அடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள – தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர்

  • December 5, 2019
  • 295
  • Aroos Samsudeen
அடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள – தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர்
நாட்டின் தலைவர்கள் சரியானவற்றை செய்ய முயற்சிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பழங்குடி மனநிலை கொண்ட சில தலைவர்களும், சில காவிதாரிகளும் நாட்டை பின்நோக்கி இழுத்தனர் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகவும் கவலையான நிலைமைக்கு, 1948 நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்யாத அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். நாட்டின் மத தலைவர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
இலங்கை பௌத்த சிங்கள நாடு அல்ல என மீண்டும் கூறுவதாகவும், வறுமை காரணமாக சிறிய வயதில் துறவறம் பூணப்படும் காவிதாரிகளுக்கு வயது வந்த பின்னர் பௌத்த தர்மம் பற்றி உண்மையான அக்கறை இருக்காது.
சில அடிப்படைவாத காவிதாரிகள், அறிவு குறைந்த அடிப்படைவாத சிங்கள மற்றும் தமிழர்களை இணைந்துக்கொண்டு சிங்கள – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments