இந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் – ஜாமியா இஸ்லாமி கல்லூரி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

  • December 16, 2019
  • 194
  • Aroos Samsudeen
இந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் – ஜாமியா இஸ்லாமி கல்லூரி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்
குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக போராடி வந்த டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்களை டெல்லி காவல்துறை மிக கடுமையாக தாக்கியுள்ளது.
கல்லூரி வளாகங்களிலும், கழிவறையில் வைத்து தாக்கியதும், விளக்குகளை அனைத்து இருட்டில் வைத்து தாக்குவதும் ஜனநாயக முறையில் போராடிய மாணவர்களை, அதிலும் பெண் மாணவர்களை தாக்கியது என்பது கண்டனத்துக்குறியது.
மூன்று மாணவர்கள் இறந்ததாக வரும் தகவல் வருத்தம் அளிக்கின்றது.   மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித் தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறையும், அதை ஏவிய பாஜக அரசும் இதற்கு முழு பொருப்பு.
சொந்த மக்களை துண்புறுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பல ஆட்சியாளர்கள் அழிந்து போன வரலாறுகள் ஏறாலம்.
பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது, இறைவனின் அருளால்மக்கள் அதை வேரோடு அகற்றுவார்கள்.
அடக்குமுறைகளும், சர்வாதிகாரமும் மக்களை ஒரு விடுதலை புரட்சிக்கு வித்திடும்.
Tags :
comments