ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் – மைத்திரி

  • December 11, 2019
  • 175
  • Aroos Samsudeen
ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் – மைத்திரி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக கோட்டாபய முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் தனியாக முடியாதென மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட விசேட வெற்றி குறித்து அனைவரும் வாழ்த்து தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments