெருமை பல தனியார் ஊடகங்களை சாரும்.
பொதுத்தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பித்திருக்கும் இனவாத பரப்புரையின் இரண்டாம் பகுதியில் சுவர்ணவாஹினி முழு வீச்சுடன் இணைந்துள்ளதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?
அதாவுல்லாஹ் சக்தி மின்னல் நிகழ்ச்சியில் ஒருவரின் பெயரைச்சொல்லி தேடினாரல்லவா…
அந்த ஆசாமி இப்போது சுவர்ணவாஹினிக்கு தாவியுள்ளார்.
அங்கிருந்து தனது புதிய இனிங்ஸை தனக்கேயுரிய நரித்தனத்துடன் ஆரம்பித்துள்ளார்.
சுவர்ணவாஹினி ஊடக குழுமத்தை புதிதாக உரிமையாக்கியுள்ள லைக்கா சுபாஸ்கரன் இனவெறுப்பு பிரச்சாரம் தொடர்பில் கவனம் கொள்வாரா?
லண்டனில் நிலை கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் / அமைப்புகள் இது தொடர்பில் சுபாஸ்கரனை ஒரு முறை கண்டு பேசுங்கள்.
Mujeeb Ibrahim
Tags :
comments